Sunday, June 24, 2018

10/360 இந்த உடல் வீணாகாமல் இருக்கட்டும்

ஜ்யேஷ்ட சுத்த ஏகாதசி
10/360 இந்த உடல் வீணாகாமல் இருக்கட்டும்

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்



தான தர்ம மாடலில்ல, தயபுத்தி புட்டலில்ல
ஞானவரிது ஹரிபூஜெ மாடலில்ல
ஞானி சுக்ஞானிகள சன்னிதியல்லிரலில்ல நிர்ஜல
மனதலி ஒந்து தினவிரலில்ல |
ஏகே பந்த்யோ ஜீவவே ஷரீரதொளு வ்யர்த்தவாகி ||1||

சாதனைக்கான உடலைப் பெற்று வந்த ஜீவி இப்படி இருந்தால் அந்தப் பிறவியே வீண் என்கிறார். அரிதான இந்த பிறவி வந்தபோது, செய்யவேண்டிய கடமைகள் என்ன? இருக்கவேண்டிய முறை எது? என்பதை தெரிவிக்கிறார். அப்படி இல்லையெனில், மனிதனாகப் பிறந்து என்ன பலன் எனக் கேட்கிறார்.

சதி புருஷரு நாவு சந்தோஷதிந்திரலில்ல
யதியாகி தீர்த்தயாத்ரே மாடலில்ல
ஸ்ருதி சாஸ்திரபுராணகள கிவிகொட்டு கேளலில்ல
ம்ருதவாகோ கால பந்து பரிதெ முப்பாதெனல்ல ||2||

கடமை தவறியபோது மனிதனுக்கு சுய-இரக்கம் வரவேண்டும். வாழ்க்கையில் சுகம் வேண்டுமெனில், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். யதிகள் ஒரே இடத்தில் இருக்காமல், எப்போதும் பயணத்தில் இருந்து தத்வஞானத்தை பரப்பவேண்டும். ஸ்ரீவாதிராஜர் இந்தியா முழுக்க பயணித்து ‘தீர்த்தப்ரபந்த’ கிரந்தத்தை இயற்றினார். ஜீவனின் முக்கியக் கடமை - புதிய ஞானத்தைப் பெறுதல்.

உண்டு சுகி அல்ப உட்டுதொட்ட பரிணாம இல்ல
கொண்டு கொட்டு ஹரிசேவே மாடலில்ல
துண்டு நாயியந்தே மனெமனெகள திருகிட்டி
மொண்ட ஜோகிகுணங்கள பிடிஸோ ஹயவதன ||3|| -- ஸ்ரீவாதிராஜர்

பூமியில் இருப்பதால் என்ன பயன்? உலகத்தில் நம்மைக் கொண்டு வந்தவனையே மறந்து, அவன் சேவையை செய்யாமல். தெரு நாய் எப்படி தெருத்தெருவாக உணவிற்காக சுற்றுகிறதோ அப்படி சுற்றுகிறான் ஜீவன் என்கிறார். என்னிடமிருந்து சேவையை செய்வித்து, சேவையைப் பெற்று, என் மேல் தயை காட்டு என்கிறார். இது ஸ்ரீஹரியிடம் கேட்கும்படியான உரிமையான வேண்டுதல். நம் துர்குணங்களை அவனிடம் சமர்ப்பித்து, பிறவிக்கான நற்பயனை பெறுவதற்காக, அவனின் கருணையைப் பெறுங்கள் என்கிறார். மேலே சொன்னதைவிட வேறு வகை மனிதர் இல்லை. அதற்கே ராஜர், எப்படியோ வாழ்ந்து வீணாகாதீர்கள் என்று எச்சரிக்கிறார்.

***

No comments:

Post a Comment