லகுமிவல்லப4னாக்3ஞெயனு தா முகுடத3லி வஹிஸுதலி ஸுரவர
நிகரவந்தி3தசரண கபிரூபவனெ தா தாளி |
லகுமி ஸீதெகெ3 ராமசரிதெக3ளகி2லதி3ம் ஸந்தஸவ புட்டிஸி
ஷகுதியிந்த3லி வனதி3 லங்கி4ஸி ரகு4வரன நமிஸி ||1
லகுமிவல்லபன - ஸ்ரீலட்சுமியின் தலைவனான நாராயணனின்; ஆக்ஞெயனு - ஆணையை; தா - தான்; முகுடதலி - தலையில்; வஹிஸுதலி - தாங்கியவாறு; ஸுரவர - சிறந்தவர்களான (ஸ்ரேஷ்டர்களான) தேவதைகளின்; நிகர - கூட்டம்; வந்தித சரண - வணங்கப்படக்கூடிய பாதங்களை (கொண்டவன்); கபி ரூபவனே - ஹனுமந்த ரூபத்தை; தா தாளி - தான் எடுத்து; லகுமி ஸீதெகெ - ஸ்ரீலட்சுமியின் அவதாரமான ஸீதைக்கு; ராமசரிதெகளகிலதிம் - ராம சரிதைகள் போன்றவற்றைக் கூறி; ஸந்தஸவ புட்டிஸி - நம்பிக்கையை ஊட்டி; ஷகுதியிந்தலி - தன் வலிமையினால்; வனதி - அசோக வனத்தினை; லங்கிஸி - அழித்து; ரகுவரன நமிஸி - ஸ்ரீராமனை வணங்கி;ஸ்ரீலட்சுமியின் தலைவனான நாராயணனின் ஆணையை, தன் தலையில் ஏந்தியவாறு, ஸ்ரேஷ்டர்களான தேவதைகளின் கூட்டத்தால் வணங்கப்படக்கூடிய பாதங்களைக் கொண்டவரான ஸ்ரீவாயுதேவர், தான் ஹனுமந்த ரூபத்தை எடுத்து, ஸ்ரீலட்சுமியின் அவதாரமான ஸீதைக்கு (அசோக வனத்தில்) ராம சரிதைகள் போன்றவற்றைக் கூறி, நம்பிக்கையை ஊட்டி, தன் வலிமையினால் அசோக வனத்தினை அழித்து, ஸ்ரீராமனை வணங்கியவாறு (அடுத்த ஸ்லோகத்தில் தொடர்கிறது).
மத்வ விஜயத்தில் 1ம் சர்க்கத்தில் 9 முதல் 27ம் ஸ்லோகங்கள் வரை, ஸ்ரீவாயுதேவரின் முதல் அவதாரமான ஹனுமந்ததேவரின் மகிமைகள் விளக்கப்பட்டுள்ளன. இதையே ஸ்ரீவித்யா பிரசன்ன தீர்த்தர் இங்கு முதல் இரண்டு ஸ்லோகங்களில் சுருக்கி கொடுத்துள்ளார்.
ஸ்ரீவாயுதேவர் தமது முதல் அவதாரத்தில் த்ரேதாயுகத்தில் ஹனுமனாக கேஸரி என்ற வானர வீரருக்கும், அஞ்சனா தேவி என்ற வானரப் பெண்மணிக்கும் குமாரராக அவதரித்தார். முக்ய பிராணர், அஞ்சனா தேவியை ஸ்பர்சம் செய்த மாத்திரத்தில் ஹனுமந்ததேவர் அவதரித்தார். ‘இந்த வானரக் குழந்தை, பிற்காலத்தில் அனைத்து நற்குணங்களின் இருப்பிடமாகவும், மாபெரும் பக்திமானாகவும், ஒளி பொருந்தியவனாகவும் விளங்குவான்’ என்று ஞானிகள் கூறினர். இதையே இந்த மத்வ விஜய ஸ்லோகம் விளக்குகிறது.
யே யே குணா நாம ஜகத் பிரஸித்தா:
யம் தேஷு தேஷுஷ்ம நிதர்ஷயந்தி |
ஸாக்ஷான் மஹாபாகவத பிரபர்ஹம்
ஸ்ரீமந்தமேனம் ஹனுமந்தமாஹு: (1-10)
உலகத்தில் உள்ள அனைத்து நற்குணங்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு என்றால், அது ஹனுமான் (ஹனு என்றால் ஞானம், எல்லையில்லா ஞானம் கொண்டவர் ஹனுமான்) என்று சொல்லலாம்.
தரணி ஸுதனனு காயிது ஷரதியனு ந்யரெதாடி
தரணிஸுதெயள கண்டு தனுஜரொடனெ |
பரதி ரணவனெ மாடி மெலிது திவ்யாஸ்த்ரகள
புரஹிலங்கெய பந்த ஹனுமந்தனு ||
ஸ்ரீஸ்ரீபாதராஜர் இயற்றிய மத்வ நாமா, ஸ்லோகம் #8ல், இதே விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. இத்தகைய மகிமைகளைக் கொண்ட ஹனுமந்ததேவர், ஸ்ரீராமனால் விடப்பட்ட பாணத்தைப் போல, கடலைத் தாண்டி, இலங்கையில் பிரவேசித்து, ஸீதையை சந்தித்து, சூடாமணியைப் பெற்று, அசோக வனத்தை அழித்து, மறுபடி கடலைத் தாண்டி வந்து, ஸ்ரீராமனின் பாதங்களில் விழுந்து வணங்கினார்.
சிறப்புக் குறிப்பு:
1. மத்வவிஜயத்தில் முதல் 8 ஸ்லோகங்களின் ஸாரம் இவ்வாறாக உள்ளது.
காந்தாய கல்யாண குணைகதாம்னே நவத்யுனாத ப்ரதிமப்ரபாய |
நாராயணாய அகிலகாரணாய ஸ்ரீபிராண நாதாய நமஸ்கரோமி || (1-1)
இந்த உலகத்திற்கு நிமித்த காரணனான (efficient cause - அனைத்து மாற்றங்களுக்கும் காரணனான), ஸ்ரீ மற்றும் பிராணதேவருக்கு தலைவனான, மனதை மகிழ்விக்கும்படியான அழகினைக் கொண்ட ஸ்ரீமன் நாராயணனை வணங்கி, முதல் ஸ்லோகத்தில் வியாஸ-கிருஷ்ண ரூபங்களை வணங்கியிருக்கிறார். பிறகு, ஸ்ரீமதாசார்யரின் புகழ் நம் அனைவரின் அஞ்ஞானத்தையும் போக்கி, சுத்தமான ஞானத்தை வழங்கட்டும் என்று வணங்குகிறார். வணங்குதலுக்குரிய தம் தந்தை மற்றும் குருவான ஸ்ரீத்ரிவிக்ரம பண்டிதாசார்யரை வணங்கி, குருபக்தி மிகவும் முக்கியம், இதிலிருந்தே ஹரிபக்தி, ‘முகுந்தபக்த்யை குருபக்திஜாயை’ (1-5) ஆகவே, ஜகத்குருவான வாயுதேவரின் அவதார லீலைகளை வர்ணிக்கிறேன் என்று சங்கல்பம் செய்கிறார். ‘தாம் மந்த்ரவர்ணை: அனுவர்ணனீயாம் சர்வேந்த்ர பூர்வைரபிவக்து காமே’ (1-6) மிகவும் மகிமை பொருந்திய வாயுதேவரின் லீலைகளை வர்ணிப்பது, வேத மந்திரங்களைவிட அழகானது. ருத்ரர் முதலான தேவர்களாலும் வர்ணிக்கப்படுபவை. இதை விளக்குவது தமது தகுதிக்கு அப்பாற்பட்டது என்று தனது தன்னடக்கத்தை வெளிப்படுத்தி, எவ்வளவு முடியுமோ அதற்கேற்ப குருகளின் மகிமைகளை வர்ணித்து ‘மனோவிசுத்தை சரிதானுவாத:’ (1-7), அத்தகைய குருகளின் வர்ணனை நமது மனங்களை சுத்திப்படுத்தட்டும் என்று விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்.
2. ஸ்ரீமத் ஸுமத்வ பிரமேய மாலிகா என்னும் சிறிய கிருதியை இயற்றிய மாதனூரு ஸ்ரீவிஷ்ணு தீர்த்தர், மத்வ விஜயத்தின் 16 சர்க்கங்களை படிப்பதன் பலன்களை சிறப்பாக இதில் கூறியிருக்கிறார். இந்த முதல் சர்க்கத்தின் ஸ்லோகமும், பலனும் இவ்வாறு:
ஸ்ரீமத்4வவிஜயே ஸர்கா3: ஷோட3ஷானுக்ரமாத3ஹம் |
தேஷாம் ப்ரமேயம் வக்ஷ்யாமி ஸங்க்3ரஹேண ப2லம் ததா2 ||1||
ஸ்ரீமத்வவிஜயத்தில் 16 சர்க்கங்கள் இருக்கின்றன. அவற்றின் ஆதாரங்களை மற்றும் ஒவ்வொரு சர்க்கங்களின் பலன்களை இங்கு தொகுத்து சொல்கிறேன்.
ப3ளித்தேத்யாதி3 ஸூக்தோக்தம் வாயோ
ரூபத்ரயம் பரம் |
ப்ரத2மே ப்ரத2மம் ப்ரோக்தம் த்3விதீயம் து தத: பரம் ||2||
பளித்தா சூக்தம், பவமான சூக்தம், இவையே முதலான சூக்தங்களில் வாயுதேவரின் மூன்று அவதாரங்களின் மகிமைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. முதலாம் சர்க்கத்தில் முதலாம் அவதாரரான ஸ்ரீஹனுமந்த தேவரின் மகிமைகளை, பிறகு இரண்டாம் அவதாரரான ஸ்ரீபீமசேன தேவரின் மகிமையை சொல்லியிருக்கிறார்.
ஸன்னிதா4னம் கு3ணவ்யக்தி: ஸ்வரூபஸ்ய நிபோ3த4னம் |
ஸாத4னை: ஷோப4னை: கீர்த்தி: ஷாஸ்த்ர ராஜ்யாபி4ஷேசனம் ||18||
ஸ்ரீமத்சுமத்வவிஜய பாராயணத்தால் வரும் பலன்:
முதல் சர்க்கம் : ஸ்ரீஹரிவாயு குருகளின் சன்னிதானம்
Accurate meaning with simple language Sri harivayu gurugalu Karine dhanyavad
ReplyDeleteExcellent narrative. Thank you
ReplyDeleteclear narration
ReplyDelete