2/360 ஜ்யேஷ்ட சுத்த த்ருதியை
ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்
பலவிது பாளுதக்கே
வாழ்க்கை அழகாவதற்கும், சத்கர்மங்கள் நிறைவேறவும்; சாதனைகள் நற்பலன்களைக் கொடுப்பதற்கும் தேவையான வழிமுறைகளை 27 பத்திகளில் பொதித்து, சஜ்ஜனர்களுக்கு அறியவைத்த மஹானுபாவர் ஸ்ரீஜகன்னாததாசர். அவரது அபூர்வமான கிருதியே ’பலவிது பாளுதக்கே’. அவரது சிறந்த கிருதியான ஹரிகதாம்ருதசாரத்தின் சுருக்கமாக வந்த இந்த கிருதியை அணுஹரிகதாம்ருதசாரம் எனலாம். வாழ்வதற்கு உண்மையான பலன் என்ன என்பதை விவரிக்கிறார். தத்வங்களின் குவியல் இதில் உள்ளது. சில பத்திகளை மட்டும் பார்ப்போம்.
பலவிது பாளுதக்கே சிரி
நிலயன குணகள திளிது பஜிசுவுதே ||
அற்புத மற்றும் எண்ணிக்கையற்ற நற்குணங்களைக் கொண்ட லட்சுமிபதியான ஸ்ரீஹரியை தெளிவாக அறிந்து அதை போற்றுவதே வாழ்க்கையின் பொருள். உலகமே இவன் கீழ் இயங்குகிறது. அனைத்து ஜீவிகளும் இவனின் சேவகர்கள். தக்க ஆதாரங்கள் மூலம் தெரிந்து போற்றுவதே - பலவிது பாளுதக்கே. மனிதனாப் பிறந்து வாழ்வதற்கு உண்மையான பலன் இதுவே.
ஸ்வோச்சித கர்மகளாசரிசுத பலு
நீசரல்லிகே போகி யாசிஸதே...
இது வேதங்களின் செய்தி. அனைவரும் தங்கள் ஆசிரமத்திற்கு தக்கவாறு நடக்கவேண்டும். என்றும் எதற்கும் யாரிடமும் கையேந்தக்கூடாது. ஏனெனில் அனைத்து ஜீவர்களையும் காப்பாற்றுபவன் ஸ்ரீஹரி.
துச்ச விஷயகள இச்சைசதே
யத்ருச்சா லாபதிம் ப்ரோச்சனாகுவுதே ||
‘தேனத்யக்தேன புஞ்ஜீதா’ - ஸ்ரீஹரி கொடுத்ததை வைத்து திருப்தியாகு. நான் ஸ்ரீஹரியின் தாசன் என்று கர்வத்துடன் சொல். இந்த உலகம் உண்மை. எப்போதும் நம் சிந்தனை இப்படி இருக்கட்டும்.
ஹ்ருதயதி ரூபவு வதனதி நாமவு
உதரதி நைவேத்யவு சிரதி
பதஜல நிர்மால்யவனே தரிஸி
கோவிதர சதன ஹெக்கணவ காயுவுதே -- பலவிது பாளுதக்கே
‘சங்கவாகலி சாது சங்கவாகலி’ என்பது போல் சஜ்ஜனர்களின் நட்பு இருக்கவேண்டும். இது ஸ்ரீஹரியைப் பற்றிய ஞானத்தை வளர்க்கிறது. சூர்யந்தர்கதனான ஸ்ரீஹரியை, காயத்ரி மந்திரத்தின் மூலம் நினைக்க வேண்டும். பிறவி எடுத்ததன் பலன் இதுவே என்கிறார். அனைத்தையும் ஸ்ரீஹரிக்கே அர்ப்பிக்க வேண்டும்.
‘க்ளேஷானந்தகள் ஈஷாதீன’ - சுக, துக்கங்களுக்கும் ஸ்ரீஹரியே காரணன். லட்சுமி, பிரம்மாதிகள் அவனது சேவகர்கள். அனைத்து ஜீவர்களுக்கும் தலைவனான ஸ்ரீஹரியை யாரும் முழுமையாக அறியமுடியாது. இப்படி அறிவது இப்பிறவியின் பலன். அனைத்து நற்குணங்களைப் பெற்றிருப்பவனும், விராட ரூபத்தைக் கொண்டவனுமான ஸ்ரீஹரிக்கு சமமோ, உத்தமரோ யாரும் இல்லை. அனைத்து வேதங்களாலும் புகழப்படுபவன். அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கும் ஸ்ரீஹரி, அனைவரிலும் அடங்கியிருக்கிறான்.
பவனமதானுகரவனா...
மகிழ்ச்சியைக் கொடுக்கும் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர் என்னும் கர்வம் நமக்கு இருக்கவேண்டும். பிறவி எடுத்ததன் பலன் இதுவே. செய்பவன் & செய்விப்பவனாக இருக்கும் ஸ்ரீஹரி, அனைவருக்கும் வலிமையைக் கொடுப்பவனாக இருக்கிறான்.
பிரதிதிவஸதி ஸ்ருதி ஸ்ம்ருதிகளிந்த...
படைத்தல், காத்தல், அழித்தலுக்குக் காரணனான ஸ்ரீஹரி, அனைத்து வேதங்களாலும் போற்றப்படுகிறான்.
பன்னகாசல சுனன்னிவாச பாவன சரித சத்குண பரித |
ஜன்யஜனக லாவண்யேக நிதி ஜகன்னாதவிட்டல நான்யனெம்புதே ||
பலவிது பாளுதக்கே
பவித்ரமான சரித்திரத்தைக் கொண்ட ஸ்ரீஹரியின் ஞானத்தைப் பெற்று நாம் பவித்ரம் ஆவோமாக.
இப்படி பல ஆதாரங்களுடன் கூடிய, 27 பத்திகளைக் கொண்ட இந்த கிருதியை மனப்பாடம் செய்து, இதன் பொருளை உணர்ந்து, அதன்படி நடந்து, ஸ்ரீஜகன்னாதவிட்டலனின் கருணைக்கு பாத்திரர் ஆவோமாக.
***
Very useful message thanks.
ReplyDelete