Sunday, June 17, 2018

3/360 ஜ்யேஷ்ட சுத்த சதுர்த்தி

3/360 ஜ்யேஷ்ட சுத்த சதுர்த்தி

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்


ஸ்ரீஹரியின் விஸ்வரூபம்

ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்காக காட்டிய விஸ்வரூபத்தை அர்ஜுனன் எப்படி கண்டான்? ‘பஷ்யாமித்வாம் சர்வதோ அனந்தரூபம்’ என்று அனந்தமாக கண்டதை வர்ணித்தான். திவ்ய கண்களைக் கொடுத்து அர்ஜுனனை பார்க்கச் செய்தான் கிருஷ்ணன்.

விஸ்வதஸ்சக்‌ஷுருத விஸ்வதோமுகோ விஸ்வதோபாஹுருத விஸ்வத:ஸ்பாத் |
ஸம் பாஹுப்யாம் தமதி ஸம் ப்ரதத்ரை: த்யாவாபூமீ ஜனயன் தேவ ஏக: ||
(ரிக் 10-81-3)

கீதையின் 11ம் அத்தியாயத்தின் உரையைப் போல, ஸ்ரீபுரந்தரதாசர் இந்தப் பாடலில் ஸ்ரீகிருஷ்ணின் விஸ்வரூபத்தை வர்ணித்திருக்கிறார்.

அனந்த முகுட அனந்த ஷிரஸ்ஸு அனந்த நயன
அனந்த நாசிக அனந்த கர்ண அனந்த வதன
அனந்த கம்பு அனந்த கந்தர அனந்த ஸ்ரீதேவி
ஸ்ரீகந்த ஸ்ரீவத்ஸ ஸ்ரீதுளசி வைஜயந்தி
மாலெயந்தொப்பிஹன அனந்த | அனந்த
பாஹு முத்ரே அனந்த ஷங்க அனந்த சக்ர
அனந்த வ்ருக்‌ஷ அனந்த குக்‌ஷி அனந்த நாபி
அனந்த கடியு அனந்த ஊரு அனந்த ஜானு
அனந்த ஜங்க அனந்த சரண அனந்த பெட்யதிந்தொ
ப்புவ ஹொரெ ஒளகிப்பனோ புரன்
தர விட்டலராய நொப்ப அனந்த || -- ஸ்ரீபுரந்தரதாசர்

ஸ்ரீகிருஷ்ணனின் விஸ்வரூபத்தின் காட்சியை ஸ்ரீகோபாலதாசர் இவ்வாறு வர்ணிக்கிறார்.

விஷ்வதோ முக நீனே, விஷ்வத: சக்‌ஷு நீனே
விஷ்வதோ பாஹு நீனே, விஷ்வதோ ஹஸ்த நீனே
விஷ்வதோ ஸ்ரவண நீனே, விஷ்வாதாரக நீனே
விஷ்வவியாபக சர்வ விஷ்வமயனு நீனே
விஷ்வ நாமக ஹரி கோபாலவிட்டல
விஷ்வாஸ கொடு நின்ன விஷ்வசரணதல்லி || -- ஸ்ரீகோபாலதாசர்

***

No comments:

Post a Comment