ஜ்யேஷ்ட சுத்த த்வாதசி
11/360 இந்திரியங்களுக்கு பாடம்
ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்
’சஞ்சலோயம் மனோ மீனோ’ - மனம் மீனைப் போல சஞ்சலமானது. இப்படி எல்லா இந்திரியங்களும் தற்காலிக சுகங்களுக்கு பலியாகி புத்தியை மட்டுப்படுத்துகிறது. அதற்கு தாசர், இந்த இந்திரியங்களுக்கு தக்க வேலையைக் கொடுங்கள் என்கிறார்.
எலெ மனவே ஹரித்யானவ மாடோ ||ப||
எலெ ஜிஹ்வே கேளோ கேசவன குணகள பஜிஸோ
எலெ மனவே முரவைரிய நங்க்ரிகள பஜிஸோ
எலெ கரகளிரா ஸ்ரீதரன சேவெய மாடி
எலெ கர்ணங்களிரா அச்யுதன கதே கேளி ||1||
எலெ நேத்ரகளிரா ஸ்ரீகிருஷ்ணமூர்த்திய நோடி
எலெ பாதகளிரா ஹரியாத்ரயனே மாடி
எலெ நாசிகவெ முகுந்தன சரணவர்பர்பிஸித
துளசி பரிமளவன ஆக்ராணிஸி அனுதின ||2||
எலெ ஷிரவே ஸ்ரீ கேளதோக்ஷஜன சிரிரமண
ஜலருஹதொளளியந்தெ பிடதெ ஒல்யாடு
எலெ மனவெ நீனு ஸ்ரீபுரந்தரவிட்டல
சலெ பகுதி ஜனர சங்கதியல்லி பாளு ||3|| -- ஸ்ரீபுரந்தரதாசர்
ஹரிதாச சாகித்யத்தில் தாசர்கள் அனைத்து இந்திரியங்களுக்கும் குறிப்பாக மனதிற்குக் கூறும் அறிவுரை இதுவே. ஸ்ரீஹரி கொடுத்த இந்த சாதன சரீரத்தின் இந்திரியங்களை சரியான வழியில் பயன்படுத்துங்கள் என்று தாசர் வேண்டுகிறார். ‘இந்திரியங்கள சுகத நெச்சதிரு கண்ட்யா’ என்பதும் இதற்காகவே.
தனு ஷுத்தி இல்லதவகெ தீர்த்தர பலவேனு?
மனஷுத்தி இல்லாதவகெ மந்த்ரத பலவேனு?
என்று உடல் தூய்மை இல்லையெனில், எந்த நல்வழியைத் தேர்ந்தெடுத்தாலும் அது வீணே என்கிறார். ஸ்ரீபாதராஜர் ‘என்ன மன விஷயகளல்லி முணுகிதோ என்ன தன்ன விருத்தாப்யவனு இதிதோ ||’ என்று ஸ்ரீஹரியிடம் வேண்டிக் கொண்டதை பார்க்கிறோம்.
இந்திரியங்களை கட்டுப்படுத்துவது என்பது சாதனைகளுக்கான வழி. ஆகவே அந்த இந்திரியங்களுக்கு தக்க பாடம் கற்பிப்போம் என்றார்.
***
No comments:
Post a Comment