Monday, February 28, 2022

ஸ்லோகம் #6: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #6: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 6]

அஸம மூவத்தெரடு3 லக்‌ஷண ஷிஷு ஷரீரவ பொக்கனாக்‌ஷண

பி3ஸுட1னா பரஜீவவனு அஸுபதியு தா ஹொரகெ3 |

அஸுரநிகரகெ1 கே23 ஸு2கஸந்தஸவு ஸஜ்ஜனததிகெ3 ஈ பரி

ஸுஸமயவிதெ3ம்பு33 நுடி3யிது3 தே3வது3ந்து3பி4யு ||6 

அஸம - எதனுடனும் ஒப்பிடமுடியாத; மூவத்தெரடு லக்‌ஷண - 32 லட்சணங்களைக் கொண்ட; ஷிஷு - அந்தக் குழந்தை; ஷரீரவ - அந்த தேகத்தில்; பொக்கனாக்‌ஷண - நுழைந்த அந்த சமயத்தில்; பரஜீவவனு - ஏற்கனவே அங்கு இருந்த ஜீவனை; அஸுபதியு - பிராணதேவர்; தா - தான்; ஹொரகெ - வெளியே; பிஸுடனா - இழுக்க, (அந்த சமயமானது); சஜ்ஜனததிகெ - சஜ்ஜனர்களின் கூட்டத்திற்கு; ஸுக ஸந்தஸவு - நற்காலம் என்னும் நம்பிக்கையையும்; அஸுர நிகரகெ - அசுரர்களின் கூட்டத்திற்கு; கேத - கெட்ட காலம்; ஈ பரி - இப்படியான; ஸுஸமயவிதெம்புத - காலங்கள் இப்போது வந்திருக்கின்றன என்பதாக; தேவதுந்துபியு - தேவலோகத்தில் வாத்தியங்கள்; நுடியுது - முழங்கின; 

மத்வ அவதார சமயத்தை, ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர் இவ்வாறு விளக்குகிறார். எதனுடனும் ஒப்பிடமுடியாத 32 லட்சணங்களைக் கொண்ட அந்தக் குழந்தை, அந்த தேகத்தில் நுழைந்த அந்த சமயத்தில், ஏற்கனவே அங்கிருந்த ஜீவனை, பிராணதேவர் தான் வெளியே இழுக்க, அந்த சமயத்தில், சஜ்ஜனர்களின் கூட்டத்திற்கு நற்காலம் என்னும் நம்பிக்கையையும், அசுரர்களின் கூட்டத்திற்கு கெட்ட காலம் வந்திருக்கின்றன என்பதாக, தேவலோகத்தில் வாத்தியங்கள் முழங்கின. 

மத்வ அவதார சமயத்தை, மத்வவிஜயம் இவ்வாறு வர்ணிக்கிறது. 

ஸந்துஷ்யதாம் ஸகல ஸன்னிகரைரஸத்பி:

கித்யேத வாயுரயமாவிரபூத் ப்ருதிவ்யாம் |

அரவ்யானிதீவ ஸுர துந்துபி மந்த்ரனாத:

ப்ராஸ்ராவி கௌதுக வஷௌரிஹ மானுஷைஸ்ச || (2-26) 

ஸ்ரீவாயுதேவர் அவதரித்துவிட்டார். இதனால் சஜ்ஜனர்கள் மகிழ்ச்சியடைந்தனர். துர்ஜனர்கள் துக்கமடைந்தனர். இதனை அறிவிப்பது போல, தேவலோகத்தில் இருக்கும் துந்துபி வாத்தியங்கள் முழங்கின. 

குழந்தையின் அவதாரத்தை இங்கு கூறிய ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர், (வாசுதேவனின்) பால லீலைகளை அடுத்த ஸ்லோகத்திலிருந்து துவக்குகிறார்.

 ***

Sunday, February 27, 2022

ஸ்லோகம் #5: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #5: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

நிஜமதிய தி3னகரனு முளுக3லு அஜிதனாக்3ஞெய படெ33 மருதனு

ருஜுதபக3ளாசரிஸி பரம விஷுத்34ராகித்33 |

ஸஜனஷேக2ர மத்4யகே3ஹ த்3விஜவரன ஸதியுத3ரத3லி தா

பி3ஜயகெ3ய்த3னு ஹொரகெ33ஹி பே3ரொந்த3னாக்‌ஷணதி3 ||5 

நிஜமதிய தினகரனு - உண்மையான அறிவு என்னும் சூரியன் (ஞான சூரியன்); முளுகலு - மூழ்கத் தொடங்க; அஜிதனாக்ஞெய படத - ஸ்ரீஹரியின் ஆணையைப் பெற்ற; மருதனு - ஸ்ரீவாயுதேவர்; ருஜுதபகளாசரிஸி - ஜப, தபங்களை சரிவர செய்து; பரம விஷுத்தராகித்த - பரம தூய்மையானவராக இருந்த; ஸஜனஷேகர - சஜ்ஜனர்களில் சிறந்தவரான; மத்யகேஹ த்விஜவரன - மத்யகேஹ என்னும் பிராமண ஸ்ரேஷ்டரின்; ஸதியுதரதலி - மனைவியின் வயிற்றில்; ஆக்‌ஷணதி - அந்த சமயத்தில்; பேரொந்து - அந்த கர்ப்பத்தில் இருந்த வேறொரு ஜீவனை; ஹொரகெடஹி - வெளியே இழுத்து; தா - தான்; பிஜயகெய்தனு - அங்கு உள்ளே பிரவேசித்தார். 

மத்வ விஜயத்தின் இரண்டாம் சர்க்கத்தின் விஷயத்தை இங்கு துவக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

உண்மையான அறிவு என்னும் சூரியன் மூழ்கத் தொடங்க, ஸ்ரீஹரியின் ஆணையைப் பெற்ற ஸ்ரீவாயுதேவர், ஜப தபங்களை சரிவர செய்து, பரம தூய்மையானவராக இருந்த, சஜ்ஜனர்களில் சிறந்தவரான, மத்யகேஹ என்னும் பிராமண ஸ்ரேஷ்டரின் மனைவியின் வயிற்றில், அந்த சமயத்தில் அந்த கர்ப்பத்தில் இருந்த வேறொரு ஜீவனை வெளியே இழுத்து, தான் அங்கு உள்ளே பிரவேசித்தார். 

விக்ஞான பானுமதி கால பலேன லீனே

துர்பாஷ்ய சந்தமஸ சந்ததிதோ ஜனேந்தே |

மார்காத்சதாம் ஸ்கலதி கின்ன ஹ்ருதோ முகுந்தம்

தேவாஸ்சதுர்முக முகா: ஷரணம் ப்ரஜக்மு: || (2-1) 

உலகத்தில் சஜ்ஜனர்களின் ஞானம் என்னும் சூரியன், கலியின் பிரபாவத்தாலும், துர்பாஷ்யங்களின் துர்போதனைகளாலும் அஸ்தமனம் ஆகி, அஞ்ஞானம் என்னும் இருள் சூழ்ந்து, அவர்கள் தர்மத்தின் வழியிலிருந்து பிறழத் தொடங்கினர். சுக்ஞானம் பிறந்து, அவர்கள் தர்மத்தின் வழியில் திரும்பவேண்டும் என்று பிரம்மாதி தேவதைகள் முகுந்தனை வேண்டினர். ஸ்ரீஹரியானவர் த்ரியுகஹூதி - அதாவது மூன்று யுகத்தில் மட்டுமே அவதாரம் செய்பவர். பிரம்மதேவருக்கோ அவதாரமே இல்லை. 

ஆகையால், இந்த நற்காரியத்தை செய்வதற்கு சர்வக்ஞரான வாயுதேவரால் மட்டுமே சாத்தியம் என்று, ஸ்ரீஹரி வாயுதேவரிடம் வேதாந்த மார்க்க பரிமார்கண தீன தூனா’ (2-3) குழப்பத்தில் இருப்பவர்களுக்கும், சத்-பக்தர்களுக்கும், வேதாதி சாஸ்திரங்களின் உண்மையான பொருளை அறியச்செய்து, என் நற்குணங்களை நிர்ணயம் செய்து சஜ்ஜனர்களை மகிழ்வுறச் செய்என்று ஆணையிட்டார். சுரர்களின் வேண்டுதல், சஜ்ஜர்களின் மேல் இருந்த கருணை, இதற்குமேல் ஸ்ரீஹரியின் ஆணை - என அனைத்தையும் கருத்தில் கொண்டு வாயுதேவர் பூமியில் அவதாரம் செய்ய விருப்பம் கொண்டார். 

கோவிந்த ஸுந்தர கதா ஸுதயா ஸ ந்ருணாம்

ஆனந்தயன்ன கில கேவலமிந்த்ரியாணி | (2-15) 

கர்மபூமியான பரத கண்டத்தில், மேற்கு கடற்கரையோரம் இருக்கும் உடுப்பிக்கு அருகில் இருக்கிறது பாஜக கிராமம். இது பரசுராமரால் நிர்மாணிக்கப்பட்ட, துர்காதேவி நிலைகொண்டிருக்கும் விமானகிரி இருக்கும் க்‌ஷேத்திரம். இங்கு நல்மனம், நற்புத்தி கொண்டவர், கல்வி கற்றவர், ஸ்ரீஹரியையே எப்போதும் நம்பும் பக்தரான மத்யகேஹ பட்டர், யோக்யளான, நற்குலத்தில் பிறந்தவரான வேதவதி என்னும் மனைவியுடன் வசித்து வந்தார். தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர், மகாபாரத மற்றும் புராணங்களின் ரகசியங்களை அறிந்தவராகையால் பட்டஎன்று அழைத்துக்கொண்ட இவரை மக்கள் மத்யகேஹ பட்டர்என்று அழைத்தனர். மகாபாரத, ராமாயண புராணங்களில் சொற்பொழிவு ஆற்ற வல்ல மத்யகேஹ பட்டர், கோவிந்தனின் அழகான கதைகளினால் சஜ்ஜனர்களின் மனதை மகிழ்வுறச் செய்துவந்தார். 

சம்பூர்ண லக்‌ஷண சணம் நவ ராஜமான த்வாராந்தரம் பரம சுந்தர மந்திரம் தத் |

ராஜேவ சத்புரவரம் புவனாதி ராஜோ நிஷ்காசயன் பரமசௌ பகவான் விவேஷ || (2-25) 

அந்த கர்ப்பத்தில் இருந்து துக்கம் அனுபவித்துக் கொண்டிருந்த ஜீவனை வெளியே இழுத்து, ஸ்ரீநாராயணனின் பிரதிபிம்பரான வாயுதேவர், தான் உள்ளே பிரவேசித்ததும், அந்த ஜீவன் 32 லட்சணங்களைக் கொண்டதாயிற்று. அங்கிருந்த ஜீவனைச் (குபேரனின் சேவகனான மணிபத்ரன்) சேர்ந்தார். வாயுதேவருக்கு கர்ப்பவாசம் முதலான தோஷங்கள் இல்லை என்று அறியவேண்டும். பூமியில் இவர் அவதாரம் செய்த அந்த நாள் விஜயதசமி. (விளம்பி சம்வத்சரம் ஆஸ்வீஜ சுக்ல தசமி புதன் மதியம்). 

ஸ்ரீமத்வரின் அவதார சந்தர்ப்பத்தை, ஸ்ரீஸ்ரீபாதராஜர், மத்வ நாமாவில் இவ்வாறு கூறுகிறார். 

ஞானி தா பவமான பூதளதொளுத்பவிஸி

மானநிதி மத்வாக்ய நெந்தெனிஸித ||23 

சர்வக்ஞரில்லாத இன்னொருவரால் செய்யப்பட முடியாத வேலையை செய்வதற்கு, பூமியில் அவதரிக்க முடிவு செய்தார் வாயுதேவர். அப்போது, கர்மபூமியான பாரதத்தில் தெற்கு திசையில் பரம சாத்விகரான மத்யகேஹ என்னும் காரணப் பெயருடன் ஒரு தம்பதி வசித்து வந்தனர். ரஜதபீடபுரத்தின் (உடுப்பி) பக்கத்திலிருக்கும் பாஜக அவர்கள் வசித்த க்‌ஷேத்திரம். அந்த பிராமண தம்பதிகள் - வைஷ்ணவர்கள். மிகுந்த கடவுள் பக்தி கொண்ட அன்யோன்ய வாழ்கை வாழ்ந்து வந்தனர். தினமும் புராண, பிரவசனங்களை தவறாமல் செய்து வந்தார் மத்யகேஹர். உடுப்பியின் அனந்தாசனரின் சன்னிதியில், அவரின் சேவைக்காக நிலைத்திருந்த தேவதைகளின் இந்திரியங்க ளுக்கும் இவரது உபன்யாசம் திருப்திகரமாக இருந்தது. 

அந்த தம்பதிகளில் ஸ்ரீலட்சுமி நாராயணரின் சன்னிதானம் வந்தது. சுப முகூர்த்தத்தில், கர்ப்பவதி ஆனார், வேதவதி என்னும் அந்தப் பெண்மணி. அடுத்த பத்தாவது மாதத்தில், பிரசவ காலம் நெருங்கிற்று. அந்த சமயத்தில் முக்ய பிராணதேவர் சரியாக பீமசேனராகி அவதரித்த ஒரு அம்சத்தினால் பூமிக்கு வந்தார். அனந்தாசனரின் முன்பக்கத்தில் இறங்கி அவரை வணங்கி, மத்யகேஹரின் வீட்டுக்கு வந்தார். இதிலிருந்து வாயு தேவருக்கு கர்ப்பவாசாதி தோஷங்கள் (கஷ்டங்கள்) இல்லை என்று தெரியவருகிறது. அதுவரையில் அந்த கர்ப்பத்தில் இருந்து கஷ்டங்களை அனுபவித்த ஜீவனே வேறு. வாயு தேவர் அந்த ஜீவனை வெளியே எடுத்து, தான் உள்ளே பிரவேசித்தார். 

ஹரிகதாம்ருதஸாரத்தில், ஸ்ரீஜகன்னாததாசர், மங்களாசரண சந்தியில், தாரதம்யத்தில் ஸ்ரீமத்வரைப் பற்றி சொல்லும்போது, இவ்வாறு கூறுகிறார். 

க்‌ஷிதியொளகெ மணிமந்தமொதலா

ததிதுராத்மரு ஒந்ததிக விம்

ஷதி குபாஷ்யவ ரசிஸெ நடுமனெயெம்ப பிராம்மணன |

சதிய ஜடரதொளவதரிஸி பா

ரதிரமண மத்வாபிதானதி

சதுரதஷ லோகதொலி மெரெதப்ரதிமகொந்திசுவெ ||8 

மணிமந்தன் முதற்கொண்டு தமோ யோக்யரான தைத்யர்கள் பூமியில் பிறந்து, பிரம்மசூத்திரத்திற்கு 21 குபாஷ்யங்களை இயற்ற, பாரதிபதியான வாயுதேவர், மத்யகேஹ பட்டர் என்னும் பிராமணரின் மனைவியின் வயிற்றில் பிறந்த குழந்தையின் தேகத்தில் பிரவேசித்து, மத்வாசார்யர் என்னும் பெயரால் 14 உலகங்களிலும் புகழடைந்தார். ஒப்புமை இல்லாத (அவரை) வணங்குகிறேன். 

மத்வ விஜய இரண்டாம் சர்க்கத்தைப் பற்றியும், இந்த சர்க்கத்தைப் படிப்பதால் வரும் பலன்களைப் பற்றியும் மாதனூரு ஸ்ரீவிஷ்ணு தீர்த்தர், தமது ஸ்ரீமத் ஸுமத்வவிஜய ப்ரமேய பல மாலிகா கிருதியில் இவ்வாறு கூறுகிறார். 

ஸச்சாஸ்த்ரே தூ3ஷிதே த்3ருஷ்ட்யை: ஸுரப்ரார்த்த2னயா ஹரே: |

ஆக்ஞயா ஜாவதீர்ணஸ்ய த்3விதீயே பா3ல்ய ஸத்கதா2: ||3|| 

துஷ்ட மக்களிடமிருந்து நற்சாஸ்திரங்கள் அழிந்து வந்த நிலையில், தேவதைகளால் பிரார்த்தனை செய்யப்பட்டு, பகவந்தனின் ஆணைப்படி, வாயுதேவர், பூலோகத்தில் அவதரித்தார். இரண்டாம் சர்க்கத்தில், அனேக பால்ய நற்கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. கொள்ளு தானியத்தைத் தின்றது; கடன்கொடுத்தவருக்கு புளியங்கொட்டைகளைக் கொடுத்து, கடனிலிருந்து தந்தையை மீட்டது - ஆகிய விஷயங்கள் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. 

இரண்டாம் சர்க்கம் படிப்பதால் வரும் பலன் : நற்குணங்கள் வளர்தல். 

மத்வ விஜயத்தின் இரண்டாம் சர்க்கத்தின் விஷயத்தை, அடுத்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.

 

****

Saturday, February 26, 2022

ஸ்லோகம் #4: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

 

ஸ்லோகம் #4: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

அரிஸமூஹவ பொஸகி1 தா யது3 வரன சரணாம்பு3ருஹ மது4கர

னுரு பராக்ரமவரிது தி3திஜரு மத்ஸரதி3 உரிது3 |

4ரணியலி புட்டித3ரு து3ர்மத ஸரணி ஹரடு3த ஸேட3னெஸக3லு

மருத3ம்ஷன பீ4மஸேனன சரணவே ஷரணு ||4 

அரி - எதிரி; சமூஹவ - கூட்டத்தினை; பொஸகி - அழித்து; தா - தான் (பீமசேனதேவர்); யது வரன = யது குலத்தில் சிறந்தவனான (ஸ்ரீகிருஷணனின்); சரணாம்புருஹ - பாத கமலங்களை; மதுகர - மலர்களை சுற்றி வரும் தேனியைப் போல; உரு பராக்ரமவரிது - (இத்தகைய பீமசேனதேவரின்) வீர பராக்கிரமங்களை அறிந்து; திதிஜரு - அசுரர்கள்; மத்ஸரதி உரிது - பொறாமையில் எரிந்து; தரணியலி - பூமியில்; புட்டிதரு - பிறந்தனர்; துர்மத ஸரணி - பல கெட்ட சாஸ்திரங்களை; ஹரடுத - பரப்பியவாறு; ஸேடனெஸகலு - பழிவாங்கும் செயலை செய்ய; மருதம்ஷன - வாயுதேவரின் அவதாரமான; பீமஸேனன - பீமசேனதேவரின்; சரணவே சரணு - பாதங்களை நான் வணங்குகிறேன். 

பீமசேனதேவரின் மகிமையை இந்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். எதிரிகளின் கூட்டத்தினை அழித்து, பீமசேனதேவர், யது குலத்தில் சிறந்தவனான ஸ்ரீகிருஷ்ணனின் பாத கமலங்களை, மலர்களை சுற்றி வரும் தேனியைப் போல சுற்றி வந்து வணங்குகிறார். இத்தகைய பீமசேனதேவரின் வீர பராக்கிரமங்களை அறிந்த அசுரர்கள், மிகவும் துக்கமடைந்து, மறுபடி கலியுகத்தில் இதே பூமியில் பிறந்து, அவர்களின் ஸ்வபாவங்களுக்கேற்ப, பல கெட்ட சாஸ்திரங்களைப் படைத்து, தங்களின் பழிவாங்கும் செயலை செய்யத் துவங்கினர். இத்தகைய மகிமைகளைக் கொண்ட, வாயுதேவரின் அவதாரமான பீமஸேனதேவரின் பாதங்களை நான் வணங்குகிறேன் -- என்கிறார். 

கிருஷ்ணாங்க்ரி பங்கேருஹ ப்ருங்கராஜ:

கிருஷ்ணாமுகாம்போருஹ ஹம்ஸ ராஜ: || (1-43) 

மலர்களை சுற்றிவரும் தேனியைப் போல, ஸ்ரீகிருஷ்ணனின் பாத கமலங்களை பீமன் வணங்கினார். திரௌபதியின் முக கமலங்களுக்கு அன்னப்பறவையைப் போல இருந்தார். தனது ஆட்சியில் இருந்த மக்கள் என்னும் கமலங்களுக்கு, சூரியனைப் போல காட்சியளித்து, தனது சகோதரர்களுடன் ஒளிர்ந்தார் - என்கிறார் நாராயண பண்டிதாசார்யர். 

விஷ்வம் மித்யா விபுரகுணவான் ஆத்மனாம் நாஸ்தி பேதோ

தைத்யா இத்தம் வ்யததத கிராம் திக்‌ஷு பூய: ப்ரஸித்திம் || (1-55) 

பீமசேனதேவரின் வீர பராக்கிரமங்களை அறிந்த அசுரர்கள், மிகவும் துக்கமடைந்து, மறுபடி கலியுகத்தில் பிறந்து, தங்களது பழிவாங்கும் செயலை செய்யத் துவங்கினர். ஸ்ரீஹரி குணங்கள் இல்லாதவன். ஸ்ரீஹரி மற்றும் ஜீவர்களுக்கு பேதம் இல்லை என்னும் மாயாவாதிகளின் கருத்து மக்களிடையே பரவத் துவங்கியது. அனைத்து நற்குணங்களையும் பெற்றவனான ஸ்ரீஹரியை, சஜ்ஜனர்களின் மனதிலிருந்து மறையுமாறு அந்த அசுரர்கள் செய்தனர் - என்கிறது மத்வவிஜய முதலாம் சர்க்கத்தின் கடைசி ஸ்லோகம். 

இதையே ஸ்ரீஸ்ரீபாதராஜர் மத்வ நாமாவில் எப்படி சொல்லியிருக்கிறார் என்றால்: 

ஹரிக்ருபெய படெதிர்த்த பீம ஹுங்காரதிம்

தரிய திவ்யாஸ்த்ரகள நெரெ அட்டித ||19 

பீமசேனதேவர் சாட்சாத் முக்யபிராணரின் அவதாரம் என்று மகாபாரதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வாயுதேவர் ருஜுகணஸ்தர். பா4வி (எதிர்கால) பிரம்மன். ஸ்ரீஹரி இவரின் மேல் வைத்திருக்கும் பிரியம் (லட்சுமிதேவியைத் தவிர), வேறு யாரின் மேலும் அவர் வைத்திருக்கவில்லை. 

தானவரு கலியுகதொளவதரிஸி விபுதரொளு

வேனன மதவ நருஹலதனரிது ||23 

28வது த்வாபர யுகத்தில் பீமசேனரின் பெருமையைக் கண்டு பொறுக்காமல், தைத்யர்கள் (தானவர்கள்) அந்த கோபத்தை எப்படியாவது தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று சிந்தித்தனர். ஸ்ரீகிருஷ்ணனின் உதவியால் பீமசேனர் முதலான பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். கலியுகத்தில் ஸ்ரீஹரி அவதரிப்பதில்லை. அப்போது நாமெல்லாம் அங்கு பிறந்து திரௌபதியின் ஸ்தானத்தில் இருக்கும் நற்சாஸ்திரங்களை தவறாக வியாக்யானம் செய்து பிரம்மன் நிர்குணன் என்று பரப்புவோம்என்று தீர்மானித்தனர். 

அதன்படியே தம் பகையை தீர்த்துக்கொள்ள கலியுகத்தில் பிராமண ஜாதியில் அவர்கள் பிறந்தனர். துஷ்ட சாஸ்திரங்களை இயற்றினர். சௌகந்திக வனத்தில் பீமனால் கொல்லப்பட்ட மணிமந்தன் என்னும் தைத்யன் கலியுகத்தில் மறுபடி பிறந்து, எல்லா இடங்களிலும் தவறான ஞானத்தை பரப்பினான். ருத்ர தேவரைக் குறித்து தவம் செய்து, வரம் பெற்று புகழடைந்தான். பிரம்மசூத்ரங்களுக்கு துர்பாஷ்யங்களை இயற்றி தத்வஞானம் மறையுமாறு செய்தான். பாகவத தர்மங்களை நாசப்படுத்தினான். 

இத்துடன் மத்வவிஜயத்தின் முதல் சர்க்கத்தின் ஸாரம் முடிவடைந்தது. அடுத்த ஸ்லோகத்திலிருந்து இரண்டாம் சர்க்கத்தின் விஷயம் தொடங்குகிறது. 

****