ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்
1/360 ஜ்யேஷ்ட சுத்த த்விதியை
உன் சிந்தனையைக் கொடு
***
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்
***
1/360 ஜ்யேஷ்ட சுத்த த்விதியை
உன் சிந்தனையைக் கொடு
‘தாசன மாடிகோ என்ன ஸ்வாமி’, ‘ஹரிஸ்மரணெயில்லதே பாளி பதுகிதரேனு’ என்று புரந்தரதாசரில் துவங்கி பின் வந்த அனைவரும் ஸ்ரீஹரியிடம் இதையே வேண்டினர். இதுவே நம் வேண்டுகோளாகவும் இருக்கவேண்டும்.
அடிகடிகே நா நின்ன அடிகளனே நம்பிதெ
தோரய்யா எனகெ சுசித்த சித்தஜனய்யா
எடபிடதெ நின்னங்க்ரி சென்னாகி பூஜிஸி
எடெகடிப லிங்கவன்னு பந்திஸிகொண்டு
படிவார நின்னவனெம்போ மாதனெ கேளி
சடகரதி மெரெத தாசன்ன மாடய்ய
பிடௌஜபதி சிரி விஜயவிட்டல ஸ்வாமி
பரிஸோ பரிஸோ நின்ன ஸ்மரணே || -- ஸ்ரீவிஜயதாசர்
ஸ்ரீஹரியே, எப்போதும் உன்னையே நம்பியிருக்கிறேன். உன் பாதாரவிந்தங்களையே பிடித்திருக்கிறேன். அனைவருக்கும் அனைத்து காலத்திற்கும் நீயே கதியானதால் உன்னை விடமாட்டேன். என்னை காப்பாற்றும் பொறுப்பு உன்னுடையது. உன் சிந்தனை எனக்கு எப்போதும் இருக்கட்டும். சரணாகத- வத்ஸலனான உன்னிடத்தில் வேண்டுகிறேன்.
த்ராஹி த்ராஹி ஜகன்னாத வாசுதேவ அச்யுதாவ்யய |
மாம் சமுத்தர கோவிந்த துக்க சம்சார சாகராத் ||
நான் உன்னுடையவன் என்று சொல்கிறேன். மகிழ்ச்சியுடன் வலம் வருவேன். என் பேச்சை உறுதிப்படுத்த என்னை தாசனாக ஏற்றுக்கொள். நீ பிடௌஜபதி (தேவதைகளின் தலைவன்). என்னைப் போன்றவர்களை விடாமல் காப்பாற்று. ஏனென்றால் எனக்கு நீயே கதி.
சதா என்ன ஹ்ருதயதல்லி வாசமாடோ ஸ்ரீஹரி ||
நீனே கதி நீனே மதி ஸ்வாமி |
நீனில்லதன்யத்ர தெய்வகள நானரியே || -- ஸ்ரீபுரந்தரதாசர்
இதனை அறிந்து ஸ்ரீஹரியிடம் வேண்டுவது என்னவென்றால் --
சேவகனெலோ நானு, நின்ன பாத சேவே நீடெலோ நீனு || -- ஸ்ரீவாதிராஜர்
இதைப் போலவே - ஸ்மரணெயொந்தே ஸாலதே கோவிந்தன நாம ஒந்தே ஸாலதே - என்று தாசர்கள் தழுதழுத்த குரலில் வணங்கி, ஸ்ரீஹரியின் அருளைப் பெற்றனர்.
No comments:
Post a Comment