ஸ்லோகம் #3: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
பாண்டு3ஸதி மாருதனு முட்டலு க3ண்டு3தனயன படெ3யலா ஷிஷு
க2ண்டி3ஸிது ஷதஷ்ருங்க3 கி3ரியனு தனுவ ஸங்க3த3லி |
தண்ட3தண்டதி3 ராஜகுவரர புண்ட3ட3கி3ஸி த்ருபத3 த4ரணீ
மண்ட3லேஷன குவரி கரகமலக3ள தா கெ3லித3 ||3
பாண்டுஸதி - பாண்டுவின் மனைவியான குந்திதேவியை; மாருதனு முட்டலு - ஸ்ரீவாயுதேவர் ஸ்பர்ஷம் செய்ய; கண்டுதனய படெயலு - ஆண் மகனை அவள் பெற; ஆ ஷிஷு - அந்தக் குழந்தை (பீமசேனதேவர்); ஷதஷ்ருங்க கிரியனு - ஷதஷ்ருங்க என்னும் மலையை; தனுவ ஸங்கதலி - தன் தேகத்தின் சங்கத்தினால்; கண்டிஸிது - பொடிப்பொடி ஆக்கியது; தண்டதண்டதி - பல சந்தர்ப்பங்களில் (அவ்வப்போது); ராஜகுவரர - துரியோதனன் முதலான அரசகுமாரர்களின்; புண்டடகிஸி - கெட்ட செயல்களை அடக்கி; த்ருபத - துருபதன் (என்னும்); தரணி மண்டலேஷன - பூமியை ஆண்ட அரசனின்; குவரி - மகளின்; கரகமலகள - கைகளை (அவளை); தா கெலித - தான் வென்றான்.
ஸ்ரீமத்வ விஜயத்தில் 1ம் சர்க்கத்தில் 28 முதல் 44 வரையிலான ஸ்லோகங்களில், ஸ்ரீவாயுதேவரின் இரண்டாம் அவதாரரான, ஸ்ரீபீமசேன தேவரின் மகிமைகள் விளக்கப்பட்டுள்ளன. அதையே ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர் சுருக்கி, இரண்டே ஸ்லோகங்களில் (3&4) இங்கு சொல்லியிருக்கிறார்.
பாண்டுவின் மனைவியான குந்தியை ஸ்ரீவாயுதேவர் ஸ்பர்ஷம் செய்ய, பீமன் என்னும் ஆண் மகனை அவள் பெற்றாள். அந்தக் குழந்தை, தன் தேகத்தின் சங்கத்தினால் ஷதஷ்ருங்க என்னும் மலையை பொடிப்பொடி ஆக்கியது. துரியோதனன் முதலான அரசகுமாரர்கள், பல சந்தர்ப்பங்களில், தனக்கு (பாண்டவர்களுக்கு) தொந்தரவு கொடுக்கையில், அவர்களுடைய கெட்ட செயல்களை அடக்கி, பின், த்ருபதன் என்னும் அரசனின் மகளான திரௌபதியினை, (சுயம்வரத்தில்) தான் வென்றான்.
தஸ்யைவ வாயோரவதாரமேனம்
ஸந்தோ த்விதீயம் ப்ரவதந்தி பீமம் || (1-28)
ஸ்ரீவாயுதேவரின் இரண்டாவது அவதாரமே பீமசேனதேவர்.
த்வாபர யுகத்தில் தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக, ஸ்ரீவாயுதேவர் குந்திதேவியிடம் பீமனாக அவதரித்தார். குழந்தையான பீமன், குந்திதேவியின் கையிலிருந்து தவறி கீழே விழ, அங்கிருந்த ஷதஷ்ருங்க மலை உடைந்து தூள்தூள் ஆனது.
கரதிந்த சிசுபாவனாத பீமன பிடலு
கிரிவடெது ஷதஸ்ருங்க வெந்தெனிஸிது ||
அடுத்து, ‘தண்டதண்டதி ராஜகுவரர புண்டடகிஸி’ - துரியோதனன் முதலான அரசகுமாரர்களின் கெட்ட செயல்களை மத்வ விஜயத்தில், ஸ்ரீநாராயண பண்டிதாசார்யர் மிகவும் அழகாக வர்ணித்துள்ளார்.
பீமசேனதேவரின் அதிபராக்ரம வைபவங்களை காணப் பொறுக்காத துரியோதனன், காலகூட விஷத்தை உணவில் கலந்தும், விஷப் பாம்புகளை விட்டு பீமசேனதேவரை கடிக்கச் செய்தும், கங்கை நதியில் மிகவும் அதிகமான ஆழமுள்ள ‘பிரமாண கோடி’ என்னும் மடுவில் தள்ளி விட்டும், கொல்ல முயற்சி செய்தான். இந்த அனைத்து ஆபத்துகளிலிருந்தும், பீமசேனதேவர் மிகவும் அனாயாசமாக தப்பி வந்தார். உலகிற்கே பிராணனான, உயிர் நாடியாக விளங்குபவரை, யார் என்னதான் செய்து விட முடியும்?.
பிரமாண கோடே: ஸ ஹி ஹேளயாகாத்
நேதம் ஜகஜ்ஜீவன தேத்ர சித்ரம் || (1-31).
ஸ்ரீபீமசேனதேவரின் பால லீலைகளை மத்வ நாமா இவ்வாறு
சொல்கிறது.
குருப கரளவனிக்கெ நெரெயுண்டு தேகி ஹஸி
துருககள ம்யாலே பிடலவனொரெஸித || (14)
பீமசேனதேவரின் வலிமையைக் கண்டு, அசுரர்களான துரியோதனாதிகளுக்கு அவர் மேல் துவேஷம் உண்டாயிற்று.
அடுத்து திரௌபதி சுயம்வரம்.
ஸ ஸோதரோsதாsதித ராஜ ஹம்ஸ:
ஸ ராஜ ஹம்ஸீமிவ ராஜ கன்யாம் ||(1-24)
கொக்குகள், காக்கைகள் போன்ற சாதாரண பறவைக் கூட்டங்களை புறக்கணித்து, ஒருவன் அழகான உன்னதமான ராஜஹம்ஸத்தை அடைவதைப் போல, பீமசேனதேவர், துருபத ராஜனின் மகளான திரௌபதியை மணந்தார்.
பல்லிதஸுரர கெலிது திரௌபதிய கைபிடிது
யல்ல ஸுஜனரிகெ ஹருஷவ தோரித (15)
ஸ்ரீவேதவ்யாஸ தேவரின் ஆணைப்படி பாஞ்சால நகரத்தில் திரௌபதியின் சுயம்வரத்தில் அவரைக் கைபிடித்து, சஜ்ஜனர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார் பீமசேனதேவர்.
****
No comments:
Post a Comment