Sunday, March 12, 2017

வித்யாலயாவின் 20ம் ஆண்டு விழா

வித்யாலயாவின் 20ம் ஆண்டு விழா

ஹரிதாச சாகித்ய வித்யாலயாவின் 20வது ஆண்டு மலரில் வெளிவந்த கட்டுரை.
கன்னட மூலம் : திருமதி. சௌபலா
தமிழில் : T.V.சத்ய நாராயணன்

கடந்த 20 ஆண்டுகளாக ஹரிதாச சாகித்யத்தை பரப்பிவரும் நம் குருவாகிய திரு ஹரதி பிரகலாத் அவர்களுக்கு என் மனப்பூர்வமான வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது இந்தப் பயணத்தில் மிகவும் உதவிகரமாக இருக்கும் அவரது மனைவியாகிய திருமதி. குஸுமா அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு பிரகலாத் அவரின் தலைமையில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வரும் ஹரிதாச சாகித்ய வித்யாலயாவானது, இதுவரை சுமார் 1500 மாணவர்களுக்கு அவர்கள் ஹரிதாச சாகித்யத்தைப் பற்றி அறிய உதவியுள்ளது. நமக்குக் கற்றுக் கொடுப்பதில் நம் குரு காட்டும் உற்சாகம் மற்றும் நம்மைப் பாராட்டுவதில் அவர் காட்டும் முனைப்பு நமக்கு மிகவும் சந்தோஷமளிக்கிறது.

தாச சாகித்யம் என்றால் சில பாடல்கள் தெரிந்து கொள்வது என்பது மட்டுமே என்றிருந்த நிலையில், அதற்கு தேர்வுகள் நடத்தி, மேன்மேலும் தெரிந்து கொள்ள வழிவகைகளைச் செய்தவர் நம் குரு அவர்கள். கடந்த 20 ஆண்டுகளாக இடைவிடாமல் பற்பல மாணவர்களை தேர்வுகளுக்கு தயார் செய்து, அவர்களை பல்வேறு ஹரிதாசர்களைப் பற்றி தெரியவைத்த நம் குருவை நம் வாழ்நாள் முழுவதும் வணங்கினாலும் தகும்.

ஹரிதாச சாகித்ய மகாவித்யாலயா மற்றும் ஆராய்ச்சி மையத்தைத் துவக்கி, மாணவர்களை உருவாக்கி, தேர்வு எழுத வைத்து, அவர்களுக்கு சான்றிதழ்களைக் கொடுத்து, அனைவரின் வீட்டிலும் ஹரிதாச சாகித்யங்களை ஒலிக்கச் செய்வித்தவர் நம் குரு.

ஹரிதாச சாகித்யங்களை படிப்பதால், நாம் இஹ-பர சாதனைகளை அடைவதுடன், ஞான பக்தி வைராக்யத்தையும் அடையலாம்.

குருவின் மூலமே ஸ்ரீஹரியின் பிரசாதம் கிடைக்கும். பகவந்தனின் அனுக்கிரகத்துக்குப் பாத்திரமாவதற்கு, குருவிடம் செலுத்தும் பக்தி மிகவும் முக்கிய காரணம் ஆகும். பகவந்தனின் மகிமை, அவரது கருணை ஆகியவற்றை நமக்கு அறிமுகம் செய்பவர் நம் குருவே ஆகும்.

கு - அஞ்ஞானம் என்னும் இருள்
ரு - ஒளி, ஞானம்
குரு - என்பவர், சிஷ்யரின் அக இருளைப் போக்கி, செய்யவேண்டிய நற்செயல்களை செய்யவைத்து,  தெரியவேண்டியவற்றை தெரியவைத்து அவரை முன்னேற்றுபவர்.

தகுதி வாய்ந்த ஒரு குருவின் மூலமே, ஸ்ரீஹரி தன் பக்தர்களை காப்பாற்றுகிறார். ஆகையால், முதலில் நம் குருவின் பாதம் பற்றி வணங்குவது முக்கியம். அவரிடம் பக்தி செய்வது நம் கடமையாகும்.

ஹரிதாச சாகித்யத்தில் என்ன இருக்கிறது என்பவர்கள் இதைப் படித்தால், இதில் என்ன இல்லை என்று கேட்கும் நிலை வரும். இதைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் கூட, இதிலுள்ள ஸ்ரீவாதிராஜரின் மகிமைகள், புரந்தரதாசரின் கீர்த்தனைகள் (புரந்தரோபநிஷத்), நவவித பக்திகளை உள்ளடக்கிய கனகதாசரின் பாடல்கள், விஜயதாசரின் பாடல்கள், ஜகன்னாததாசர் அருளிய (ஸ்ரீமத்வரின் சர்வமூல கிரந்தங்களின் சாரமாகிய) ஹரிகதாம்ருதசாரம், சூளாதிகள், கோபாலதாசரி இயற்றிய கீர்த்தனைகள் இவற்றைப் படிக்க வேண்டும். ஞானம் பெறுவதற்கு இவையே வழிகாட்டியாகும். இவையே முக்திக்கு படிகளாகும்.

20ம் ஆண்டு விழாவில் நம் குருவான ஸ்ரீ பிரகலாத் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு ஆயுர் ஆரோக்கியம் வழங்க வேண்டும் என்று நம் குருவர்ந்தர்யாமி ஸ்ரீபாவிசமீர வாதிராஜ அந்தர்யாமியான ஸ்ரீஹரியின் பாதங்களில் வணங்கிக் வேண்டிக்கொள்கிறேன்.

என்றும் குருவின் சிஷ்யை
ஜி.சௌபலா


No comments:

Post a Comment