Friday, July 6, 2018

22/360 - நானல்ல; நீயே கடவுள்

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்


ஜ்யேஷ்ட பகுள அஷ்டமி

22/360 நானல்ல; நீயே கடவுள்

நானு நன்னது அந்து நானு நன்னது இந்து
நானு நன்னது தந்து நானு நன்னது ஒந்து
நானு நன்னது வஸ்த்ர நானெம்புது பிடதெ
நானிந்தலி கெச்சி நானெம்புது பிடிஸோ
நீனே விஜயவிட்டலரேயா || --ஸ்ரீவிஜயதாசர்

எனது என்று எதுவுமே இல்லை, நான் நினைப்பது என்றுமே நடப்பதில்லை - என்பதே மனிதனாகப் பிறந்து வந்த அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் நாம் நடப்பது வேறு வழியில். ஸ்ரீமதாசார்யர் நமக்காகவே சொன்னது - நா அஹம் கர்த்தா; ஹரி: கர்த்தா’. ஆனால் நாம் இதை நினைப்பதில்லை.

தினமும் வாழ்க்கையில் - நான், எனது, என்னாலேயே அனைத்தும் நடக்கிறது என்று சொல்பவர்களே அதிகம். விதிப்படி, சாஸ்திரங்களில் சொல்லியவாறு வர்ணாசிரமங்களுக்கு ஏற்ப நடந்தால் மட்டுமே, ஸ்ரீஹரி காட்சியளிப்பான். அதற்கே ஸ்ரீவியாசராஜர் ஆளிதே நீனு நீனாளு நானுஎன்று உபதேசிக்கிறார்.

நானே நானே எந்து பேளுவ மனுஜனு
நானா யதனகள படுவனு அனுதின
தீன மந்தார சிரிவிஜயவிட்டலரேய
நீனே மாள்பெனெந்து பக்தர கைபிட || -- ஸ்ரீவிஜயதாசர்

விஜயதாசர் இவ்வளவு தெளிவாக சொல்லியிருப்பதை பின்பற்றினால் அனைவரின் வாழ்க்கையும் சுகமயம். மனிதனுக்கு இருக்கும் தேக-அபிமானத்துடன் நான், எனது என்னும் எண்ணத்திலிருந்து வெளிவரவேண்டும். நன்னதேனிதே, எல்லவு நின்னதே தேவஎன்னும் அனுபவப் பேச்சு, நம் இதயத்தின் பேச்சானால் அனைத்தும் சரியாகிவிடும்.

***

No comments:

Post a Comment