Monday, July 9, 2018

25/360 எதையும் எதிர்பாராமல் உதவி செய்பவர் ஸ்ரீஹரி

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்




ஜ்யேஷ்ட பகுள ஏகாதசி


25/360 எதையும் எதிர்பாராமல் உதவி செய்பவர் ஸ்ரீஹரி

ஸ்ரீகோபாலதாசரின் மூன்று தம்பிகளும், அண்ணனை வணங்கி அவரிடமிருந்தே தீக்‌ஷை ஸ்வீகரித்து, அதே தாச விருத்தியை வளர்த்தனர். இது உலகத்திற்கு ஒரு வழிகாட்டும் வரலாறு ஆகும். இம்மூவரும் கிருதிகளை இயற்றியது இன்னொரு விசேஷம். மூவரில் மூத்தவரே குருகோபாலதாசர். அவரது ஒரு உகாபோகம்.

கஜராஜன பொரெதுதேனு கனவு
கஜபுரத த்ரௌபதிய பொரதுதேனு கனவு
பஜகப்ரஹ்லாதனு பொரெததேனு ஆஸ்சர்ய
அஜமிளன பொரதத்து பொரெதெ நின்னவரு
பஜனெ மாடிதுதக்கெ நீ பொரெதெ ஸரிஸாடி
அஜனய்ய நா நின்னவனெந்து ஒம்மெயாதரு சரி
பஜஸிதவ நானல்ல நீ என்ன பொரெதரெ
மஜபாவுரெ கீர்த்தி த்ரிஜகதொளகெ
வ்ருஜின ஹரி ஸ்ரீகுருகோபாலவிட்டல
சுஜனரித கண்டு சந்தோஷிசுவரோ || -- ஸ்ரீகுருகோபாலதாசர்

தன்னை எப்போதும் உபாசிப்பவர்களை ஸ்ரீஹரி காப்பான் என்று தாசர் பல உதாரணங்களை சொல்லியிருக்கிறார். இத்தகைய ஆபத்பாந்தவனான ஸ்ரீஹரி என்னைக் காப்பாற்றாமல் இருப்பானோ? என்று கேட்கிறார். தனது வேண்டுகோள்களை ஸ்ரீஹரியின் முன் வைத்துக் கேட்கிறார். இன்று அனைவரின் நிலையும் இதுவே. அபாரமஹிமனான, பக்தவத்ஸலனான ஸ்ரீஹரி தன் பக்தர்களிடமிருந்து எதையும் கேட்பதில்லை. ஸ்மரிசுவரபராதகள தா ஸ்மரிஸ சகலேஷ்ட ப்ரதாயகஎன்று ஜகன்னாததாசர், அவனை பக்தியுடன் நினைத்தால் போதும் என்கிறார். இத்தகைய பரமாத்மனை சம்ஸ்துதிகெ வஷனாகுவனிவன காருண்யகேனெம்பேஎன்று வர்ணித்து, அவனை பக்தியுடன் ஸ்தோத்திரம் செய்தால் காட்சியளிப்பான் என்கிறார்.

ஈ வித்ய அதிகௌப்ய இது அரிது பஜிசுவவ
கோவிதர சர்வ புருஷார்த்தகளனு
தேவ குருகோபாலவிட்டல ஒலிதீவ
காவனு சர்வத்ர தானு பிடதே || -- ஸ்ரீகுருகோபாலவிட்டலதாசர்

எந்த காலத்திலும் யாரிடமும் எதையும் வேண்டாமல், அனைத்தையும் கொடுத்து பிறகு இறுதியில் மோட்சத்தையும் கொடுத்து உதவுபவனே - அனிமித்த உபகாரி - எதையும் எதிர்பாராமல் உதவுபவன்.

பேடிதரெ என்னொடெயவன பேடுவேஎன்று புரந்தரதாசர் கூறியது உண்மையான பேச்சு. வேண்டத் தகாதவற்றை தாசர் வேண்டுவதில்லை. அதற்கொரு உதாரணம்.

நின்னல்லி தடவில்லதெ பகுதி கொட்டு
அன்ய ஸ்ரவண கேளதந்தெ கிவிகொட்டு
நின்ன மூருதி முன்ன மனதலி நிட்டு
நின்ன நாமவ என்ன நாலிகெயொளிட்டு
நின்ன பேடிதுதெல்ல நில்லதலெ கொட்டு
என்ன ரக்‌ஷிஸு வரதகோபாலவிட்டல
நின்ன நா பேடுவுதகேனு மரளெ
நின்னவர தாசனலி தயாமாடு ப்ரபுவே || -- ஸ்ரீவரதகோபாலவிட்டலதாசர்

தமது தேகத்தில் எல்லா இடங்களிலும் ஸ்ரீஹரி இருக்கவேண்டுமென்று, அந்தந்த உறுப்புகளின் வேலையை அவனுக்கு சமர்ப்பிக்குமாறு வேண்டினார். இன்னொரு கிருதியில் தமக்கும் ஸ்ரீஹரிக்கும் இருக்கும் வித்தியாசத்தைக் கூறி, உன்னையே சரணடைகிறேன் என்கிறார்.

ஹிதரொளகெ நின்னந்த ஹிதகரரு எனகில்லா
மதிஹீனரொளகெ சரி எனகில்லவோ
பதிதபாவன நீனு பதிதமனுஜனு நானு
ச்யுதிதூர வரதகோபாலவிட்டலரேய
அதிதயாபர நின்ன க்ருபெகெ எணெகாணே || -- ஸ்ரீவரதகோபாலவிட்டலதாசர்

ஆகையால் ஸ்ரீஹரி என்மேல் கருணை காட்டி, காப்பாற்ற வேண்டும் என்கிறார்.

மூடதாசனு நானு காடனல்லவோ நின்ன
பேடி காடிஹெனு
ஒடதலெ நிம்மய பேடண பந்தேனோ ||

ஏனென்றால் நீ என்னிடம் எதையும் வேண்டாமல் அனைத்தையும் கொடுக்கும் அனிமித்த உபகாரி.

***

Sunday, July 8, 2018

24/360 கடன் தீர்த்தல்


ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்




ஜ்யேஷ்ட பகுள தசமி


24/360 கடன் தீர்த்தல்

கடனைப் பற்றி பல பாடல்கள் பாடி, ஹரிதாசர்கள் சஜ்ஜனர்களின் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தனர். பிறப்பிலிருந்து இறப்புவரை அனைவரும் ஏதோ ஒரு கடனில் இருந்தே தீர்கிறோம். ஜீவர்களுக்கு மூன்று கடன்கள் உண்டு. ரிஷி ருண, தேவ ருண மற்றும் பித்ரு ருண. இவற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு தீர்க்கவேண்டும் என்கின்றனர். விஜயதாசர் சொல்வது இது.

ரிஷிகள ருண பூர்வாஸ்ரமதிந்த பரிஹார
த்ரிதஷர ருண மேதாதிகளு மாடே,
அனுசம்பந்திகள ருண க்ருஹஸ்தாஸ்ரமதல்லி
புஸியல்லி தித்தி ஹோகுவுது சித்த
வசுதெயொளகெ ஒந்து காசுகொட்டவன ருண
வசுதெயெல்லா திருகி போகதய்யா
பசுபால அவ்யயாத்ம விஜயவிட்டலரங்க
பசுரொளு பொகலிட்டு பேசசதெ பிடதய்யா || -- ஸ்ரீவிஜயதாசர்

ரிஷி ருண - ஞானத்தை சரியாகப் பெறுதல்; அடுத்தவருக்கு சொல்லிக் கொடுத்தல் இவற்றால் தீரும்.

தேவ ருண - யக்ஞ, யாகாதிகள் செய்து தேவதைகளை பூஜித்தால் தீரும்.

பித்ரு ருண - வம்சவிருத்தி, கிருஹஸ்த தர்மத்தை செய்தல், பெற்றோரை கவனித்தல் மற்றும் அவர்களின் இறுதிச்சடங்குகள் செய்வதால் தீரும்.

இந்த கடன்கள் அல்லாமல், வாழ்க்கையில் சேர்த்துக் கொண்ட கடன்கள் பல உள்ளன. தேகத்தைக் கொடுத்த மாத்ரு ருண, கல்வியைக் கற்றுத்தந்த குரு ருண, சமூகத்து ருண, உதவி செய்தவர் ருண என பலவித கடன்கள் உள்ளன. உடலால், சேவை, பிரதி உபகாரம், உதவி - என செய்து இந்த ருணங்களிலிருந்து விடுபடவேண்டும்.

வாழ்க்கையின் சாரம் என்பதுபோல ஸ்ரீவியாசராஜர் சொன்னது:

ஜனன மரண மார்கதல்லி தொளலி ஒளலி ஸ்வர்க
நரகக்கேரி மமதெயெம்ப பாரவ பொத்து
பளலி தாபத்ரய தாபதிம் பெந்தனெகெ
நக சந்த்ரிக கங்கா சேஷகரதிந்த தம்பாத
சிரிகிருஷ்ணன சரண நெளலு நெலெமனெயாயிது || -- ஸ்ரீவியாசராஜர்

யக்ஞ யாகாதிகள், கற்றல், கற்பித்தல், தானம் கொடுத்தல், பெறல் - இந்த ஆறு செயல்களால் பாகவத தர்மத்தைப் பின்பற்றினால் ருண விமோசனம் ஆகும் என்கின்றனர்.

***

Saturday, July 7, 2018

23/360 எனது தேகமும் உனக்காகவே

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்


ஜ்யேஷ்ட பகுள நவமி

23/360 எனது தேகமும் உனக்காகவே

சிர நின்ன சரணக்கெ எகருவந்தெ மாடோ
கர நின்ன பூஜெ விஸ்தரவாகி மாடலின்னா
சரிஸலு பாதகளு புண்யதேஷகளல்லி
ஹரினின்ன நாம உச்சரிசலு அனனவு
வரனாசிக கர்ணசிரி அரஸினெ நின்ன
வரகதெ நிர்மால்யகளு சவியலி அனுதின
பரம புருஷ மிக்க இருவ இந்திரியகளெல்ல
சரியதெ நின்ன சேவெயனு பொந்திரலய்ய
சரசிஜ தளனயன வேணுகோபாலவிட்டல
இருளு ஹகலு நின்னுச்சரிசுவந்தெ மாடோ || -- ஸ்ரீவேணுகோபாலவிட்டலா

ஸ்ரீஹரி கருணையுடன் அளித்த இந்த தேகம் அவனுடையதே. அவனுக்காகவே இந்த உடல் பயன்பட வேண்டும். இந்த உடல் வருவதற்கும், இருப்பதற்கும், அழிவதற்கும் என அனைத்திற்கும் ஸ்ரீஹரியே காரணம். அதற்காகவே தேனத்யக்தேன புஞ்சீதா:என்றார். தேகத்தில் இருக்கும் அனைத்து இந்திரியங்களும் ஸ்ரீஹரிக்காகவே என்று ஸ்ரீஸ்ரீபாதராஜர் கூறுகிறார்.

ஷிர நின்ன சரணக்கெரகலி சக்‌ஷு
எரகதிந்தலி நின்ன நோடலி ஹரியே
கரண கீதங்கள கேளலி நாஸிக
நிருமால்யனுதின க்ராணிசலி ஹரியே |
நாலிகெ நின்ன கொண்டாடலி என்ன
தோளு கரங்கள முகியலி ஹரியே
சித்த நின்னொளு முளுகாடலி நின்ன
பக்தஜனர சங்க தொரகலி ஹரியே
வ்ருத்தி தத்வ யோகாப்யாசக்காகலி ரங்க
விட்டல நின்ன தயவாகலி ஹரியே || --ஸ்ரீஸ்ரீபாதராஜர்

இதுவே ஆத்ம நிவேதனம் ஆகும். முதலில் நம் இந்திரியங்களினால் ஆகும் தோஷங்களை அறிந்து, அந்த இந்திரியங்கள் நற்பலனைப் பெறுவதற்கு, தாசர்கள் பாடல்களை அறிந்து பயன்பெறுவோமாக.

***

Friday, July 6, 2018

22/360 - நானல்ல; நீயே கடவுள்

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்


ஜ்யேஷ்ட பகுள அஷ்டமி

22/360 நானல்ல; நீயே கடவுள்

நானு நன்னது அந்து நானு நன்னது இந்து
நானு நன்னது தந்து நானு நன்னது ஒந்து
நானு நன்னது வஸ்த்ர நானெம்புது பிடதெ
நானிந்தலி கெச்சி நானெம்புது பிடிஸோ
நீனே விஜயவிட்டலரேயா || --ஸ்ரீவிஜயதாசர்

எனது என்று எதுவுமே இல்லை, நான் நினைப்பது என்றுமே நடப்பதில்லை - என்பதே மனிதனாகப் பிறந்து வந்த அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் நாம் நடப்பது வேறு வழியில். ஸ்ரீமதாசார்யர் நமக்காகவே சொன்னது - நா அஹம் கர்த்தா; ஹரி: கர்த்தா’. ஆனால் நாம் இதை நினைப்பதில்லை.

தினமும் வாழ்க்கையில் - நான், எனது, என்னாலேயே அனைத்தும் நடக்கிறது என்று சொல்பவர்களே அதிகம். விதிப்படி, சாஸ்திரங்களில் சொல்லியவாறு வர்ணாசிரமங்களுக்கு ஏற்ப நடந்தால் மட்டுமே, ஸ்ரீஹரி காட்சியளிப்பான். அதற்கே ஸ்ரீவியாசராஜர் ஆளிதே நீனு நீனாளு நானுஎன்று உபதேசிக்கிறார்.

நானே நானே எந்து பேளுவ மனுஜனு
நானா யதனகள படுவனு அனுதின
தீன மந்தார சிரிவிஜயவிட்டலரேய
நீனே மாள்பெனெந்து பக்தர கைபிட || -- ஸ்ரீவிஜயதாசர்

விஜயதாசர் இவ்வளவு தெளிவாக சொல்லியிருப்பதை பின்பற்றினால் அனைவரின் வாழ்க்கையும் சுகமயம். மனிதனுக்கு இருக்கும் தேக-அபிமானத்துடன் நான், எனது என்னும் எண்ணத்திலிருந்து வெளிவரவேண்டும். நன்னதேனிதே, எல்லவு நின்னதே தேவஎன்னும் அனுபவப் பேச்சு, நம் இதயத்தின் பேச்சானால் அனைத்தும் சரியாகிவிடும்.

***

Thursday, July 5, 2018

21/360 ஆனது ஆயிற்று. அடுத்து?

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்

ஜ்யேஷ்ட பகுள சப்தமி

21/360 ஆனது ஆயிற்று. அடுத்து?

ஹிந்தின காலவ வ்யர்த்தவாகி களெவனோ |
முந்தின கதி சிந்தே லேஷவில்லவோ |
முந்தவாதது இந்திரிய கதிகளெல்லா || --ஸ்ரீவியாசராஜர்

நேரம் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. யார் பேச்சும் கேட்பதில்லை. என்ன ஆயிற்று என்று யோசிப்பதற்குள் நேரம் போய்விடுகிறது. நம் இறுதிக்காலம் அருகில் வந்துவிடுகிறது. இது அனைவரின் அனுபவமே. போன காலம் மறுபடி வராது என்று அனைவரும் அறிவர். இதற்கே ராஜர் கூறினார் - ஆனது ஆயிற்று. இனி வரும் காலத்தை பார்ப்போம்.

ஹோகுத்திதோ ஏனோ ஹொத்து, கூகுத்திதே ஏனோ ம்ருத்யு’. கோபாலதாசரின் இந்தப் பேச்சைக் கேட்டால் பயம் வருகிறது. ஆனால் இதுவே உண்மை. புரந்தரதாசரின் பேச்சையும் கேட்போம். தாளி ஹோகுவ முன்ன தர்மத பளிஸிரோஎன்கிறார். நினைவில் வைப்போம். மறுபடி இவரே மானவ ஜன்ம தொட்டது, இத ஹானி மாடலுபேடி ஹுச்சப்பகளிராஎன்கிறார். இதற்கு பின்புலமாக ராஜர் பாடிய பாடல் ஆததாயிது இன்னாதரு ஒள்ளே ஹாதி ஹிடியோ பிராணி’. அடுத்து நடக்கப் போவதை யோசிப்போம். வாழ்க்கையை திட்டமிடுவோம்.

ஒவ்வொரு நாளும் நம் தேகம், வாகனங்களைப் போல் தேய்ந்து போகின்றது. இதற்கு தீர்வே இல்லை. வாகனங்களின் பாகங்களை சுலபமாக மாற்றலாம். ஆனால் தேகத்திற்கு அப்படி இல்லை. உறுப்புகள் ஓய்ந்துபோகும் முன், ஹரிதாசர்கள் நமக்காக திரும்பத்திரும்பச் சொன்னதை ஒருமுறையாவது கேட்போம். அதை பின்பற்ற முயன்றால், இப்பிறவிக்கு அதுவே பயன். அய்யோ. இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்படாமல், இப்படி நடந்தால், இப்படி செய்தால் ஸ்ரீஹரி நம்மைப் பார்ப்பான் என்று ஹரிதாசர் கூறிய வழிமுறைகளை அறிந்து பின்பற்றுவோம். பயனடைவோம்.

சிலசமயம் இப்படியும் தோன்றும் என்கின்றனர் தாசர்கள்.

ஹரிகொட்ட காலக்கே உணலில்லா |
ஹரி கொடத காலக்கே பாய்யிடுவே பிராணி || -- ஸ்ரீபுரந்தரதாசர்

ஆகவே ஸ்ரீஹரி அந்தந்த காலத்திற்கு சரியான புத்தியைக் கொடுத்து அருளட்டும் என்று வேண்டுவோம்.

***

Wednesday, July 4, 2018

20/360 தோஷம் என்றால் என்ன?

ஜ்யேஷ்ட பகுள சஷ்டி
20/360 தோஷம் என்றால் என்ன?

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்



பொதுவாக மக்கள் தங்களை தோஷங்கள் அற்றவர் என்றும், அடுத்தவரை பழிப்பவர்களே தோஷம் உடையவர் என்றும் சொல்வதுண்டு. சரி தவறு என்பதைவிட, மனிதனின் நிலையே அது குற்றமா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது. ஆனால் கோபாலதாசர் தனது திடமான வார்த்தைகளால் எது தோஷம் என்பதை தெளிவாகச் சொல்கிறார். 

எனகிந்து உத்தமரில்லா எம்போதொந்து தோஷ
எனகிந்த நீச தொட்டவன் எம்போதொந்து தோஷ
தனகிந்ததிகன்னு சமானவெம்போது தோஷ
தன்னிந்த பின்னவஸ்து தன்னதெம்போது தோஷ
தனகே தானரிய அன்ய பல்லேனெம்போது தோஷ
தனகே தா துதிஸிகொண்டு தன்யனெம்போது தோஷ
தனகே சக்தி இத்து கர்ம பிட்டு கொடுவுதே தோஷ
தனகில்லத கர்த்ருத்வ தானு எம்போது தோஷ
இனிது தோஷங்களில்ல எணிஸிதடாயிதின்னு
தனகே ஈஷகெ ஐக்ய பேளுவதகிந்த தோஷ
கனகாதி ஒடெய கோபாலவிட்டலன
நெனெஸதலித்ததகெ தொட்ட தோஷ || -- ஸ்ரீகோபாலதாசர்

எப்படியோ வாழ்ந்துவிடலாம் என்று இருக்கக்கூடாது. காரணம் தோஷங்கள் எவை என்று அறியவேண்டும். அது அறியாவிட்டால் துக்கமே. மனிதனிடமிருக்கும் கோபம், கர்வம் ஆகியவை உண்மையை மறைக்கின்றன. இங்கு தாசர் உண்மையை சொல்வதற்கு, யதார்த்தமான விஷயங்களை பேசுகிறார். உண்மையில் அனைவரும் தோஷிகளே என்கிறார். விஷயங்களை சொல்லிவிட்டு, இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள் என்கிறார். 

அவர் சொல்லும் விஷயங்களை பின்பற்றி தோஷமற்று இருக்க முயலவேண்டும். அப்போதே நாம் மற்றும் நமது சமூகம் முன்னேற முடியும். தாசரின் வாக்கியங்களை தினமும் படித்தால், கொஞ்சமாவது இது தோஷம் என்று அறிந்து நாம் திருந்த வாய்ப்பு உண்டு. அனைத்தையும்விட பெரிய தோஷம் என்னவென்றால், தோஷங்கள் அற்ற இறைவனை மறந்தது. அவனது மகிமைகளை அறியாதது. ஆகவே கோபாலதாசர் ‘கோபாலவிட்டலன நெனெஸதலி இத்தக்கே தொட்ட தோஷ’ என்கிறார். 

முதலில் நம்மில் இருக்கும் தோஷங்களை காணவேண்டும். பிறகு ‘ஆதத்தெல்லா ஒளிதே ஆயித்து, இன்னாதரு ஒள்ளெ ஹாதி ஹிடியோ பிராணி’ என்று புரந்தரதாசர் சொன்னதுபோல, முன்னோர்களின் வழியை பின்பற்ற வேண்டும். 

***

Tuesday, July 3, 2018

19/360 சிரிப்பு வருகிறது

ஜ்யேஷ்ட பகுள பஞ்சமி
19/360 சிரிப்பு வருகிறது

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்



ஸ்ரீபுரந்தரதாசரின் அனுபவ வாக்கியங்கள். கடுமையான வார்த்தையானாலும் உண்மையானவை. தான் பார்த்ததையே அவர் கூறுகிறார். மக்களின் போலி வாழ்க்கையை விமர்சிக்கும் வார்த்தைகள். 

நகெயு பருதிதே எனகெ நகெயு பருதிதே |
ஜகதொளிருவ ஜாணரெல்ல ஹகரண மாடுவுதனெ கண்டு ||

சாதாரணமாக நாட்டில் மக்கள் ஏதாவது ஒரு பகட்டு / வெளிவேஷத்தில் மூழ்கியிருப்பார்கள். அதிகம் படித்தவன் என்றால் அதிகம் பகட்டு. தோற்றம், பேச்சு, நடவடிக்கைகளில் மற்றவரை மயக்குவது என செய்வர். தாசர் ஒரு இடத்தில் ‘ஹாகுவுது சாது வேஷ, சாகுவுது ஹலவு தோஷ’ என்பதுபோல, இந்த வெளிவேஷத்தினைக் கண்ட தாசர் சிரிப்பு வருகிறது என்கிறார். இதற்கு இன்னொரு இடத்தில்:

ஹீன குணவ மனதொளிட்டு தானு விஷத புஞ்சனாகி
மௌனி புரந்தரவிட்டலன்ன த்யான மாடுவவன கண்டு ||
நகெயு பருதிதே

மனதில் துஷ்ட சிந்தனைகள்; விஷ எண்ணங்களை வைத்துக்கொண்டு வெளியில் அதாவது நடவடிக்கைகளில் நல்லவர்களைப் போல இருக்கும் மக்கள் பலர் என்கிறார். இதையே டாம்பீகம் என்கிறார். இதை சில பண்டிதர்களிலும் காணமுடியும். இதையே ‘ஆத்ம-வஞ்சனை’ எனலாம். இது என்றும் சரியல்ல. இந்த வாழ்க்கை தற்காலிகம். ஆகவே எதையாவது செய்து நற்கதியை அடைவோம் என்கிறார். 

’நீர மேலின குள்ளிகெ சரி ஈ சரீர | ஸ்திரவெந்து நம்பதிரோ ||’ என்கிறார். தாசர் தம் முழு வாழ்க்கையையும் சமூகத்தை திருத்தி, இங்குள்ள குற்றம் குறைகளை சரிப்படுத்துவதில் தன் நேரத்தை செலவழித்தார். அவரின் இன்னொரு பாடல்:

’துதி நாலிகெ பெல்ல இதே கத்தரியவர சங்க பேட’
’ஒள்ளே ஜனகள நிந்தெயனௌ மாடபேட | ஒள்ளெயவனெந்தரெ ஹிக்கபேட |’ என்பதை நம் மனதில் வைக்கவேண்டும். 

இப்படியாக டாம்பீக ஆடம்பரத்தை துறந்து, அந்தரங்கத்தை சுத்தமாக்கி வாழ்க்கையை வாழ்வதற்கு அறிவுரை சொல்கிறார். ஞானிகளின் முன்னர் அவர்களது சிரிப்பிற்கு ஆளாகாதீர்கள் என்றார். இறுதியாக தாசரின் இன்னொரு பாடல்:

’சித்ததலி சரண நம்பித ஜனரிகெ
நித்யாயு உத்ஸாஹ விஜயவிட்டலனீவ’ || -- ஸ்ரீவிஜயதாசர்

***

Monday, July 2, 2018

18/360 இருந்தும் இல்லாதது

ஜ்யேஷ்ட பகுள சதுர்த்தி
18/360 இருந்தும் இல்லாதது

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்




விஜயதாசர் தமது சுளாதிகளில் தத்வவிஷயங்களை மிகவும் அற்புதமாக விளக்கியுள்ளார். வாழ்க்கையில் பிறந்து, ஓடியாடி வாழும் ஜீவன் எப்படி இருக்கவேண்டும், எப்படி வாழ்க்கையை வாழ்ந்து தம் இலக்கை / சத்கதியை அடையவேண்டும் என்று அவர் தெரிவிக்கும் விதத்தைப் பார்ப்போம். 

இரபேகு சம்சாரதொளில்லாதிர பேகு |
அங்கணதொளு ஹக்கெ குளிது ஹாரிதந்தெ
அங்கடிய நெரஹி திருகி ஜன போதந்தெ
முங்குடி மக்களு மனெகட்ட கெடெஸிதந்தெ
ஹிங்கதர வண்டகெய மந்தி ஸாகிதந்தெ
சங்காததவரு தன்ன கூடலித்தரு அவர
ஹங்கிகனாகதெ அதரந்தெ குணிசோது
முகாரி மிஞ்சினந்ததி தேஷதொளகெ நி
ஸ்ஸங்கனாகி திருகி கால களியபேகு
பங்கார மொதலாத த்ரவ்யகள கண்டரெ
முங்காலலி ஒலிது தாடி போகுவதய்யா
ஹங்கிக நாகதிரு பரர வஷக்கெ ஸில்கி
பங்கவாதரு லேஷ கேதபடதிரு
மங்கள மூருதி விஜயவிட்டலரேயன
சங்கீததலி பாளி ஹரிதாசர பாதக்கெ பீளோ || -- ஸ்ரீவிஜயதாசர்

ஸ்ரீவிஜயதாசரின் குருவான புரந்தரரின் சொல் - ‘தர்மவே ஜயவெம்ப திவ்ய மந்த்ர | மர்மவன்னரிது மாடலுபேகு தந்த்ர ||’. வாழ்க்கையை எப்படி இருந்து வெல்லவேண்டும் என்று உதாரணங்களின் மூலம் தாசர் விளக்கியிருக்கிறார். சுக துக்கம் என அனைத்திலும் சலனப்படாமல், வைராக்கியம் பெற்று இருப்பதே ரகசியம் என்கிறார். நீரில் தாமரை இருப்பதைப் போல. வர்ணாஸ்ரமத்தின் கடமைகளை தவறாமல் செய்யவேண்டும். 

கமலதொளு கமல இத்தந்தெ இது ஹ்ரு
த்கமலதல்லி விஜய விட்டலனு பூஜிபுது || -- ஸ்ரீவிஜயதாசர்

***

Sunday, July 1, 2018

17/360 - என்றும் பயம் இல்லை


ஜ்யேஷ்ட பகுள த்ருதியை
17/360 என்றும் பயம் இல்லை

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்



பயம் இல்லாத மனிதரில்லை. பிறந்ததிலிருந்து இறக்கும்வரை அனைத்திலும் பயமே. ‘அபய’ நாமகன் ஒருவனே இதற்கு தீர்வு/வழி. அனைத்து இடங்களிலும் ஸ்ரீஹரியை நினைப்பவர்களுக்கு என்றும் பயம் இல்லை என்று சொல்லி விளக்குகிறார் ஸ்ரீஜகன்னாததாசர். 

ஸ்னான ஜப தேவதார்ச்சனே வைஷ்வதேவ பலி
தான பாத்ராபாத்ர விதி நிஷேதகளு வி
க்ஞான விஹதாசரணெ சர்வத்ர நியம சுஹஸன வைராக்ய சக்தி |
ஸ்ரீனிவாசன பரம விமல லோகைக க
ல்யாண குணரூப க்ரியகளனு ஜட சேதனதி
தேனிஸுவ மனதி ஹிக்குத துதிஸி நலிவ சம
ஹானு பாவக்ஞரிகெ ஈரேளு லோகதலி
பவபயவில்லா பராவரேஷன சகல
டாவினலி சிந்திசுவ பாவக்ஞ ஜனரிகெ || -- ஸ்ரீஜகன்னாததாசர்

பயம் / துக்கம் நீங்கி, சுகம் பெறுவதற்கு மனிதன் என்ன செய்யவேண்டுமென்று ஜகன்னாததாசர் ஒரு பட்டியல் கொடுக்கிறார். தகுதிக்கேற்ப இவற்றைச் செய்து, தூய்மையான சிந்தனையுடன் நடக்க வேண்டிய, விதிகளுக்கேற்ப சொல்லப்பட்ட பட்டியல் இது. 

விதி பூர்வகமான ஸ்னானம், சந்தியா, மந்திரோபதேசம் பெற்ற ஜபம், தந்த்ரசாரத்தில் சொல்லப்பட்ட தேவதார்ச்சனை, பஞ்சமஹாயக்ஞங்கள், பகவந்தனைப் பற்றிய விசேஷ ஞானம், பாடம் படித்தல் / சொல்லுதல், டாம்பீகம் இல்லாத சாஸ்த்ரோக்தமான செயல்கள், கர்வம் பொறாமை இல்லாமல் இவற்றை பின்பற்ற வேண்டும். காம, குரோதங்கள் இல்லாமல் ஒரு மனதுடன், வைராக்யத்துடன் இருக்கவேண்டும். அனந்தகல்யாண குணபரிபூர்ண தோஷங்கள் அற்ற ஸ்ரீஹரியை நினைத்தவாறு - ஜட சேதன உலகத்தை அனாயாசமாக படைப்பவன் என்று நினைத்து - அனாதபந்துவான ஸ்ரீஹரி அனைவரின் காப்பாளன் என்று நினைத்து, பிரம்மன் முதலான அனைவராலும் வணங்கப்படுபவன் என்று நினைத்தால் - என்றும் யாருக்கும் பயப்படும் அவசியம் இல்லையென்று விளக்குகிறார். 

அவனு ஒலிதரெ இன்னேதர பய. அவனு ஒலிதரெ இன்னேதர சிந்தே ||

***


Saturday, June 30, 2018

16/360 சந்தியாவந்தனம் செய்யும் காலம்


ஜ்யேஷ்ட பகுள த்விதியை
16/360 சந்தியாவந்தனம் செய்யும் காலம்

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்



நட்சத்திர சூஸி கண்ட நரகே உத்தம சந்த்யா
நட்சத்திர ஒந்தெரடு கண்ட நரகே மத்யம சந்த்யா
நட்சத்திர தூர காணத நரகே அதம சந்த்யா
நட்சத்திர பிட்டரெ நாராயண புரந்தரவிட்டல பிடுவ || -- ஸ்ரீபுரந்தரதாசர்

சந்தியாவந்தனம் செய்வதற்கு எது சிறந்த காலம் என்கிறார். உபநயனம் ஆனவருக்கு சந்தியாவந்தனம் கட்டாயம் என்கிறார். 

காலகாலத சந்தியாவந்தனே அல்பவெந்து
நிராகரிஸி ஸ்ருதிஸ்ம்ருதி சாருதிதெ
சகல ப்ரயாஸவு பாடலு பஞ்சேகே
மக்களாகோதேனோ மூட கேளோ
பகத்வம்ஸி லட்சுமிகாந்த விட்டலா மெச்சுவனேனோ || -- ஸ்ரீலட்சுமிகாந்த தாசர்

மூன்று வேளையும் சந்தியாவந்தனத்தை எப்போது செய்யவேண்டும்?

நட்சத்திர காணத ப்ராத: சந்த்யா அதம
நட்சத்திர பதியனுஜ கிருஷ்ணசக்ரவ பிடித
நட்சத்திர கண்டரெ நிஷதி அதம
ஈக்‌ஷிஸி மத்யான்ஹதி சந்தாவந்தனெ கையெ
அக்‌ஷயானந்த ஸ்ரீநாராயணவிட்டலா
மோக்‌ஷவ கொடுவனு ஈபரிசரிசலு || -- ஸ்ரீநாராயணவிட்டலர்

சந்தியாவனத்தில் காயத்ரி ஜபம் செய்யும் முறை.

உதயகாலத ஜப நாபிகெ சரியாகி
ஹ்ருதயக்கெ சரியாகி மத்யான்ஹதி
வதனக்கெ சமகாகி சாயங்கால நித்ய
பதுமனாப தந்தே புரந்தரவிட்டலகெ
இதே காயத்ரியிந்த ஜபிசபேகு || -- ஸ்ரீபுரந்தரதாசர்

அனாதி காலத்திலிருந்து வந்த இந்த த்ரிகால சந்தியாவந்தனம் ஒரு சிறப்பான மந்திர-தந்திரம். இதில் அனைத்தும் அடக்கம். நியதிக்கு உட்பட்டது. ரிஷிமுனிவர்களால் பின்பற்றப்பட்டது. வேதங்களில் சொல்லப்பட்ட இந்த சந்தியாவந்தனம், தகுந்தவர்களுக்கு கட்டாயம். 

***

Friday, June 29, 2018

15/360 ஸ்ரீஹரி - உனக்கு நீயே!

ஜ்யேஷ்ட பகுள பிரதமை
15/360 ஸ்ரீஹரி - உனக்கு நீயே!

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்



அனைத்து வேதங்களும் புகழும் ஸ்ரீஹரிக்கு சமமோ உயர்ந்தவரோ யாருமில்லை. ‘மத்த: பரதரம் நான்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்சய’ - ’என்னைவிட மேலானவர் யாருமில்லை’ என்பது கிருஷ்ணனின் வாக்கு. ’அஷ்டமோரஸ: அத்யதிஷ்டன் தஷாங்குலம்’ என்று வர்ணிக்கப்படுகிறார். தாசரின் பாடலில் இந்த தத்வம் அழகாக விளக்கப்படுகிறது. 

ஹரி நீனே சர்வக்ஞ ஸ்வதந்த்ர சர்வாதாரக
ஹரி நீனே சர்வோத்பாதக சர்வேஷ
ஹரி நீனே சர்வஜனக ஹரி நீனே சர்வபாலக
ஹரி நீனே சர்வமாரம ஹரி நீனே சர்வப்ரேரக
ஹரி நீனே சர்வகத ஹரி நீனே சர்வவியாப்த
ஹரி நின்ன கருணதிந்த சிரி ஜகஜ்ஜனனியாகி
ஹரி நின்ன கருணதிந்த பரமேஷ்டி மருதரு குருகளாகிஹவு
ஹரி நின்ன கருணதிந்த கிரிஷேந்த்ரரு பதவி பொந்திதவு
ஹரி நின்ன கருணதிந்த சகலரு ஸ்திதியன்னைதிஹரு
ஹரி குருஜகன்னாதவிட்டலா நினகெ நீனே சமனோ || --ஸ்ரீகுருஜகன்னாததாசர்

படைத்தல் முதலான செயல்கள், அனைத்து நற்குணங்களும் நிரம்பியவன், தோஷங்கள் அற்றவன், ஸ்வதந்த்ரன், அனைத்து ஜட ஜீவர்களை காப்பவன். ஆகவே ஸ்ரீமதாசார்யர் --

அதோ விஷ்ணோ: சர்வோத்தமத்வ ஏவ |
மஹாதாத்வர்யம் சர்வாகமானாம் || என்றார்.

மேலே பார்த்த உகாபோகத்திற்கு சமமான கோபாலதாசரின் பாடல் ஒன்று.

ஹரி சர்வோத்தம சிரி ஆதனராணி
பரமேஷ்டி மகனு ஹரி மொம்மக ஹரிகெ
உரக மஞ்சவு இன்னு கருட ஏரோரதவு
புருஹுத சுரரெல்ல பரிவாதவு ஹரிகெ || -- ஸ்ரீகோபாலதாசர்

வேதவியாசரின் வாக்கு:

நாஸ்தி நாராயண சமம் ந பூதோ ந பவிஷ்யதி 
ஏதேன சத்ய வாக்யேன சர்வார்த்தான் சாதயாம்யஹம் ||

***