Tuesday, April 18, 2017

பகவானின் அனுபவம்

பகவானின் அனுபவம்

வித்யாலயாவின் 20ம் ஆண்டு விழா மலரில் வெளிவந்த கட்டுரை
கன்னட மூலம்: திருமதி. மமதா
தமிழில்: திருமதி. சுமதி ராவ்

***

"சத்திய ஜககிது பஞ்ச பேதவு நித்ய ஶ்ரீகோவிந்தன" என்பது போல இந்த உலகம் முழுவதும் உண்மை மற்றும் எல்லா உயிருள்ள மற்றும் ஐடப்பொருட்களிலிருந்து வேறுபட்டவன் பரமாத்மா. இந்த உலகத்தின் படைத்தல், காத்தல், அழித்தல் மூன்றையும் பரமாத்மா லக்ஷ்மியுடன் கூடி செய்கிறான். அத்தனை ஜீவராசிகளுக்கும் அவரவர் யோக்யதைக்கேற்ற நிலையை தருவதற்காகவே இந்த படைத்தல் முதலான காரியத்தை செய்கிறான். அப்படியென்றால் பரமாத்மாவுக்கு இதனால் என்ன லாபம் ? இது பரமாத்மாவின் லீலை மற்றும் அவன் கருணையே. வேதங்கள் புகழுகிற பரமாத்மாவுக்கு சோர்வு , லாப நஷ்டங்கள், சுக துக்கங்கள் கிடையாது.

"மளல மனெகள மாடி மக்களு
கெலவு காலதலாடி மோததி
துளிது கெடிசுவ தெரதி
லக்ஷ்மி ரமண லோககள"

குழந்தைகள் மணல் வீடு கட்டி விளையாடி பிறகு அதை மிதித்து உடைப்பது போல் பரமாத்மா லோகத்தை படைத்து அழிக்கிறான் . அப்படியென்றால் இந்த பரமாத்மா எங்கு இருக்கிறான்? எப்படி இருக்கிறான்? அவனை அறிந்துக்கொள்வதுதான் எப்படி? என்றால் அவன் இல்லாத இடமே இல்லை. இவனை சொல்லாத வார்த்தைகளே இல்லை, அணுவில் அணுவாக, பிரம்மாண்டத்தில் பிரம்மாண்டமாக இருக்கிறான் . எல்லா விதத்திலும் முழுமையானவனாக இருக்கிறான் . அவனை பகவத் அனுபவத்தின் மூலமாகத்தான் அறிந்து கொள்ள முடியும்.

லவண மிஷ்ரித ஜலவு தோர்புது
லவனதொபாதியலி ஜிஹ்வெகெ
விவரகைஸலு ஷக்யவாகுவுதேனோ
நோள்பரிகே

உப்பு கலந்த நீரை ருசித்தால் மட்டும்தான் அதில் உப்பு இருப்பது தெரியும். பார்ப்பதால் மட்டும் வெறும் நீரா அல்லது உப்பு கலந்த நீரா என்று தெரிந்து கொள்ள முடியாது. அவ்வாறே பரமாத்மாவை அனுபவத்தில்தான் அறிந்துக்கொள்ள முடியும்.

கரும்பை கடித்து சுவைத்தால்தான் அதன் இனிமை தெரியுமே தவிர அது பார்ப்பதற்கு வெறும் கட்டையைப் போலத்தான் இருக்கும். அப்படியென்றால் பகவத் அனுபவத்தை அடையும் வழியென்ன? அதனால் ஜீவனுக்கு என்ன லாபம்?

பரமாத்மாவை வேதங்களின், உபநிஷத்தின் மூலமாக , புராண புண்ய கதைகளை கேட்பதன் மூலமாக, ஹரிதாஸ கீர்த்தனைகளை பாடி புகழ்வதன் மூலமாக, ஒழுக்கமான வாழ்க்கை மற்றும் குருகளின், பெரியவர்களின் சேவையின் மூலமாக அடையலாம். அனைத்து வார்த்தையின் பொருள் அவனே என்று அறிந்தவன் பேசும் பேச்சே அவன் மந்திரமாகும். பரமாத்மாவை நினைத்த கணமே பண்டிகையாகும். அவனின் சேவை என்று நினைத்து செய்யும் எல்லா வேலையும் பூஜைதான். அவனை நினைத்த இடமே புண்ணிய க்‌ஷேத்திரம். இவ்வாறு எந்த ஜீவன் தான் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் பரமாத்மாவை அனுசந்தானம் செய்கிறானோ, அப்படிப்பட்டவனுக்கு ஆயிரமாயிரம் ஜன்மங்களின் சாதனைக்கு பிறகு கருணா சாகரனான பரமாத்மா அபரோக்ஷ ஞானத்தை வழங்கி இந்த பிறப்பு இறப்பு என்னும் சக்கரத்தில் இருந்து விடுவித்து மோக்ஷம் என்னும் ஆனந்தத்தை அளிக்கிறான்.

கலியுகத்தில் சிறு சாதனைக்கு கூட மகத்தான புண்ணியம் கிட்டும். "மானவ ஐன்ம தொட்டது" என்று சொன்னதைப்போல் எல்லோரும் நல்வழியில் நடந்து, பக்தியால் பகவத் சாதனை செய்து, பரமாத்மாவின் அருளை பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

Haridasa Sahitya Mahavidyalaya and Research Center தங்களின் 20வது ஆண்டு விழாவை 3.7.2016 அன்று கொண்டாடுகிறார்கள் . எல்லா மாணவர்களுக்கும் நல்லது நடக்கட்டும் என வேண்டுகிறேன்.

***

No comments:

Post a Comment