Thursday, July 5, 2018

21/360 ஆனது ஆயிற்று. அடுத்து?

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்

ஜ்யேஷ்ட பகுள சப்தமி

21/360 ஆனது ஆயிற்று. அடுத்து?

ஹிந்தின காலவ வ்யர்த்தவாகி களெவனோ |
முந்தின கதி சிந்தே லேஷவில்லவோ |
முந்தவாதது இந்திரிய கதிகளெல்லா || --ஸ்ரீவியாசராஜர்

நேரம் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. யார் பேச்சும் கேட்பதில்லை. என்ன ஆயிற்று என்று யோசிப்பதற்குள் நேரம் போய்விடுகிறது. நம் இறுதிக்காலம் அருகில் வந்துவிடுகிறது. இது அனைவரின் அனுபவமே. போன காலம் மறுபடி வராது என்று அனைவரும் அறிவர். இதற்கே ராஜர் கூறினார் - ஆனது ஆயிற்று. இனி வரும் காலத்தை பார்ப்போம்.

ஹோகுத்திதோ ஏனோ ஹொத்து, கூகுத்திதே ஏனோ ம்ருத்யு’. கோபாலதாசரின் இந்தப் பேச்சைக் கேட்டால் பயம் வருகிறது. ஆனால் இதுவே உண்மை. புரந்தரதாசரின் பேச்சையும் கேட்போம். தாளி ஹோகுவ முன்ன தர்மத பளிஸிரோஎன்கிறார். நினைவில் வைப்போம். மறுபடி இவரே மானவ ஜன்ம தொட்டது, இத ஹானி மாடலுபேடி ஹுச்சப்பகளிராஎன்கிறார். இதற்கு பின்புலமாக ராஜர் பாடிய பாடல் ஆததாயிது இன்னாதரு ஒள்ளே ஹாதி ஹிடியோ பிராணி’. அடுத்து நடக்கப் போவதை யோசிப்போம். வாழ்க்கையை திட்டமிடுவோம்.

ஒவ்வொரு நாளும் நம் தேகம், வாகனங்களைப் போல் தேய்ந்து போகின்றது. இதற்கு தீர்வே இல்லை. வாகனங்களின் பாகங்களை சுலபமாக மாற்றலாம். ஆனால் தேகத்திற்கு அப்படி இல்லை. உறுப்புகள் ஓய்ந்துபோகும் முன், ஹரிதாசர்கள் நமக்காக திரும்பத்திரும்பச் சொன்னதை ஒருமுறையாவது கேட்போம். அதை பின்பற்ற முயன்றால், இப்பிறவிக்கு அதுவே பயன். அய்யோ. இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்படாமல், இப்படி நடந்தால், இப்படி செய்தால் ஸ்ரீஹரி நம்மைப் பார்ப்பான் என்று ஹரிதாசர் கூறிய வழிமுறைகளை அறிந்து பின்பற்றுவோம். பயனடைவோம்.

சிலசமயம் இப்படியும் தோன்றும் என்கின்றனர் தாசர்கள்.

ஹரிகொட்ட காலக்கே உணலில்லா |
ஹரி கொடத காலக்கே பாய்யிடுவே பிராணி || -- ஸ்ரீபுரந்தரதாசர்

ஆகவே ஸ்ரீஹரி அந்தந்த காலத்திற்கு சரியான புத்தியைக் கொடுத்து அருளட்டும் என்று வேண்டுவோம்.

***

No comments:

Post a Comment