Tuesday, March 6, 2018

2/12 ருஜு ஜீவிகள்

2/12 ருஜு ஜீவிகள்

ஐந்து பரிசுத்த தேவதைகள்
கன்னடப் புத்தகம்
மூலம்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்



கேள்வி: ருஜு ஜீவிகள் என்றால் யார்?

பதில்: பிரம்மபதவிக்கு யோக்யரான ஜீவர்கள், ருஜுகள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் அநாதி காலத்திலிருந்து (துவக்கம் இல்லாத காலத்திலிருந்து) தோஷங்கள் இல்லாதவர்கள். நற்குணங்கள் நிரம்பியவர்கள். ஸ்ரீஹரியை வணங்குவதில் மிகுந்த உற்சாகம் அடையாதவர்கள் என்னும் தோஷத்தைத் தவிர, வேறு எந்த தோஷங்களும் இல்லாதவர்கள். உலகத்தின் படைத்தல், காத்தல் ஆகியவற்றை தம்முடைய வாழ்க்கையில் செய்கிறார்கள். உலகத்தைப் பற்றிய மொத்த அறிவையும் பெற்றிருக்கிறார்கள். இவர்களின் அறிவானது, மோட்சத்திற்குப் போகும் வரைக்கும் தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டேயிருக்கிறது. 

கே: உலகத்தின் விஷயங்களைப் பற்றிய மொத்த அறிவையும் பிரம்மதேவர் பெற்றிருக்கிறார் என்றால், ஸ்ரீஹரிக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்?

ப: ஸ்ரீஹரி மற்றும் லட்சுமி இவர்கள் இருவர்களைத் தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும், ருஜுகள் மொத்த அறிவைப் பெற்றிருக்கிறார்கள். ஆனாலும்கூட, அவற்றைப்பற்றி சிந்தித்தால் மட்டுமே, அவற்றின் முழுத்தகவல்களைப் பற்றி தெரிந்துகொள்கிறார்கள். ஆனால், லட்சுமிதேவி அவற்றைப்பற்றி சிந்திக்கவில்லை என்றாலும் அனைத்தையும் அறிந்திருக்கிறார். இந்த வேறுபாட்டினை நாம் கண்டிப்பாக அறிந்திருக்கவேண்டும். அதைப்பற்றி சிந்திக்கவில்லை என்பதால் மட்டும், அது அஞ்ஞானம் என்று சொல்லமுடியாது. 

கே: அப்படியென்றால், சிந்தனை செய்யாத நேரங்களில், ருஜுகள் அஞ்ஞானிகள் என்று ஆகிறது. ஏதோ ஒரு கணத்தில் இவர்கள் அஞ்ஞானிகளே என்றாலும், இவர்களில் ‘சதுர்தச லோக குருத்வ’ (பதினான்கு லோகங்களுக்கும் குரு என்னும் பதவி) வருவதற்கு எப்படி சாத்தியம்?

ப: சிந்தனை செய்யவில்லை என்றாலும், ஒரு பொருளைப் பற்றிய அறிவு இல்லையென்றால் மட்டுமே, குருத்வ’த்திற்கு பங்கம் வருகிறது. எப்போது வேண்டுமென்றாலும் அந்த அறிவை பயன்படுத்திக்கொள்ளும் சாமர்த்தியம் இருந்தால், குருத்வ’த்திற்கு எந்தப் பிரச்னையும் வருவதில்லை. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் அந்த அறிவைப் பெறும் திறன் உள்ளவர்கள் ஆகையால், அவர்களுக்கு அஞ்ஞான தோஷம் வருவதில்லை. 

கே: சம்சாரத்தில் இருக்கும் பிரம்மாதி தேவர்களுக்கும், மோட்சத்தில் இருக்கும் பிரம்மாதி தேவர்களுக்கும் என்ன வித்தியாசம்? சார்வக்ஞத்வ (அனைத்து அறிந்தவர்கள்) என்பது இந்த இருவருக்கும் பொருந்தும்தானே?

ப: அனுவியாக்யான கிரந்தத்தில் ஸ்ரீமதாசார்யர் இதற்கு பதிலளிக்கிறார். ‘ருஜுணாம் ஏக ஏவாஸ்தி பரமோத்ஸாஹ வர்ஜனம்’. இந்த வாக்கியத்தின்படி ருஜுகளுக்கு ‘பரமோத்ஸாஹ வர்ஜனம்’ என்ற ஒரே ஒரு தோஷம் உள்ளது. இந்த தோஷமானது மோட்சத்தில் இருக்கும் பிரம்மாதி தேவர்களுக்கு இல்லாத காரணத்தினால், சம்சாரத்தில் இருக்கும் பிரம்மாதி தேவர்களுக்கும், மோட்சத்தில் இருக்கும் பிரம்மாதி தேவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. 

கே: ’பரமோத்ஸாஹ வர்ஜனம்’ என்றால் சுகத்தை அனுபவிக்கும்போது, ருஜுகள் மகிழ்ச்சி அடையமாட்டார்கள் என்றுதானே பொருள்? இது எப்படி தோஷமாகும்?

ப; ஸ்ரீஹரிக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளிலும் அதிகப்படியான மகிழ்ச்சி இருப்பதில்லை என்பதே இதன் பொருள். மோட்சத்தில் இருக்கும் பிரம்மாதி தேவர்கள் ஸ்ரீஹரிக்கு செய்யப்படும் அனைத்துவித பூஜைகளிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். இது ருஜுஜீவிகளுக்கு இருப்பதில்லை. பால் பொங்கி வரும்போது எப்படி அதிக அளவாகக் காணப்படுகிறதோ, அதைப்போல மோட்சஜீவிகளுக்கு இருக்கும் உற்சாகமும் அதிகரிக்கிறது. ஆனால், இந்த அதிகப்படியான உற்சாகமானது சம்சாரத்தில் இருக்கும்போது அவர்களுக்கு இருப்பதில்லை. இந்த ஒரே ஒரு வித்தியாசத்தைத் தவிர, வேறு எந்த வித்தியாசமும் ருஜுகளில் இருப்பதில்லை எனத் தெரிய வேண்டும். 

கே: ருஜுகளுக்கு எப்போது அபரோக்‌ஷம் (முக்தி நிலை) கிடைக்கிறது?

ப: தேவதைகளுக்கு அபரோக்‌ஷ ஞானம் கிடைத்தபிறகு, தேவதா பதவி கிடைக்கிறதென்பது தெரிந்த விஷயம். ஆனால் ருஜு ஜீவிகளுக்கு அப்படியல்ல. இவர்கள் நித்ய-அபரோக்‌ஷிகள் (என்றைக்கும் அபரோக்‌ஷிகள்). ஆகையால் இவர்களை என்றைக்குமான அபரோக்‌ஷி ஞானிகள் என்று அழைக்கின்றனர். ருஜு பதவிக்கு வந்தபிறகு விசேஷ-அபரோக்‌ஷ-ஞானிகள் என்று அழைக்கப்படுகின்றனர். 

கே: ருஜுஜீவிகள் 200 கல்பங்களாக சாதனை செய்துவருகின்றனர். அதற்கு முன்னர் அவர்கள் அஞ்ஞானிகளாக இருந்தனரா?

ப: தவறு. அனைத்து ருஜுஜீவிகளும் அனாதி-காலத்திலிருந்து அபரோக்‌ஷ ஞானிகளாகவே இருக்கின்றனர். சாதாரண அபரோக்‌ஷம் இருப்பதனால், ஞானிகள் பூர்ணவாதத்திற்கு கவனம் கொடுப்பதில்லை என்று சொல்லக்கூடாது. செல்வச் செழிப்பான துவாரகா நகரத்தை ஸ்ரீகிருஷ்ணன் மேலும் செழிப்பாக்கினான் என்பதுபோல, ருஜுகளின் ஞானமானது முதலிலேயே முழுமையாக இருந்தாலும் மறுபடி மேலும் வளர்ந்தது. 

கே: ருஜுஜீவிகளின் காலம் 200 பிரம்மகல்பத்தின் அளவு என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. வேறு சில இடங்களில் இது 100 கல்பங்கள் என்று சொல்கின்றனர். இதில் எது சரி?

ப: ஒவ்வொரு ருஜுஜீவிகளுக்கும் 200 கல்ப சாதனை இருக்கிறது. முதல் 100 கல்பங்களில் ஹரி தியானத்தில் மட்டுமே ஈடுபட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் ருஜு என்றே பெயர் இருக்கிறது. பிறகு 101வது கல்பத்திலிருந்து பிரம்மபதவிக்கு தேவையான விசேஷ சாதனை துவங்குகிறது. 101வது கல்பத்திலிருந்து கல்கி, சுதேஜ ஆகிய பெயர்களை பெறுகின்றனர். 99வது கல்பத்தில் வாயு என்ற பெயரையும், 100வது கல்பத்தில் பிரம்மா என்ற பதவியையும் பெறுகின்றனர். 

கே: பிரளயகாலத்தில் ருஜுஜீவிகளுக்கு சுஷுப்தி (தூக்க நிலை) இருக்கிறதென்று ‘சுஷுப்தி ஸம்ஸ்தான் ப்ரம்மாதிகான் கலிபரான் மனுஜான் தத்யைக்‌ஷத்’ என்று ஸ்ரீமதாசார்யரே சொல்லியிருக்கிறார். ஆகையால் இவர்களுக்கு அனைத்து நேரங்களிலும் ஸ்ரீஹரியின் சிந்தனை இருக்கிறது என்று எப்படி சொல்கிறீர்கள்?

ப: ‘சுஷுப்தி ஸம்ஸ்தான் பிரம்மாதிகான்’ என்ற வாக்கியத்தில், பிரம்மாதிகான் என்றால், ’பிரம்மனிடமிருந்து தொடங்கி அனைவரும்’ என்று அறியவேண்டும். பிரம்மனை இங்கு விட்டுவிடக்கூடாது. இப்படி ’எதிலிருந்து’ என்று சொல்கிறோமோ, அதை விட்டுவிடாமல் ’அதிலிருந்து’ என்று பொருள் கொள்வதற்கு ‘அதத்குண சம்விஞ்ஞான’ என்று பெயர். 

கே: அப்படியென்றால், ஐதரேய பாஷ்யத்தில் ‘சுப்தாஸ்தத்ர யதோ ஜீவா: ப்ரஹ்ம ருத்ர புரஸ்ஸரா:’ என்று பிரம்மருத்ரர் முதலான அனைவரும் தூங்குவதாக தெளிவாக சொல்லியிருக்கிறாரே? இதை எப்படி பொருள் கொள்ளவேண்டும்?

ப: ஸ்ருஷ்டிகாலத்தில் பிரம்மன் ஸ்ரீஹரியின் விஷயத்தில் மட்டுமல்லாமல், உலகத்தின் விஷயங்களிலும் அனைத்தையும் அறிந்தவராக இருக்கிறார். ஆனால், பிரளயகாலத்தில் வெறும் ஸ்ரீஹரியைப் பற்றிய சிந்தனைகளில் மட்டும் இருக்கிறார். ஆகையால், பிரம்மன் தூக்க நிலையில் இருக்கிறார் என்றால், தியானத்தில் இருக்கிறார் என்று மட்டுமே பொருள். ஆனால் மற்ற ஜீவர்கள் தூக்க நிலையில் இருக்கிறார்கள் என்றால், ஸ்ரீஹரியைக்கூட மறந்திருக்கின்றனர் என்று பொருள்.

கே: அப்படியென்றால் பிரம்மதேவரின் சரீரம் சுத்த-சாத்வீகாத்மக தேகம் இல்லையா?

ப: முக்தியில் இருக்கும் பிரம்மதேவரின் சரீரம் மட்டுமே சுத்த-சாத்வீகாத்மக தேகம் ஆகும். சம்சாரத்தில் இருக்கும் பிரம்மதேவரின் சரீரம் சுத்த-சாத்வீகாத்மக தேகம் இல்லை. ஆகையாலேயே, ஹரிகதாம்ருதசாரத்தில் அவருக்கு ‘சத்வப்ரசுர’ என்னும் பெயரை வழங்கியிருக்கிறார்கள். 

‘சத்வசஸ்த்வ மஹாசத்வ சூக்‌ஷ்மசத்வஷ்ச துர்முக:’ என்னும் ஆதாரத்திலிருந்து இந்திராதி தேவதைகளின் சரீரம் சாத்விகமாக இருக்கிறது என்று தெரியவருகிறது. இவரைவிடவும், கருட, சேஷாதிகளின் சரீரம் இன்னும் சாத்விகம். பாரதி சரஸ்வதியரின் சரீரம் மகாசாத்விகமானது. பிரம்ம வாயுகளின் சரீரம் சூக்‌ஷ்ம-சாத்விகமானது என்று அறியவேண்டும். 99% சத்வகுணம் இருந்து, மீதி 1%ல் - 90% ரஜோகுணம் மற்றும் இதில் மீதி 10%ல் தமோகுணங்கள் உள்ளன. இவை இரண்டும் இருந்தாலும், அவை எந்த (அவற்றின்) வேலையையும் செய்வதில்லை. 

கே: வெறும் பிரம்மவாயுகளின் சரீரம் மட்டுமே இப்படியா அல்லது அனைத்து ருஜுகணஸ்தர்களின் சரீரமும் இப்படியே சொல்லவேண்டுமா? இந்த ருஜுகணர்களிடம் ஏதேனும் வித்தியாசம் உண்டா?

ப: அனைத்து ருஜுகணர்களின் சரீரமும் இப்படிதான் இருக்கிறது. 100 பேர் உள்ள ருஜுகளில் எந்தவித தாரதம்யமும் இல்லை. ஆனால் பதவியைப் பொறுத்தவரை, வாயுதேவர் அனைவரையும்விட உத்தமராக உள்ளார். அவரைவிட பிரம்மதேவர் உத்தமராக உள்ளார். சாதனை மற்றும் பதவி ஆகியவற்றின்படி ருஜுகணத்தின்-அரசர் என்று இவர்களை பெயரிட்டு அழைக்கின்றனர். வேதங்களில் போற்றப்படும்போதும், அபிமானியாக இருப்பதில், குணங்கள் நிரம்பியவற்றில் அனைத்து ருஜுகணர்களும் சமமாகவே இருக்கின்றனர். 

கே: பிரம்மதேவர் சர்வக்ஞர் (அனைத்தையும் அறிந்தவர்) ஆனபிறகு, ஸ்ரீஹரியைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்கிறாரா?

ப: பிரம்மதேவருக்கு ஸ்ரீஹரியைப் பற்றிய கருத்துகளில் அஞ்ஞானம் இல்லாதிருந்தாலும், சிற்சில விஷயங்களில் (அபாவரூப) அஞ்ஞானம் இருக்கின்றது. லட்சுமிதேவியைப் போலவே இவருக்கும் ஸ்ரீஹரியைப் பற்றிய விஷயங்கள் அனைத்தும் தெரிவதில்லை. ஆகவே, லட்சுமிதேவிக்கு அபாவரூபமான அஞ்ஞானம் எப்படி இருக்கிறதோ, அதைப்போலவே இவருக்கும் அபாவரூபமான அஞ்ஞானம் உள்ளது என்று தெரிந்துகொள்ள வேண்டும். 

கே: பிரம்மதேவரின் லிங்கசரீரம் தக்தபடாயமாக இருக்கிறது என்கிறார்கள். இதற்கு என்ன பொருள்?

ப: ஒரு துணியை நெருப்பில் சுட்டால் எப்படி இருக்கிறதோ, அதைப்போல இவரது லிங்கதேகமும் உள்ளது என்று பொருள். ஆனாலும்கூட எந்த செயலையும் செய்வதில்லை என்பது இதன் கருத்து. அதைப்போலவே இவரது லிங்கதேகமும்கூட இவர்மேல் எந்த மாற்றத்தையும் கொண்டு வருவதில்லை. 

கே: அபரோக்‌ஷ ஞானிகளின் சரீரம்கூட தக்தபடாயமாக இருக்கிறது என்கிறார்கள். அப்படியென்றால் பிரம்மதேவரின் சரீரத்திற்கு என்ன விசேஷம் உள்ளது?

ப: அபரோக்‌ஷ ஞானிகளின் சரீரம் தக்தபடாயமானதாக மாறுவது, அவர்கள் அபரோக்‌ஷ ஞானம் பெற்றபிறகு. ருஜுகள் அனாதி (துவக்கம் இல்லாத) காலத்திலிருந்து அபரோக்‌ஷ ஞானிகள் ஆவர். கூடவே, ‘தக்தபடாயமான’ நிலையில் தாரதம்யம் உள்ளது. ஆகையால், இருவரின் லிங்கதேகத்தையும் சரிசமம் என்று பார்க்கக்கூடாது. 

கே: ருஜுகளில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தேகங்கள் உள்ளன? அனைவருக்கும் இது ஒரே மாதிரியாக இருக்கும்தானே?

ப: ஜீவாச்சாதிக, பரமாச்சாதிக என்று இரு தேகங்கள் உள்ளன. ஜீவாச்சாதிக என்றால் பாவரூப அஞ்ஞானம் என்று பொருள். இது பிரம்மனின் உபதேசத்தால் நாசமடைகிறது. பரமாச்சாதிக, ஸ்ரீஹரியின் விருப்பத்தின் பேரில், அடுத்த கல்பத்தின் துவக்கத்தில் ஸ்ரீஹரியின் மூலமாகவே நாசமடைகிறது. ஆனால், பிரம்மதேவருக்கு பாவரூப-அஞ்ஞானமே இல்லாததால், ஜீவாச்சாதிக என்னும் தேகமே இருப்பதில்லை. பிரம்மனின் கீழ் கட்டுப்பட்டு இருக்கும் அஞ்ஞானமானது, அவரை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை. 

கே: வாயுதேவரை குருவாக நினைப்பதே நம்மில் வழக்கமாக உள்ளது. பிரம்மனை குருவாக நினைப்பது வழக்கத்திலேயே இல்லை. பெரிய தத்வஞானிகள், தபஸ்விகள் கூட பிரம்மதேவரை விட்டுவிடுகிறார்கள். பிரம்மதேவரைக் குறித்து ஜெபம், பூஜை, பாராயணம், நமஸ்காரம், விசேஷ ஆராதனைகளை செய்வதும்கூட நம்மில் இல்லை. இது தப்பில்லையா?

ப: பிரம்மதேவரை எப்போதும் நினைத்திருக்கவே வேண்டும். ’பரசித்தவ்ருத்தேர ப்ரத்யக்‌ஷர்வாத்’ என்ற வாக்கியத்தின்படி சாதகர்கள் (சாதனை / நற்செயல்களை செய்பவர்கள்) நினைப்பது, மற்றவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை. அவர்கள் சிந்திப்பதே இல்லை என்பதும் ஆதாரமில்லாதது. பிராணதேவருக்கு சிலை வைத்து பூஜிப்பது உண்டு, அவதாரங்கள் உண்டு, சர்வமூலத்தை இயற்றியிருப்பதால் விசேஷமாக அவரை பூஜிக்கவேண்டியது நம் கடமை. இதற்கேற்பவே தத்வஞானிகள் பூஜிக்கிறார்கள். பிரம்மதேவருக்கு சிலை வைத்து பூஜிப்பது இல்லை. அவதாரங்கள் இல்லை. 

மனிதனால் உருவான, யாராலும் உருவாகாத வேதங்களை உலகிற்கு பிரம்மரூபத்தினால், சனகாதிகள், நாரதரின் மூலமாக உபதேசித்திருப்பதால், அந்த வேதங்களைப் படிப்பது, அவற்றைக் கேட்பது இவையே பிரம்மதேவரின் பூஜையாக கருதப்படுகிறது. இதுவே பிரம்மனுக்கு விஷ்ணு உபதேசித்த தந்த்ரசார சங்க்ரஹம் என்று ஸ்ரீமதாசார்யர் சொல்கிறார். தந்த்ரசாரத்தில் சொல்லியிருப்பதை நாம் வழக்கத்திற்குக் கொண்டுவந்தால், அது பிரம்மதேவரின் தந்த்ரசார சங்க்ரஹத்தின் மந்திரங்களுக்கு பிரம்மதேவரே ரிஷி. 

இதை நினைத்தபிறகே அந்த மந்திர ஜெபத்தை செய்யவேண்டும். துவாதச (12) குருகளை வணங்கும்போது பிரம்மதேவரை கட்டாயம் வணங்கவேண்டும். பீடாவரண பூஜையிலும் அந்தந்த இடங்களில் இவரது பூஜை உண்டு. யக்ஞ யாகங்களிலும் விதிப்படி இவரது பூஜை இருக்கிறது. சாஸ்திரத்தின்படி பிராணதேவர் மற்றும் பிரம்மதேவரின் பூஜை அந்தந்த விதிகளின்படி கட்டாயம் செய்யவேண்டும். சாதகர்களின் வாழ்வில் இவை அனைத்தும் பின்னிப் பிணைத்திருக்கின்றன என்று தெரிந்துகொள்ள வேண்டும். 

கே: அப்படியென்றால், வாயுதேவரைப் போலவே பிரம்மதேவரும் ஜகத்குருவாக இருக்கிறார் அல்லவா? குருகளின் அனைத்து லட்சணங்களையும் பெற்றிருக்கிறார் அல்லவா?

ப: ஆம். பிரம்மதேவர் மற்றும் வாயுதேவர் இருவருக்கும் ஸ்ரீஹரியே ஜகத்குரு என்னும் பதவியை அளித்திருக்கிறார். மேலும் தாத்பர்ய நிர்ணயத்தில் ஸ்ரீமதாசார்யர் சொல்லியிருப்பதைப் போல், உத்தமமான குருவிடம் இருக்கும் அனைத்து லட்சணங்களையும் பிரம்மதேவர் பெற்றிருக்கிறார். 96 அங்குலங்கள் உடைய தேகத்தைக் கொண்ட 32 லட்சணங்களையும் பெற்று, எந்தவொரு விஷயத்திலும் சந்தேகம் இல்லாமல், மற்றவர்களின் சந்தேகங்களை தீர்க்குமாறு - இப்படி அனைத்து லட்சணங்களும் பிரம்ம வாயுகளிடம் முழுவதுமாக நிரம்பியிருக்கின்றன. 

கே: ஸ்ரீஹரிக்கும் அவரின் அவதாரங்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. அவருடைய சக்திக்கும் (வீர்யம்) அவருக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லாதபோது இதை லட்சுமியின் கர்ப்பத்தில் ஏற்றுக்கொள்வதற்கு எப்படி சாத்தியமாயிற்று?

ப: ஜடமான மஹத்தத்வத்தை சரியாக ஜோடித்து, பிரம்மதேவரின் பிறப்பிற்காக, அதை பயனுள்ள சக்தியாக மாற்றி, தன் ஒரு ரூபத்தினால் அதில் நுழைந்து அங்கு வியாபித்தார். இதுவே ஸ்ரீஹரியின் வீர்யம் எனப்படுகிறது. இந்த வீர்யத்தை மகாலட்சுமியின் கர்ப்பத்தில் தரித்து, அதில் நான்முகப் பிரம்மனின் சேதனனை (ஜீவனை) சேர்க்கிறார். ஒரு ஆண்டுகாலம் அதை தன் கர்ப்பத்திலேயே தரித்து வளர்க்கிறாள் லட்சுமி. ஆகையால், ஸ்ரீஹரியின் வீர்யம் உருமாறுகிறது என்று தெரிந்து கொள்ளக்கூடாது. இந்த ஆதாரத்தையே பாகவத தாத்பர்யத்தில் ஸ்ரீமதாசார்யர் நிரூபிக்கிறார். 

கே: நான்முகப் பிரம்மன் ஸ்ரீஹரியின் முகத்திலிருந்து பிறந்தார் என்று சில இடங்களில் சொல்கிறார்கள். ஆனால், பிருஹதாரண்ய உபநிஷத்தில், ஸ்ரீஹரியிடமிருந்து உருவான கர்ப்பத்தை ரமாதேவி ஒரு ஆண்டுகாலம் தரித்து, பிரம்மனை பிறப்பித்தாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் எது சரி?

ப: பிரம்மாண்டத்தின் வெளி ஸ்ருஷ்டியில், ஸ்ரீஹரியின் நாபிக்கமலத்திலிருந்து பிரம்மன் பிறந்தார். பிரம்மாண்டத்தின் உள் ஸ்ருஷ்டியில், ரமாதேவியின் கர்ப்பத்திலிருந்து பிறந்தார். ஆகையால் இதில் வேறுபாட்டிற்கு வாய்ப்பே இல்லை. 

கே: அதே பிருஹதாரண்ய உபநிஷத்தில், முதலில் வாயுதேவரைப் பெற்றார் பிறகு பிரம்மதேவரை பெற்றார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், பிரம்மனை விட வாயுதேவரே உத்தமமானவர் அல்லவா?

ப: பிரம்ம-வாயுகளை விஷ்ணு ஒரே நேரத்தில் பிறப்பித்தார். பிரம்ம பதவிக்கு செல்பவர் என்று சில நேரங்களில் வாயுதேவரின் பிறப்பு முதலில் நடந்தது என்று சொல்கிறார்கள். பிரம்மபதவியின் மகத்துவத்தை தெரிவிப்பதற்கு சில நேரங்களில் பிரம்மனின் பிறப்பு முதலில் நடந்தது என்று சொல்கிறார்கள். 

கே: பிரம்மாண்டத்தின் வெளியே ஸ்ரீஹரியின் நாபிக்கமலத்திலிருந்து பிரம்மன் பிறந்தார். அதைப்போலவே சரஸ்வதியும் பிறந்தாரா?

ப: மஹத்தத்வம் பிறந்தபோது இவர்கள் இருவரும் கணவன் - மனைவியாகவே பிறந்தனர். பிரம்மாண்டத்தின் உள்ளே மறுபடி தன் முகத்திலிருந்து சரஸ்வதியை பிரம்மன் படைத்தார். 

கே: கஸ்யப-வினதெயரிடம் கருடன் பிறந்தார். கஸ்யப-கத்ருவிடம் சேஷன் பிறந்தார். ருத்ரர் பிரம்மனிடம் பிறந்தார். இப்படியிருக்கும்போது மூவரும் பிரம்மனின் மகன்கள் என்று எப்படி சொல்லமுடியும்?

ப: பிரம்மாண்டத்தின் உள் ஸ்ருஷ்டியில் கஸ்யபரிடம் கருடாதிகள் பிறந்தனர். ஆனால், பிரம்மாண்டத்தின் வெளி ஸ்ருஷ்டியில் அனைவரும் பிரம்மனின் மக்களாகவே பிறந்தனர். அனைத்து தேவதைகளும், பிரம்மனின் உடலிலிருந்தே ஒரு முறை பிறந்திருக்கின்றனர். பிரம்மாண்டத்தின் உள் ஸ்ருஷ்டியில், அந்தந்த தேவதைகள் வெவ்வேறு தம்பதிகளிடம் பிறந்திருக்கின்றனர். பாகவதத்தில் மொத்தம் 14 வகையான ஸ்ருஷ்டிகளை சொல்லியிருக்கின்றனர். 

கே: பிரம்மதேவரின் உடலிலிருந்து தேவர்கள் எப்படி பிறந்தனர்?

ப: பிரம்மதேவரின் கண்ணிலிருந்து சூரியன், காதிலிருந்து சந்திரன், மார்பிலிருந்து யமதர்மன், வாயிலிருந்து அஸ்வினி தேவதைகள், நாக்கிலிருந்து வருணன், மனதிலிருந்து இந்திர காமன், புத்தியிலிருந்து சௌபர்ணி, வாருணி, பார்வதி ஆகியோர், அவரது அகங்காரத்திலிருந்து கருட சேஷ ருத்ரர்கள் - இப்படியாக அனைவரும் பிறந்தனர். மரீசி, அங்கீரஸ, அத்ரி, புலஸ்த்ய, புலஹ, க்ரது ஆகியோரும்கூட பிரம்மதேவரின் மானஸ புத்திரர்கள் ஆவர்.

கே: தேவர்கள் அனைவரும் பிரம்மனின் உடலிலிருந்து பிறந்தவர்கள். அதுபோலவே, மனிதர்களும் பிறந்தனரா?

ப: பிரம்மனின் முகத்திலிருந்து தேவதைகள், மார்பிலிருந்து பித்ருகள், கீழ்-பாகத்திலிருந்து மனிதர்கள், முதுகிலிருந்து அசுரர்கள் பிறந்தனர் என்று ஹரிவம்சம் சொல்கிறது. 

கே: பிராமணர்கள் ஸ்ரீஹரியின் முகத்திலிருந்து பிறந்தவர்கள் என்று புருஷசூக்தம் சொல்கிறது. ஆனால் ஸ்ருஷ்டி-ப்ரக்ரியவில் (நடைமுறையில்) பிராமணர்கள் பிரம்மனின் முகத்திலிருந்து பிறந்தவர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் எது சரி?

ப: புருஷசூக்தத்தில் சொல்லியவாறு ஸ்ரீஹரியின் முகத்திலிருந்து ஒரு முறை பிராமண ஜாதி உருவானது. மறுபடி அதே பிராமண ஜாதி, பிரம்மனின் முகத்திலிருந்து இன்னொரு முறை பிறந்தது. பிராமண ஜாதியின் அபிமானியான ப்ருகு முனிவர், பிரம்மனின் முகத்திலிருந்து முதலில் தோன்றுகிறார். மறுபடி வாயுதேவரின் முகத்திலிருந்து, பின்னர் ருத்ரதேவரின் முகத்திலிருந்தும் பிறக்கிறார். இது போல் பலமுறை ஸ்ருஷ்டி நடைபெற்றது என்று ஷாட்குண்ய என்னும் கிரந்தம் தெரிவிக்கிறது. 

கே: ருத்ராதி தேவதைகளுக்கு சிலசமயங்களில் ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்னும் கர்வம் வந்துவிடுகிறது என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதைப்போல, நான்முகப் பிரம்மனுக்கும் சிலசமயங்களில் கர்வம் வருகிறது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் இவரே அசுரர்கள் செய்யும் தவங்களுக்கு மெச்சி அவர்களுக்கு வரம் அளிக்கின்றார். விஷ்ணு த்வேஷிகளுக்கு வரம் அளித்ததால் தான் ஸ்ரீஹரியை விட சிறந்தவன் என்ற நினைப்பு வந்திருக்கலாம் என்று சொல்லலாமா?

ப: ருஜுகளுக்கு என்றைக்குமே கர்வம் வருவதற்கு சாத்தியமே இல்லை. அசுரர்களுக்கு வரம் அளித்ததால் கர்வம் வந்தது என்று அறியக்கூடாது. மூன்றுவித ஜீவர்களுக்கும் அவர்வர்கள் செய்த சாதனைகளுக்கேற்ப, ஸ்ரீஹரியின் கட்டளையின் பேரிலேயே வரம் அளிக்கிறார். அவர்கள் செய்த தவத்திற்காக சிறிதளவும் மகிழ்ச்சியடையாமல், ஸ்ரீஹரியின் கட்டளையின் பேரிலேயே வரத்தை அளிக்கிறார். ருத்ராதி தேவர்களாவது அசுரர்களின் தவத்தை மெச்சியதாக சிறு தோஷங்கள் இருக்கலாம். ஆனால் ருஜுஜீவிகளிடத்தில் அத்தகைய தோஷங்கள் சாத்தியமே இல்லை. 

கே: குதிரையின் வாலில் ஒரு மயிரை ஆயிரம் பாகங்களாகப் பிரித்தால், அதன் ஒரு பாகத்தை விட சிறியது நம் ஜீவன். பிரம்மதேவருக்கும்கூட அவ்வளவே அளவுதான். இப்படியிருக்கும்போது பிரம்மதேவரை வியாப்தர் (அனைத்து இடங்களிலும் இருப்பவர்) என்று சொல்வது எப்படி சாத்தியம்?

ப: ஒரு துளி கஸ்தூரியானது வீட்டில் அனைத்து இடங்களிலும் பரவி வீடு முழுக்க மணக்க வைப்பதைப் பார்க்கிறோம். அதைப்போலவே பிரம்மதேவரும் நம் ஜீவனைப் போன்ற அளவே உள்ளவராக இருந்தாலும், பிரம்மாண்டத்தின் உள் அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை. பதினான்கு உலகங்களிலும் அவரது அம்சம் பரவியிருக்கிறது. இப்படி சொல்லியவுடன், அவரது அம்சத்திற்கும், ஸ்வரூபத்திற்கும் வேறுபாடு இருக்கிறது என்று சொல்லக்கூடாது. ஸ்ரீஹரியின் அற்புத சக்தியினாலும், விசேஷ பலத்தினாலும், பிரம்மதேவருக்கு இத்தகைய சாமர்த்தியம் கைகூடியிருக்கிறது. 

கே: பிரம்மவாயுகளுக்கு ஸ்ரீஹரி சஹபோகம் (சரிசமமான அந்தஸ்து) அளித்திருக்கிறார் என்கிறார்கள். அப்படியென்றால், ஸ்ரீஹரி அனுபவிக்கும் ஞானானந்தம் மற்றும் லட்சுமி போகங்களை இவர்களுக்கும் கொடுத்திருக்கிறாரா?

ப: கண்டிப்பாக இல்லை. அந்தந்த கல்பங்களில் அந்தந்த ஜீவர்கள் எந்த சத்கர்மங்களை பின்பற்றி அவற்றை ஸ்ரீஹரிக்கு சமர்ப்பிக்கிறார்களோ, அதை தான் ஏற்றுக்கொள்வதோடு பிரம்மவாயுகளுக்கும் அவர்களின் தகுதிக்கேற்ப கொடுக்கிறார் என்பதே இதன் பொருள். தவிர, தன்னுடைய சுகங்களை, லட்சுமி போகங்களை பிரம்மவாயுகளுக்குக் கொடுக்கிறார் என்று பொருள் அல்ல. மேலும் அனைத்து கல்பங்களில் சாதனை செய்த ஜீவர்களின் புண்ணியங்களின் பலன்களை பிரம்மவாயுகளுக்குக் கொடுப்பதில்லை. 

எந்த கல்பத்தில் எந்த ஜீவர்கள் பிரம்மதேவருக்குக் கீழ்ப்படிந்து சாதனைகளை செய்கின்றனரோ, அந்த ஜீவரின் புண்ணியத்தின் பலன்களை மட்டும் அந்த கல்பத்தின் பிரம்மனுக்கு கொடுக்கிறாரே தவிர, முந்தைய / பிந்தைய கல்பத்தின் ஜீவர்கள் செய்த புண்ணியத்தின் பலன்களை எப்போதும் கொடுப்பதில்லை. இது மிகவும் நுண்ணிய விஷயமாகும். 

கே: நம் தேகத்தில் ஸ்ரீஹரியை எப்படி காணவேண்டும்? காம-க்ரோதங்களால் நிரம்பிய இந்த தேகத்தில் அனைத்து இடங்களிலும் கலிபிரவேசம் இருக்கிறதல்லவா?

ப: நம் தேகத்தில் நாம் ஸ்ரீஹரியை தியானிக்க வேண்டும். அதுவும் இதயத்தில். அங்கே முக்கியமான மூன்று நாடிகள் உள்ளன. அவை அஹம் நாடி, சத்வ நாடி மற்றும் ஆத்ம நாடி ஆகும். அஹம் நாடியில் அஹங்காரதத்வத்தின் அபிமானியான ருத்ரர், சத்வ நாடியில் சித்தத்திற்கு அபிமானியான பிரம்மன், ஆத்ம நாடியில் புத்தியின் அபிமானியான பிருஹஸ்பதியும் நிலைத்திருக்கிறார்கள். இந்த சத்வ நாடியை சுஷும்னா நாடி என்றும் அழைக்கிறார்கள். இந்த சுஷும்னா நாடியில் பிரம்மனின் விசேஷ சன்னிதானம் இருப்பதினால் கலிபிரவேசத்திற்கு சாத்தியம் இல்லை. சஞ்சலமான நம் மனதை, சுஷும்னா நாடிக்குள் நுழைத்தால், தொந்தரவில்லாத தியானத்தை செய்வதற்கு சாத்தியம் ஆகின்றது. ஆகையால், சுஷும்னா நாடிக்கு பிரம்ம நாடி என்றும் பெயர் வந்திருக்கிறது. 

கே: பிரம்மதேவரை நாம் தபஸ்விகள் என்று அழைக்க வேண்டுமா? அல்லது யோகி என்று அழைக்க வேண்டுமா? அல்லது சிறந்த பிராமணர் என்று அழைக்க வேண்டுமா?

ப: பிரம்மதேவரை பக்தியோகிகளில் மிகச் சிறந்தவர் என்று அழைக்கவேண்டும். சாதகர்களில் (நற்செயல்களை செய்பவர்களில்) ப்ரதீகாலம்பனர், அப்ரதீகாலம்பனர் என்று இரு வகையினர் உண்டு. மனுஷ்யோத்தமர் (மனிதர்களில் சிறந்தவர்கள்) அனைவரும் ப்ரதீகாலம்பனர் அல்லது கர்மயோகிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களைவிட அப்ரதீகாலம்பனர்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அனைத்து இடங்களிலும் ஸ்ரீஹரியை பூஜிக்கும் திறன் / வல்லமை படைத்தவர்களை அப்ரதீகாலம்பனர்கள் என்று அழைக்கிறார்கள். இவர்களில் ஞானயோகிகள் மிகச் சிறந்தவர்கள் ஆவர். இந்த ஞானயோகிகளைவிட, விஞ்ஞானயோகிகள், விஞ்ஞானயோகிகளைவிட பக்தியோகிகள் சிறந்தவர்கள் ஆகின்றனர். பக்தியோகிகளில் பிரம்மதேவரே மிகச் சிறந்தவர் என்று அபரோக்‌ஷ தாரதம்ய சந்தியில் ஸ்ரீஜகன்னாததாசர் தெரிவிக்கிறார். மேலும் பிரம்மவாயுகள் மிகச்சிறந்த பக்தர்களாக இருக்கின்றனர் என்றும் அறியவேண்டும். 

கே: மரணம் அடையும்போது, பிரம்ம நாடியின் மூலமாக உயிர் போகவேண்டும் என்கிறார்களே? இது நமக்கு எப்போது சாத்தியம்?

ப: சுஷும்னா நாடியின் இதயப் பகுதியில், எட்டு இதழ்களைக் கொண்ட தாமரையில் ஸ்ரீஹரியை எந்நேரமும் தியானிக்க வேண்டும். இதற்கு பிரம்மனின் பூரண அருளைப் பெறவேண்டும். பற்பல பிறவிகளில் இந்த தியானத்தைச் செய்துவந்தால், ஸ்ரீஹரியின் தரிசனம் கிடைக்கிறது. சாதனைகள் முடிந்தபிறகு நம் தேகத்தில், பிரம்ம நாடியின் மூலமாகவே உயிர் பிரிகின்றது. மற்ற பிறவிகளில் பிரம்ம நாடியின் மூலமாக உயிர் பிரிவது கஷ்டமாகிறது. பிரம்ம நாடியின் மூலமாக உயிரை விடும் 

ஜீவனானது, தலையிலிருக்கும் ஆயிரக்கணக்கிலான தாமரையிலிருக்கும் பிரம்ம-ரந்திரத்தின் முலம் வெளியேறுகிறது. மேலும் அப்படி வெளியேறும்போது, ஸ்ரீஹரியைக் குறித்து, ‘நீ ஈசன். நான் உனக்கு தாசன்’ என்னும் எண்ணம் மேலோங்கி இருக்கவேண்டும். இதுவே நாம் செய்யும் சாதனையின் கடைசி படியாகும். 

கே: ருஜுஜீவிகளுக்கு ஏன் அதிக பிராரப்தம்?
(பிராரப்தம் = முந்தைய பிறவிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட புண்ணியங்கள்).

ப: ருஜுஜீவிகளின் ஒரு கல்பத்தின் அளவு சாதனை ஒரு மனிதனின் ஆயுளுக்கு சமம் எனக் கருதப்படுகிறது. அதிலும்கூட, நாம் முழுமையாக நூறு ஆண்டுகள் சாதனை செய்வதில்லை. பிரம்மனின் பார்வையில் மிகச் சில நிமிடங்கள் அல்லது சில நொடிகளிலேயே நம் சாதனை முடிந்துவிடுகிறது. ஆகையால், ஜீவர்களின் சாதனை மிகவும் குறைவானதாகும். அதனால், ஜீவர்களின் பிராரப்தமும் குறைவாகவே இருக்கின்றது. இப்படி தாரதம்யத்தின்படி, அவர்களின் ஆண்டுகள் அதிகரிக்கும்போது, ருஜுஜீவிகளுக்கு அவர்களின் பிராரப்தமும் அதிகரிக்கின்றது. ருத்ரதேவருக்கு 80 கல்பத்தின் பிராரப்தம் இருந்தால், ருஜுஜீவிகளுக்கு 200 கல்பத்தின் பிராரப்தம் இருக்கின்றது. அதிக ஆண்டுகளின் பிராரப்தம், அவர்களின் தாரதம்யத்திற்கேற்ப, சிறந்த அறிவினை அவர்களுக்குக் கொடுக்கின்றது. 

கே: ருஜுஜீவிகளின் பிம்பாபரோக்‌ஷம் (முக்தி நிலை) எப்படி இருக்கிறது?

ப: ’சௌரிசூர்யன தெரதி ப்ரம்ஹசமீரகாயத்ரி கிரிகளொளு தோருவுது அஸ்பஷ்டரூபதி முக்திபரியந்த’

ப: எரியும் ஒரு விளக்கை பார்ப்பது சாத்தியம். ஆனால் சூரியமண்டலத்தை நம் கண்களால் பார்ப்பது சாத்தியமில்லை. அப்படியே ருஜுஜீவிகள், தங்களின் பிம்பரூபத்தை தெளிவாகப் பார்க்கின்றனர். எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் ஸ்ரீஹரியின் ரூபங்களை சூரியமண்டலத்தைப் போல சுலபமாக பார்க்கமாட்டார்கள். இதுவே ருஜுஜீவிகளின் சிறப்பு. பிம்பாபரோக்‌ஷம் ஆனபிறகு, ருஜுஜீவிகள் மட்டுமே ஸ்ரீஹரியின் தரிசனத்தை எந்நேரமும் மிகத் தெளிவாக காணும் சக்தியை பெறுகின்றனர். நமக்கு பிம்பாபரோக்‌ஷம் ஆகும்போது, ஒரு நொடியும்கூட ஸ்ரீஹரியின் தரிசனம் கிடைப்பதில்லை. 

கே: 100 பேர் ருஜுஜீவிகள் யார்? அவர்களைப் பற்றி எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?

ப: 
1. கல்கி 2. சுசேத 3. தாஸ 4. தர்ம 5. அதர்மகண்டன 6. வர்சஸ்வி 7. கஷண 8. ஸாது 9. மஹிபதி 10. சத்தர்மக்ஞ 11. தர்மஜ 12. ஸம்பூர்ண 13. ஷுசி 14. வைக்ருத 15. அஞ்சன 16. ஸர்ஷப 17. கர்பட 18. ஷ்ரத்தா 19. ஸந்த்யாத 20. விக்ஞான 21. மகாவிக்ஞான 22. கீர்த்தன 23. ஸங்கீர்ண 24. கத்த 25. மஹாபுத்த 

26. ஜய 27. ஸுமஹத்தர 28. சுவீர்ய 29. மேதாவி 30. விஜய 31. ஜய 32. ரந்திம்ன 33. மனு 34. மோத 35. ப்ரமோத 36. ஸந்த 37. அனந்த 38. ஸந்துஷ்ட 39. சார்வங்க 40. சாரு 41. ஸுபாஹு 42. சாருபத 43. சுலோசன 44. சாரஸ்வத 45. சுவிர 46. கபி 47. ப்ராக்ஞ 48. அலம்பட 49. ஸர்வக்ஞ 50. ஸர்வஜித் 

51. மித்ர 52. பாபநாஷன 53. தர்மவினீத 54. ஷாரத 55. ஓஜ 56. ஸுதபஸ்வி 57. ப்ரம்மதேஜஸ்ஸு 58. தானசுசீல 59. யக்ஞசுகர்த 60. யஜ்வீ 61. யாகவர்தக 62. ப்ராண 63. த்ராண 64. அமர்ஷ 65. உமதேஷ்ட 66. மாரக 67. காலக்ரீடன 68. சுகர்ம 69. சுகாலக்ஞ 70. காலசூசக 71. கலிசம்ஹர்த 72. கலி 73. கால 74. ரேத 75. சதாரத

76. சுலப 77. சஹோ 78. சதாகபி 79. கத்ய 80. ஞான 81. தஷகுல 82. ஸ்ரோதவ்ய 83. சங்கீர்திதவ்ய 84. மந்தவ்ய 85. கவ்ய 86. த்ரஷ்டவ்ய 87. சக்ய 88. கந்தவ்ய 89. க்ரவ்ய 90. ஸ்மர்தவ்ய 91. சேவ்ய 92. சுபவ்ய 93. ஸ்வர்கவ்ய 94. பாவ்ய 95. ஞாதவ்ய 96. வக்தவ்ய 97. கவ்ய 98. லாதவ்ய 99. வாயு 100. பிரம்ம

ஹரிகதாம்ருதசாரத்தில் 21ம் சந்தியில் ருஜுஜீவிகளின் பட்டியலைக் கொடுத்திருக்கிறார். இதனை தினந்தோறும் நினைத்துக் கொண்டு, இப்பிறவியை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்வோம். 

ஈ ருஜுகளொளகொப்ப ஸாதன
னூரு கல்பதி மாடி கரெஸுவ
சாருதர மங்களசுநாமதி கல்பகல்பதலி |
ஸூரிகளு சந்துதிஸி மந்திஸெ
கோரதுரிதகளளிது போபுவு
மாரமண ஸம்ப்ரீதநாகுவ சர்வகாலதலி ||22||

பாஹி கல்கி சுதேஜதாசனே
பாஹி தர்மாதர்மகண்டனே
பாஹி வர்சஸ்வி கஷண நமோ சாது மஹிபதியே |
பாஹி சத்தர்மக்ஞ தர்மக்ஞ
பாஹி சம்பூர்ண ஷுசி வைக்ருத
பாஹி அஞ்சன சர்ஷபனே கர்படனெ ஷ்ரத்தாஹ்வ ||23||

பாஹி ஸந்தாத்ய விக்ஞானனே
பாஹி மஹவிக்ஞான கீர்த்தனே
பாஹி சங்கீர்ணாக்ய கத்தனே பாஹி புத்த ஜய |
பாஹி சுமஹத்தர சுவீர்யனே
பாஹி யாம் மேதாவி விஜய ஜய
பாஹி மாம் ரந்தீம்ன மனு மாம் பாஹி மாம் பாஹி ||24||

பாஹி மோத ப்ரமோத சந்தஸ
பாஹி ஆனந்த சந்துஷ்டனே
பாஹி மாம் சார்வங்க சாரு சுபாஹு சாருபத |
பாஹி பாஹி சுலோசனனே மாம்
பாஹி சாரஸ்வத சுவீரனே
பாஹி ப்ராக்ஞனே கபியலம்பட பாஹி சர்வக்ஞ ||25||

பாஹி மாம் சர்வஜித் மித்ரனே
பாஹி பாபவினாசகனே மாம்
பாஹி தர்மவினேத ஷாரத ஓஜ சுதபஸ்வீ |
பாஹி மாம் தேஜஸ்வி நமோ மாம் 
பாஹி தானசுஷீல நமோ மாம்
பாஹி யக்ஞ சுகர்த யஜ்வீ மாகவர்தகனே ||26||

பாஹி ப்ராண த்ராண அமர்ஷீ
பாஹி மாம் உபதேஷ்ட மாரக
பாஹி காலக்ரீடன சுகர்தா சுகாலக்ஞ |
பாஹி காலசுசோசகனே மாம்
பாஹி கலிசம்ஹர்த கலி மாம்
பாஹி கால ஷ்யாமரேத சதாரத சுபலனே ||27||

பாஹி பாஹி சஹோ சதாகபி
பாஹி கம்யஞான தஷகல
பாஹி மாம் ஸ்ரோதவ்ய நமோ சங்கீர்தவ்ய நமோ |
பாஹி மாம் மந்தவ்ய கவ்யனே
பாஹி மாம் த்ரஷ்டவ்ய சக்யனே
பாஹி மாம் கந்தவ்ய க்ரவ்யனே பாஹி ஸ்மர்தவ்ய ||28||

பாஹி ஸவ்ய சுபவ்ய நமோ மாம்
பாஹி ஸ்வர்கவ்ய நமோ பாவ்யனே
பாஹி மாம் ஞாதவ்ய நமோ வக்தவ்ய கவ்ய நமோ |
பாஹி மாம் லாதவ்ய வாயுவே
பாஹி ப்ரம்ம ப்ராஹ்மணப்ரிய
பாஹி பாஹி சரஸ்வதீபதே ஜகத்குருவர்ய ||29||

வாமனபுராணதலி பேளித
ஈ மஹாத்மர பரமமங்கள
நாமகள சம்ப்ரீதிபூர்வக நித்ய ஸ்மரிசுவர |
ஸ்ரீமனோரமனவரு பேடித
காமிதார்தகளித்து தன்ன த்ரி
தாமதொளகனு தினதலிட்டா னந்தபடிசுவனு ||30||

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

***

No comments:

Post a Comment