ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்
ஜ்யேஷ்ட பகுள ஏகாதசி
25/360 எதையும் எதிர்பாராமல்
உதவி செய்பவர் ஸ்ரீஹரி
ஸ்ரீகோபாலதாசரின் மூன்று
தம்பிகளும், அண்ணனை வணங்கி அவரிடமிருந்தே தீக்ஷை ஸ்வீகரித்து, அதே தாச விருத்தியை வளர்த்தனர். இது உலகத்திற்கு ஒரு வழிகாட்டும் வரலாறு
ஆகும். இம்மூவரும் கிருதிகளை இயற்றியது இன்னொரு விசேஷம். மூவரில் மூத்தவரே
குருகோபாலதாசர். அவரது ஒரு உகாபோகம்.
கஜராஜன பொரெதுதேனு கனவு
கஜபுரத த்ரௌபதிய பொரதுதேனு கனவு
பஜகப்ரஹ்லாதனு பொரெததேனு ஆஸ்சர்ய
அஜமிளன பொரதத்து பொரெதெ நின்னவரு
பஜனெ மாடிதுதக்கெ நீ பொரெதெ
ஸரிஸாடி
அஜனய்ய நா நின்னவனெந்து ஒம்மெயாதரு
சரி
பஜஸிதவ நானல்ல நீ என்ன பொரெதரெ
மஜபாவுரெ கீர்த்தி த்ரிஜகதொளகெ
வ்ருஜின ஹரி ஸ்ரீகுருகோபாலவிட்டல
சுஜனரித கண்டு சந்தோஷிசுவரோ || -- ஸ்ரீகுருகோபாலதாசர்
தன்னை எப்போதும் உபாசிப்பவர்களை
ஸ்ரீஹரி காப்பான் என்று தாசர் பல உதாரணங்களை சொல்லியிருக்கிறார். இத்தகைய
ஆபத்பாந்தவனான ஸ்ரீஹரி என்னைக் காப்பாற்றாமல் இருப்பானோ? என்று கேட்கிறார். தனது வேண்டுகோள்களை ஸ்ரீஹரியின் முன் வைத்துக் கேட்கிறார்.
இன்று அனைவரின் நிலையும் இதுவே. அபாரமஹிமனான, பக்தவத்ஸலனான ஸ்ரீஹரி தன் பக்தர்களிடமிருந்து எதையும் கேட்பதில்லை. ‘ஸ்மரிசுவரபராதகள தா ஸ்மரிஸ சகலேஷ்ட ப்ரதாயக’ என்று ஜகன்னாததாசர், அவனை பக்தியுடன்
நினைத்தால் போதும் என்கிறார். இத்தகைய பரமாத்மனை ‘சம்ஸ்துதிகெ வஷனாகுவனிவன காருண்யகேனெம்பே’ என்று வர்ணித்து, அவனை பக்தியுடன் ஸ்தோத்திரம் செய்தால்
காட்சியளிப்பான் என்கிறார்.
ஈ வித்ய அதிகௌப்ய இது அரிது
பஜிசுவவ
கோவிதர சர்வ புருஷார்த்தகளனு
தேவ குருகோபாலவிட்டல ஒலிதீவ
காவனு சர்வத்ர தானு பிடதே || -- ஸ்ரீகுருகோபாலவிட்டலதாசர்
எந்த காலத்திலும் யாரிடமும்
எதையும் வேண்டாமல், அனைத்தையும் கொடுத்து பிறகு இறுதியில் மோட்சத்தையும்
கொடுத்து உதவுபவனே - அனிமித்த உபகாரி - எதையும் எதிர்பாராமல் உதவுபவன்.
‘பேடிதரெ என்னொடெயவன
பேடுவே’ என்று புரந்தரதாசர் கூறியது உண்மையான பேச்சு. வேண்டத் தகாதவற்றை தாசர்
வேண்டுவதில்லை. அதற்கொரு உதாரணம்.
நின்னல்லி தடவில்லதெ பகுதி கொட்டு
அன்ய ஸ்ரவண கேளதந்தெ கிவிகொட்டு
நின்ன மூருதி முன்ன மனதலி நிட்டு
நின்ன நாமவ என்ன நாலிகெயொளிட்டு
நின்ன பேடிதுதெல்ல நில்லதலெ கொட்டு
என்ன ரக்ஷிஸு வரதகோபாலவிட்டல
நின்ன நா பேடுவுதகேனு மரளெ
நின்னவர தாசனலி தயாமாடு ப்ரபுவே || -- ஸ்ரீவரதகோபாலவிட்டலதாசர்
தமது தேகத்தில் எல்லா இடங்களிலும்
ஸ்ரீஹரி இருக்கவேண்டுமென்று, அந்தந்த உறுப்புகளின்
வேலையை அவனுக்கு சமர்ப்பிக்குமாறு வேண்டினார். இன்னொரு கிருதியில் தமக்கும்
ஸ்ரீஹரிக்கும் இருக்கும் வித்தியாசத்தைக் கூறி, உன்னையே சரணடைகிறேன் என்கிறார்.
ஹிதரொளகெ நின்னந்த ஹிதகரரு
எனகில்லா
மதிஹீனரொளகெ சரி எனகில்லவோ
பதிதபாவன நீனு பதிதமனுஜனு நானு
ச்யுதிதூர வரதகோபாலவிட்டலரேய
அதிதயாபர நின்ன க்ருபெகெ எணெகாணே || -- ஸ்ரீவரதகோபாலவிட்டலதாசர்
ஆகையால் ஸ்ரீஹரி என்மேல் கருணை
காட்டி, காப்பாற்ற வேண்டும் என்கிறார்.
மூடதாசனு நானு காடனல்லவோ நின்ன
பேடி காடிஹெனு
ஒடதலெ நிம்மய பேடண பந்தேனோ ||
ஏனென்றால் நீ என்னிடம் எதையும்
வேண்டாமல் அனைத்தையும் கொடுக்கும் அனிமித்த உபகாரி.
No comments:
Post a Comment