ஜ்யேஷ்ட பகுள பஞ்சமி
19/360 சிரிப்பு வருகிறது
ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்
ஸ்ரீபுரந்தரதாசரின் அனுபவ வாக்கியங்கள். கடுமையான வார்த்தையானாலும் உண்மையானவை. தான் பார்த்ததையே அவர் கூறுகிறார். மக்களின் போலி வாழ்க்கையை விமர்சிக்கும் வார்த்தைகள்.
நகெயு பருதிதே எனகெ நகெயு பருதிதே |
ஜகதொளிருவ ஜாணரெல்ல ஹகரண மாடுவுதனெ கண்டு ||
சாதாரணமாக நாட்டில் மக்கள் ஏதாவது ஒரு பகட்டு / வெளிவேஷத்தில் மூழ்கியிருப்பார்கள். அதிகம் படித்தவன் என்றால் அதிகம் பகட்டு. தோற்றம், பேச்சு, நடவடிக்கைகளில் மற்றவரை மயக்குவது என செய்வர். தாசர் ஒரு இடத்தில் ‘ஹாகுவுது சாது வேஷ, சாகுவுது ஹலவு தோஷ’ என்பதுபோல, இந்த வெளிவேஷத்தினைக் கண்ட தாசர் சிரிப்பு வருகிறது என்கிறார். இதற்கு இன்னொரு இடத்தில்:
ஹீன குணவ மனதொளிட்டு தானு விஷத புஞ்சனாகி
மௌனி புரந்தரவிட்டலன்ன த்யான மாடுவவன கண்டு ||
நகெயு பருதிதே
மனதில் துஷ்ட சிந்தனைகள்; விஷ எண்ணங்களை வைத்துக்கொண்டு வெளியில் அதாவது நடவடிக்கைகளில் நல்லவர்களைப் போல இருக்கும் மக்கள் பலர் என்கிறார். இதையே டாம்பீகம் என்கிறார். இதை சில பண்டிதர்களிலும் காணமுடியும். இதையே ‘ஆத்ம-வஞ்சனை’ எனலாம். இது என்றும் சரியல்ல. இந்த வாழ்க்கை தற்காலிகம். ஆகவே எதையாவது செய்து நற்கதியை அடைவோம் என்கிறார்.
’நீர மேலின குள்ளிகெ சரி ஈ சரீர | ஸ்திரவெந்து நம்பதிரோ ||’ என்கிறார். தாசர் தம் முழு வாழ்க்கையையும் சமூகத்தை திருத்தி, இங்குள்ள குற்றம் குறைகளை சரிப்படுத்துவதில் தன் நேரத்தை செலவழித்தார். அவரின் இன்னொரு பாடல்:
’துதி நாலிகெ பெல்ல இதே கத்தரியவர சங்க பேட’
’ஒள்ளே ஜனகள நிந்தெயனௌ மாடபேட | ஒள்ளெயவனெந்தரெ ஹிக்கபேட |’ என்பதை நம் மனதில் வைக்கவேண்டும்.
இப்படியாக டாம்பீக ஆடம்பரத்தை துறந்து, அந்தரங்கத்தை சுத்தமாக்கி வாழ்க்கையை வாழ்வதற்கு அறிவுரை சொல்கிறார். ஞானிகளின் முன்னர் அவர்களது சிரிப்பிற்கு ஆளாகாதீர்கள் என்றார். இறுதியாக தாசரின் இன்னொரு பாடல்:
’சித்ததலி சரண நம்பித ஜனரிகெ
நித்யாயு உத்ஸாஹ விஜயவிட்டலனீவ’ || -- ஸ்ரீவிஜயதாசர்
***
No comments:
Post a Comment