ஜ்யேஷ்ட சுத்த சஷ்டி
5/360 - ஸ்ரீமோகனதாசரின் புண்யதினம்
ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்
5/360 - ஸ்ரீமோகனதாசரின் புண்யதினம்
ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்
மோஹபய துக்காதி தூரம் லோஹலோஷ்ட சமீக்ஷணம் |
மாஹிதாங்க்ரி சரோஜ ப்ருங்கம் மோஹனார்ய குரும் பஜே ||
விஜயதாசருக்குப் பிறகு ஹரிதாச பரம்பரையை முன்னெடுத்தவர்களில் மோகனதாசரும் ஒருவர். விஜயதாசரின் வளர்ப்பு மகன், செல்ல மகன் தவிர ப்ரிய சிஷ்யனும் ஆகி, உயிர் இருக்கும்வரை குருவின் சேவையைச் செய்த மகான். மோகனவிட்டல அங்கிதத்தில் பற்பல பாடல்களை இயற்றி சாகித்யத்தை வளர்த்தார். 217 பத்திகளுடைய தாசரின் தீர்க்க க்ருதி - கோலு ஹாடு - பல அற்புத விஷயங்களை உள்ளடக்கி புகழ்பெற்றிருக்கிறது. பின்வந்த ஹரிதாச பரம்பரையினர் இவரை பக்தியுடன் வணங்கி தன்யர் ஆகியிருக்கின்றனர். ‘யுக்தியல்லி மோஹன்னா’ என்று பெயர் பெற்ற தாசர், தம் வளர்ப்புத் தந்தை - குருவான விஜயதாசரை பற்பல பாடல்களில் புகழ்ந்துள்ளார். பலருக்கு தாசதீட்சையைக் கொடுத்து பரம்பரையை வளர்த்தார். இன்னும் இவரின் பரம்பரையினர், விஜயதாசர கட்டெயில் அவரது சேவையை செய்து வருகின்றனர். இவரின் காலம் கிபி 1728-1815.
மோகனதாசரைக் குறித்து பாடிய பிராணேசதாசரின் பாடல்.
பாஹி பாஹி பாஹி குரு | குரு
மோஹன ராய பாஹி பாஹி ||ப||
பாஹி பாஹி குருமோஹன சிந்தூர
ஸ்ரீஹரி பாத பங்கேருஹ பஜக ||அப||
நவவித பகுதியிந்து சரபளிகளொளு
நவனவ ரூபதி நலிவ சுதீர ||1||
பதுமனாபன த்யானவ மதவேரி
பதோபதிகெ ஹரிபதாவகாஹே ||2||
விஜயதாசர பதரஜவ தரிசி நீ
ரஜ ப்ராணேச விட்டலனிரிசிதி ||3||
இவரது சுமார் 80 பாடல்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றில் சில தத்வங்கள் நிறைந்த நீண்ட பாடல்கள் ஆகும். ஸ்ரீவிஜயதாசர் கட்டெயில் சுமார் 60 ஆண்டுகள், கோபாலகிருஷ்ணனை பூஜித்த தன்யர். இவரது கட்டெயும் அங்கேயே இருப்பது சிறப்பு. பல க்ஷேத்திரங்களை தரிசித்து, தாச தர்மத்தை பரப்பினார். தீர விட்டலர் - அலவபோதர தத்வனெலெ எந்தே பரிசுதலி இருள்ஹகலு நித்ய ஸ்மரிஸி - என்றால், பிராணேச தாசர் - நவவித பகுதியிந்து சரபளிகளொளு, நவ நவ ரூபதி நலிவ சுதீரா - என்று வர்ணிக்கிறார்.
***
Thank you for the information and
ReplyDelete