Sunday, July 8, 2018

24/360 கடன் தீர்த்தல்


ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்




ஜ்யேஷ்ட பகுள தசமி


24/360 கடன் தீர்த்தல்

கடனைப் பற்றி பல பாடல்கள் பாடி, ஹரிதாசர்கள் சஜ்ஜனர்களின் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தனர். பிறப்பிலிருந்து இறப்புவரை அனைவரும் ஏதோ ஒரு கடனில் இருந்தே தீர்கிறோம். ஜீவர்களுக்கு மூன்று கடன்கள் உண்டு. ரிஷி ருண, தேவ ருண மற்றும் பித்ரு ருண. இவற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு தீர்க்கவேண்டும் என்கின்றனர். விஜயதாசர் சொல்வது இது.

ரிஷிகள ருண பூர்வாஸ்ரமதிந்த பரிஹார
த்ரிதஷர ருண மேதாதிகளு மாடே,
அனுசம்பந்திகள ருண க்ருஹஸ்தாஸ்ரமதல்லி
புஸியல்லி தித்தி ஹோகுவுது சித்த
வசுதெயொளகெ ஒந்து காசுகொட்டவன ருண
வசுதெயெல்லா திருகி போகதய்யா
பசுபால அவ்யயாத்ம விஜயவிட்டலரங்க
பசுரொளு பொகலிட்டு பேசசதெ பிடதய்யா || -- ஸ்ரீவிஜயதாசர்

ரிஷி ருண - ஞானத்தை சரியாகப் பெறுதல்; அடுத்தவருக்கு சொல்லிக் கொடுத்தல் இவற்றால் தீரும்.

தேவ ருண - யக்ஞ, யாகாதிகள் செய்து தேவதைகளை பூஜித்தால் தீரும்.

பித்ரு ருண - வம்சவிருத்தி, கிருஹஸ்த தர்மத்தை செய்தல், பெற்றோரை கவனித்தல் மற்றும் அவர்களின் இறுதிச்சடங்குகள் செய்வதால் தீரும்.

இந்த கடன்கள் அல்லாமல், வாழ்க்கையில் சேர்த்துக் கொண்ட கடன்கள் பல உள்ளன. தேகத்தைக் கொடுத்த மாத்ரு ருண, கல்வியைக் கற்றுத்தந்த குரு ருண, சமூகத்து ருண, உதவி செய்தவர் ருண என பலவித கடன்கள் உள்ளன. உடலால், சேவை, பிரதி உபகாரம், உதவி - என செய்து இந்த ருணங்களிலிருந்து விடுபடவேண்டும்.

வாழ்க்கையின் சாரம் என்பதுபோல ஸ்ரீவியாசராஜர் சொன்னது:

ஜனன மரண மார்கதல்லி தொளலி ஒளலி ஸ்வர்க
நரகக்கேரி மமதெயெம்ப பாரவ பொத்து
பளலி தாபத்ரய தாபதிம் பெந்தனெகெ
நக சந்த்ரிக கங்கா சேஷகரதிந்த தம்பாத
சிரிகிருஷ்ணன சரண நெளலு நெலெமனெயாயிது || -- ஸ்ரீவியாசராஜர்

யக்ஞ யாகாதிகள், கற்றல், கற்பித்தல், தானம் கொடுத்தல், பெறல் - இந்த ஆறு செயல்களால் பாகவத தர்மத்தைப் பின்பற்றினால் ருண விமோசனம் ஆகும் என்கின்றனர்.

***

No comments:

Post a Comment