Friday, June 22, 2018

8/360 சஜ்ஜனர்களின் நட்பு கிடைக்கட்டும்

ஜ்யேஷ்ட சுத்த நவமி

8/360 சஜ்ஜனர்களின் நட்பு கிடைக்கட்டும்

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்


சஜ்ஜனர் = சான்றோர் / அறிஞர்.

‘சங்கவாகலி சாது சங்கவாகலி’ இதுவே அனைத்து சஜ்ஜனர்களின் வேண்டுகோளாகும். வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் இது மிகவும் முக்கியமாகும். புரந்தரர் - ‘சாது சஜ்ஜன தொளகிருவுதே ஹப்ப’ என்று கொண்டாடுகிறார். 

சஜ்ஜனர சங்க நீடோ சர்வபாலகனே
முத்து கோபிய கந்த மூர்ஜகதொள் வந்த்ய
துஷ்டஜன சிக்‌ஷகனே சிஷ்யர சம்ரக்‌ஷகனே
இஷ்ட பலதாயக இந்திரே காந்தனே
கஷ்ட தாரித்ர்ய சம்ஹார பய பேதகனே
ஸ்ருஷ்டிஸ்திதிலய கர்த்ரு யுதிஷ்டிரனனனுஜன சகனே || -- ஹரபனஹல்லி பீமவ்வா

ஹரிதாசி பீமவ்வா ‘சஜ்ஜனர சங்க நீடோ’ என்று வேண்டினால், ஸ்ரீவியாசராஜர் - 

அச்யுதாங்க்ரி நிஷ்டர யத்ருச்சா லாப துஷ்டர |
நிஸ்சயாத்ம ஞானவுள்ள அச்ச பாகவதர || நட்பு இருக்கட்டும் என்றார்.

பாகவதரே, பகவந்தனின் ஞானத்தை தெரிவியுங்கள். அவனின் தரிசனத்திற்காக வழி காட்டுங்கள். ஸ்ரீஹரியின் பிரதிபிம்பரானவர் ஸ்ரீமதானந்த தீர்த்தர். பிறகு, அந்த பரம்பரையில் வந்த யதிகள், தாசர்கள்.

ஹரிதாசர சங்கதிந்த
ஹரி நின்ன சங்கவாயிதோ எனகெ
தந்தெ முத்துமோகன விட்டலா || - தந்தெமுத்துமோகனதாசர்

ஹரிதாசரின் நட்பினால் ஆகும் பலனை புரந்தரதாசர் இப்படியாக வர்ணிக்கிறார்.

ஹரி ஷரணரென்ன மனெய மெட்டிலு மனெ பாவன்னவாயிது
ஹரி ஷரணரென்ன கூட மாதனாடலு தனு பாவனவாயிது
ஹரி ஷரணரென்ன மனெகெ பந்தரெ என்ன இப்பத்தொந்து குல பாவன்னவாயிது
ஹரி ஷரணரெனகெ கதி ஹரிஷரணரெனகெ திஷெ
புரந்தரவிட்டலா கதுகின வீர நாராயண || -- ஸ்ரீபுரந்தரதாசர்

தினகளனு களெவ ஜனரே சுஜனரு |
வனஜனாபன தாசஜன சமாகமதிந்தா || -- ஸ்ரீவாதிராஜர்

***


No comments:

Post a Comment