Saturday, June 24, 2017

நைவேத்தியம்



நைவேத்தியம்

2011ல் வெளியிடப்பட்ட புத்தகம்
கன்னட மூலம் : திரு. ஹாரதி பிரகலாதாச்சார்
தமிழில் : திருமதி. ஜெயஸ்ரீ ராம்
சரிபார்த்தல் : T.V.சத்ய நாராயணன்

***



நைவேத்தியம் என்றால் சாதாரணமாக நைவேத்தியம் செய்தல், நைவேத்திய பொருட்களை அர்ப்பணம் செய்தல் என்றே நாம் அறிவோம். அடுத்து, யார் யாருக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும், எதை அர்ப்பணிக்க வேண்டும் போன்ற வினாக்கள் இயற்கையானதே. இந்த வினாக்களை பற்றி ஆழமாக விவாதிக்கும் போது மட்டுமே உண்மையான பொருளை அறியமுடியும். இல்லையென்றால் நைவேத்தியத்தின் உண்மையான பொருள் புரியாமல், மற்றவர்கள் எப்படி செய்கிறார்களோ அப்படியே நாமும் (அதற்கான பொருள் புரியாமல்) செய்வது போல ஆகிவிடும். (நாம் தற்பொழுது செய்வது இப்படியே). இருக்கட்டும்.

நைவேத்தியம் - இது ஒரு உள்ளர்த்தம் பொருந்திய உணர்ச்சிகரமான சொல். இதனை நாம் ஆழமாக சிந்திக்கும் போது புரிகிறது. அதன் சிறப்பினால் நம் உடல், மனம் மற்றும் பொருட்கள் தூய்மை அடைகின்றன என்பது ஞானிகளின் கருத்து. (இந்த முயற்சியை நாம் செய்வதில்லை).

அப்படி என்றால், நைவேத்தியம் எப்படி செய்ய வேண்டும்? நம்மில் ஒரு வழக்கம் உள்ளது. நைவேத்தியம் செய்யும் காலத்தில் “த்வாதஸ ஸ்தோத்ரம்” பாடி நைவேத்தியம் செய்ய வேண்டும் என்பதே நியமம். பன்னிரண்டு அத்தியாயங்கள் சொல்ல இயலாதவர்கள் ஒரு அத்தியாயமாவது சொல்ல வேண்டும். அதுவும் இயலாதவர்கள் ஒரு ஸ்தோத்ரத்தின் முதல் வரியாவது சொல்ல வேண்டும். அதுவும் இயலாதவர்கள் “த்வாதஸ ஸ்தோத்ரம்” ஸ்ரீமத்வர் இயற்றியது என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். ஏன் என்றால், ஸ்ரீஹரிக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று வைத்திருக்கும் பொருட்களில் ஏதாவது பிழை அல்லது குறை (விஷம், முடி, புழு, பூச்சி போன்றவை) இருந்தால், “த்வாதஸ ஸ்தோத்ரம்” பாடி நைவேத்தியம் செய்வதால் அந்த குறைகள் நீங்குகிறது என்பது நம் முன்னோர்களின் எண்ணம்.

உதாரணத்திற்கு, ஆசார்யர் மத்வர் காலத்திலேயே, “த்வாதஸ ஸ்தோத்ரம்” தாமே இயற்றி இருந்தாலும், அதற்கு ஒரு உருவம் கொடுத்து அதன் மகிமையை உணர்த்த வேண்டும் என்று யோசித்திருந்த காலத்தில், அவருடைய கிரந்தங்களை சுமந்து வந்த ஒரு எருதுக்கு விஷம் கொடுத்து விட்டனர். இதற்கு காரணம், ஒரு முறை மத்வர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, மாணவர்கள் - "குருவே, உங்களுக்கு பிறகு இந்த சித்தாந்தத்தை யார் பரப்புவார்கள்?" என்று கேட்டபோது, ஆசார்யர்,  "இந்த எருது" என்று சுட்டிக் காட்டினார். மாணவர்களோ தம்மில் ஒருவரை கூறுவார் என்று இருந்ததால், கோபம் கொண்டு, எருது இருந்தால்தானே என்று அதை பாம்பு கடித்து இறக்க சாபமிட்டனர். அப்படியே, அந்த எருதும் பாம்பு கடித்து இறந்தது. 

வழக்கம் போல் பாடம் நடக்கும் காலத்தில் எருது வராததன் காரணத்தை விசாரித்த பொழுது, எருது இறந்து விட்டதாக பொய் உரைத்தனர். உடனடியாக தாமே இயற்றிய “த்வாதஸ ஸ்தோத்ரத்தை” எருதின் காதில் ஓதி, மத்வர் அதை உயிர்ப்பித்தார். இதன் கருத்து, த்வாதஸ ஸ்தோத்ரம் பாடி நைவேத்தியம் செய்வதால் விஷமும் ஜீரணம் ஆகிறது என்பதே. (எருது கூட த்வாதஸ ஸ்தோத்ரம் சொல்லி கொண்டிருந்தது என்றும் உண்டு).

அப்படி என்றால் நைவேத்தியம் எப்படி அர்ப்பணம் செய்யப்பட வேண்டும்? 

இங்கு நாம் மூன்று முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டும். 

1. நைவேத்தியத்தை யாருக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்? 
சாலிக்ராமம் முதலான ப்ரதிமைகளின் உள் உறையும் ஸ்ரீஹரிக்கே நாம் நைவேத்தியம் செய்கிறோம் என்னும் அம்சம் பிரதானமானது. 

2. எதை அர்ப்பணிக்க வேண்டும்? 
நைவேத்தியத்திற்கு உகந்த, “தூய்மையான பொருட்கள்“ அதாவது பால், பழம், அன்னம் முதலானவை.  இங்கும் அந்தந்த பொருட்களில் ஸ்ரீஹரியே உள் உறைபவனாக இருக்கிறான் என்ற சிந்தனை இருக்க வேண்டும். [தூய்மையான பொருட்களை அர்ப்பணம் செய்தால் அதற்கு தகுந்த பலன். தூய்மையற்ற பொருட்களை அர்ப்பணம் செய்தாலும் அதற்கு தகுந்த பலன்.  இரண்டையும் அர்ப்பணம் செய்யலாம். ஆனால் இரண்டுமே அவனுக்கு (ஸ்ரீஹரிக்கு) சம்பந்தம் இல்லை என்ற ஞானம் அவசியம்]

3.  யார் அர்ப்பணம் செய்ய வேண்டும்? நம்மைப் போன்ற ஜீவ கோடிகள், சாதனை புரிபவர்கள், மனிதர்கள் எப்படி அர்ப்பணம் செய்ய வேண்டும்? முதலான கேள்விகள். 

தூய்மையான பொருட்களில் உள் உறையும் ஸ்ரீஹரி, 
சாலிக்ராம ப்ரதிமைகளில் உள் உறையும் ஸ்ரீஹரி, 
நைவேத்தியம் அர்ப்பணம் செய்பவரான நம் உள் உறையும் ஸ்ரீஹரி - 

இவ்வாறான மூன்று ரூபங்களின் ஐக்கிய சிந்தனை செய்து,  அவனே பிம்பன், அவனே இந்த சாலிக்ராம & பிரதிமைகளில் உள் உறைந்துள்ளான், அந்த பிம்பனுக்கு இந்த நைவேத்தியம் அர்ப்பணம் செய்கிறேன் என்று, குறைந்தபட்சம் 12 முறை நாராயணனை ஸ்மரித்து சாலிக்ராமத்தின் மேல் பூ, துளசி ஏற்றினால் அதுவே நைவேத்தியம் என்பது ஸ்ரீஹரிதாஸர்களின் கருத்து. (இவற்றை நாம் செய்தோம் என்றால்) 

இரண்டாவதாக : பூஜா காலத்தில் மட்டும் இந்த நைவேத்திய அர்ப்பணம் என்று ஆகிவிடக்கூடாது. அதற்குப் பிறகும்கூட, இரவு உறங்கும் வரை நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் அவனுக்கே அர்ப்பணம் செய்வதும் நைவேத்தியமே ஆகிறது. நாம் உணர்வு, நிகழ்வு, விஷயம் முதலானவைகளில் மூழ்கி இருந்தாலும், அவனை ஸ்மரித்து, இதுவே உனக்கு நைவேத்தியம் என்றாலும்கூட அதுவும் நைவேத்தியமே (இவற்றை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்றால்). 

மூன்றாவதாக : பரமாத்மா கொடுத்திருக்கும் இந்த உடலை, அவனுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்கு அவனது ஸ்மரணை அவசியம். "ஸ்ரீஹரி ஸ்மரணெ மாடு நிரந்தர"  (எப்பொழுதும் ஸ்ரீஹரி ஸ்மரணை செய்). ஏன் எப்பொழுதும் ஸ்ரீஹரி ஸ்மரணை செய்ய வேண்டும் என்றால், அதன் பலனை இவ்வாறு கூறுகிறார்கள். அதுவே "மோட்சத்திற்கு சாதனை" என்று. இதன் கருத்து நிரந்தரமாக ஸ்ரீஹரி ஸ்மரணை செய்தால், சந்ததம் சிந்தயே நந்தம் அந்த்யகாலே விசேஷத: - அதாவது, கடைசி காலத்தில் விசேஷமான பலன். அதாவது ஸ்ரீஹரியை நிரந்தரமாக ஸ்மரித்து கொண்டு ”இந்த உடல் உன்னுடையது” என்று அறிந்து, அவனுக்கே நாம் புத்தி பூர்வமாக அர்ப்பணித்து கொண்டு இறந்தால், (இந்த உயிரானது, உடலை பிரிந்தால்) அதுவே ஸ்ரீஹரிக்கு உண்மையான நைவேத்தியம். 

இப்படி சிந்தனை செய்தால், சமர்ப்பிக்கப்பட்ட பொருட்களில் உள் உறைந்திருக்கும் ஸ்வாக்யரஸ’வை, அந்த ஸ்ரீஹரி ஏற்றுக்கொள்கிறான் என்பது ஞானிகளின் கருத்து. அந்த ஸ்வாக்யரஸமே ஸ்ரீஹரியின்  நாமரூபமும் ஆகும். இந்த சிந்தனையே நமக்கு மோட்சத்தைக் கொடுக்கக் கூடியதும் ஆகும். இப்படி சிந்திப்பவர்களையே, ’முமுக்ஷூகள்’ என்பர் ஞானிகள்.  

எது அந்த ஸ்வாக்யரஸம்?  அதாவது நம் கடைசிக் காலத்தில், அவனது தரிசனத்தை, ஸ்ரீஹரி நமக்கு எப்படி அளிக்கிறான் - என்பதே நைவேத்தியத்தின் பலன். நமது உடல் அழியக்கூடியதாக இருப்பதால் அதற்கு அதிக முக்கியத்துவம் இல்லை.  ஆனால், சாதனை புரிந்து பரமாத்மாவின் தரிசனம் கிடைக்கப் பெறும் இந்த ஜீவன், எப்பொழுதும் சுகமாக இருப்பான் என்பதே இதன் கருத்து. 

இது புரியும்படி இல்லை, ஏதோ புதிதாகச் சொல்கிறீர்கள்.

அப்படியா? புரியும் வகையில் சொல்கிறேன், கேளுங்கள்.

நான்காவதாக, நைவேத்தியத்தின் அர்த்தத்தை தெரிந்து கொள்வதற்காக, ஹரிகதாம்ருதஸாரத்தில், ஜகன்னாத தாசர், ‘நைவேத்திய ப்ரகரண’ ஸந்தியில் 25 செய்யுள்களில், இதன் விசேஷத்தை கூறியுள்ளார். (பாருங்கள்) 

முதலாவது முறை, பரமாத்மாவின் மகிமையை அறிந்தால் ஒழிய நைவேத்தியம் அர்ப்பணம் செய்வது சாத்தியம் இல்லை. அவனுடைய குணங்களை அறிந்தால் ஒழிய, நைவேத்தியம் அர்ப்பணம் செய்யும் அருகதை நமக்கு வருவதில்லை. அவனது செயல்களை அறிந்து கொள்ளாத வரையில், நமக்கு பக்தி வருவதில்லை. இவையெல்லாம் ஒன்றை ஒன்று விட்டிடமுடியாத பந்தம் ஆகும்.  இப்படியாக நைவேத்தியம் செய்வது எவ்வளவு சுலபமோ அவ்வளவு கடினமானதாகும். 

அன்னமானி ஷஷாங்கனொளு
காருண்யஸாகர கேஸவனு பர
மான்னதொளு பாரதியு நாராயணனு பக்ஷ்யதொளு
ஸொன்னகதிரனு மாதவனு ஸ்ருதி
ஸன்னுத ஸ்ரீலக்ஷ்மி க்ருததொளு
மான்ய கோவிந்தாபிதனு இருத்திப்பனெந்தெந்து ||14||

இப்படியாக 12 செய்யுட்களில், பொருட்களில் இருக்கும் பரமாத்மாவின் ரூபம், ரமா ரூபம், வாயு ரூபம் / வாதிராஜர ரூபம், பொருட்களில் தத்வாபிமானி தேவதைகள் மற்றும் ரூபம், ரஸம், கந்தம் (வாசனை), ஸ்பருஷங்களில் இருந்து, அந்தந்த பெயருடையவனாகி, அதிலிருந்து வேறுபட்டவனாகி, அதன் உள் உறைபவனாக தானே இருக்கிறான் என்று அறிந்து துதிப்பதே நைவேத்தியம். 

32 பிரிவுகளில் வரும் மூல தேவதைகள், ப்ரத்யதி தேவதைகள் அந்தந்த பொருட்களில் இருந்து அந்தந்த ரூபம், வாசனை, ருசி ஆகியவற்றை கொடுத்திருப்பதாக அறிய வேண்டும் என்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இந்த வகையில் சிந்தித்து கொண்டிருக்கிறேன், ஆனால் தத்வாபிமானியை அறியவில்லை என்றால் நைவேத்தியம் பூர்த்தி அடைவதில்லை என்று ‘ஸத்தத்வ ரத்னமாலெ’யில் இதன் ஆழமான விவரம் உள்ளதை அறிய வேண்டும். 

ஐந்தாவதாக:  
விஜயவிட்டல தாசர், தம்முடைய ஒரு சூளாதியில் கூறுவதாவது

அன்னாபிமானி சந்த்ர அல்லி கேஸவ பர
மான்னதல்லி பாரதி நாராயண
பூர்ண பக்ஷகளல்லி ஸூர்ய மாதவ க்ருதகே
கன்யா லக்ஷ்மி அல்லி கோவிந்தனோ
பெண்ணெ பாலினல்லி ஸரஸ்வதி விஷ்ணுஷிரோ
ரன்ன முடிகெயல்லி வாகீஷ மதுஸூதன
பெண்ணெயல்லி வாயு அல்லி த்ரிவிக்ரம|

கன்னததியல்லி சந்த வருண வாமன|
சென்ன ஸூபதலி கருட ஸ்ரீதரதேவ
முன்னெ பத்ர ஸாகதல்லி மித்ரனு ஹ்ருஷீகேஸ|

இன்னு பலஸாககளல்லி ஸர்ப பதுமநாப
பண்ணபெ ஆல்மதல்லி பார்வதி தாமோதர
அன்னாம்ருபதி ருத்ர அல்லி ஸங்கர்ஷண
கண்ணிகே இம்பாத ஸக்கரெயல்லி ஸுரவ
ரேண்ய இந்த்ரனு தத்கதனு வாசுதேவ / பன்னங்க
ஸாயி நம்ம விஜயவிடல ரேயன
பாவன்ன மூர்திய நெனிஸி பாவித்ர நீனாகு ||1||

ஐது நுடிய ஈ ஸுளாதியல்லி கொனெயல்லி
சிந்தனெ ப்ரகார வினியோகமாடு ஸ்ரீ காந்த
விஜயவிடல கிருஷ்ணகெ பதார்தகளா ||6||

மேற்கண்ட இரு வரிகளில் சூளாதியை முடிக்கும் விஜயதாசர், ‘பதார்த்தங்களை வினியோகம் செய்’ என்று கூறியுள்ளார். பதார்த்தங்கள் என்றால் சாப்பிடும் பண்டங்கள் மட்டுமல்ல, இந்த உடலும் ஆகும்.  இந்த உடலில் இருந்து மனத்தின் மூலம், மேலே கூறியபடியே சிந்தனை செய்து ஸ்ரீகாந்த விஜயவிட்டலனாத பிம்பனுக்கு அர்ப்பணம் செய். நைவேத்தியம் செய்யும்போது பொருட்களுடன் இந்த உடலையும்கூட அர்ப்பணம் செய்வது மகத்தானது. இதையெல்லாம் சேர்த்து, “தனு நின்னது ஜீவன நின்னது, அனுதின பாஹோ ஸுகதுக்க நின்னதய்யா” என்றனர் ஞானிகள். 

இந்த மாதிரியான சிந்தனை செய்கிறாயா என்றால், அதற்கான பதில் முரண்பாடே. எனக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. அவ்வளவு மட்டும் ஒப்புக் கொள்ளவேண்டும். மனம் போன போக்கில் அர்த்த பூர்வமான சிந்தனை இல்லாமல் நைவேத்தியம் செய்தேன் அல்லவா? 

ஆறாவதாக: 


பொருட்கள்
அபிமானி தேவதை
உள் உறைந்திருக்கும் ஸ்ரீஹரியின் ரூபம்




1
அன்னம்
சஷாங்க
கேசவ
2
பாயசம்
பாரதி
 நாராயண
3
இனிப்பு பதார்த்தங்கள்
சூர்ய
மாதவ
4
நெய்
ரமாதேவி
கோவிந்தா
5
பால்
சரஸ்வதி
விஷ்ணு
6
மண்டிகெ
பிரம்மா
மதுசூதன
7
வெண்ணெய்
வாயு
த்ரிவிக்ரம
8
தயிர்
வருண & சந்திர
வாமன
9
பருப்பு
கருட
ஸ்ரீதர
10
கீரை வகைகள்
மித்ராக்ய சூர்ய
ஹ்ருஷிகேச
11
காய்கறிகள்
சேஷ
பத்பனாப
12
துவர்ப்பான பொருட்களில்
கௌரி
தாமோதர
13
சாம்பார்
ருத்ர
சங்கர்ஷண
14
சர்க்கரை / வெல்லம்
தேவேந்திர
வாசுதேவ
15
தாளிக்க பயன்படுத்தும் பொருட்கள்
ப்ருஹஸ்பதி
பிரத்யும்ன
16
கசப்பான பொருட்களில்
யமதர்ம
அனிருத்த
17
பெருங்காயம், ஏலக்காய், கற்பூரம் முதலியன
மன்மத
புருஷோத்தம
18
உப்பு
 நிரருதி
ஜனார்த்தன
19
வறுத்த பதார்த்தங்களில்
ஜயந்த
அதோக்‌ஷஜ

இதற்கும் மேலே அறிய விரும்பினால், இந்தப் பதிவு அனுமனின் வாலைப் போல் நீண்டு கொண்டே இருக்கும். 

இப்படியாக அந்தந்த பொருட்களில் இருக்கும் தத்வாபிமானி (தத்வதேவதா), அவர்களின் உள் உறையும் முக்யப்ராணர், அவரின் உள் உறையும் ரமாரூபம், அவள் உள் உறையும் முடிவில்லா அவதாரியான பிம்பனாத ஸ்ரீஹரியை நினைத்து “கெரெய நீரன்னு, கெரெகெ செல்லி” என்பதற்கேற்ப, அவன் கொடுத்திருப்பதை நினைவில் நிறுத்தி, அவனுக்கே அர்ப்பணம் செய்வதே நைவேத்தியம்.  

இப்படியாக நைவேத்தியம் செய்வதன் விளைவு என்ன?  மேலே கூறிய நைவேத்திய முறையை சரியாக அறிந்து அர்ப்பணிக்கும்போது, அந்தந்த பொருட்களில் இருக்கும் ‘ஸ்வாக்யரஸம்‘ என்ற அம்சத்தை - அது அந்த ஸ்ரீஹரியின் ரூபமே ஆகும் - தன் கண் பார்வையினால் பார்க்கிறான். அந்த ரூபம் அவனிடம் சென்று சேர்ந்தால் மட்டுமே, நைவேத்திய பொருட்கள் பரிசுத்தம் ஆகின்றன. பின்னர் அதை ரமா, ப்ரஹ்மா, வாயு, சரஸ்வதி, பாரதி (பரசுக்லத்ரயருக்கு) அர்ப்பித்து,  நாம் அதை எடுத்துக் கொண்டால், அது சுத்த மிதமான ஆகாரம் ஆகிறது.

இதை திரும்ப அக்னியில் இடும்போது ‘வைஸ்வதேவ’ என்று ஆகிறது. 

அன்னத்தில் சிறிதளவு எடுத்து, 3 பகுதிகளாக்கி, 

* அதன் முதல் பகுதியை விஷ்வக்ஸேனனுக்கும், 

* 2ம் பகுதியை கருட, ஸேஷ, ருத்ரருக்கும் அர்ப்பித்து, பின்னர் 33 கோடி தேவர்களுக்கும், 33 கோடி நதி அபிமானி தேவதைகளுக்கும், 33 கோடி ரிஷிகளுக்கும், 9 கோடி தத்வாபிமானிகளுக்கும் தாரதம்ய முறையில் அர்ப்பணம் செய்து, கடைசியாக புஷ்கரனுக்கு நைவேத்தியம் அர்ப்பணம் செய்து மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்ய வேண்டும். 

* 3வது பகுதி அன்னத்தை பலிஹரணனுக்கு உபயோகப் படுத்தவேண்டும்.  (இங்கு கங்கா, பசுவை ஸ்மரிக்கலாம்) 

வைஸ்வதேவ எதற்கு? விக்ரகங்கள் மற்றும் சாலிக்ராமங்களில் நேரில் காணப்படாத ரூபத்தில் அர்ப்பணம் செய்யப்பட்டால், நேரில் காணப்படும் ரூபமான அக்னிக்கு ஆஹுதி கொடுப்பதே வைஸ்வதேவ எனப்படும். 

பிறகு, யதிகளுக்கு (சன்யாசி) ‘ஹஸ்தோதக’ கொடுக்க வேண்டும். மேற்கண்ட முறையில் தயாராகாத அன்னத்தை சன்யாசிகள் ஏற்றுக் கொள்வதில்லை.  

இந்த மாதிரியான அக்னிகார்யம் மற்றும் ஹஸ்தோதகம், 5-10 நிமிடங்களில் முடித்தபின் அதிதிகளுக்கு (எதிர்பாரா விருந்தினர் யாரேனும் இருந்தால்) கொடுத்து, பின்னர் நாம் உண்ண வேண்டும் என்பதே ஞானிகளின் வாக்கு.

ஆமாம், இந்த மாதிரியான சிந்தனை செய்தவர் இந்த உலகில் யாராவது இருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பினால், அதற்கான விடை நமக்குத் தெரியாது, நாம் செய்வதில்லை என்ற போதிலும், கிரந்தங்கள் சொன்னவை வீண் இல்லை. இவற்றை அறிந்தவர்கள் யாருமே இல்லை என்று கூற முடியாது. உதாரணமாக, ‘ஸ்ரீவித்யாபூர்ண தீர்த்தர்‘ அனுபவம் மிக்க சன்யாசி.  நைவேத்தியம் செய்யும் காலத்தில் பாயசத்தில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பு சேர்த்திருப்பதை கண்டுபிடித்துக் காண்பித்தார். சமையல் நைவேத்தியத்திற்கு உகந்ததாக இல்லை என்பதால் கபில காவிரியில் ஊற்றி, வேறு சமையல் செய்து ஸ்ரீஹரிக்கு அர்ப்பணம் செய்தார்.  இது ஒரு சிறந்த சிந்தனை. 

ஸ்ரீவித்யாவாரிதி தீர்த்தர் மற்றும் ஸ்ரீவித்யாரத்னாகர தீர்த்தரிடம்கூட இந்த மாதிரியான சிந்தனை இருந்தது தெரிய வருகிறது. இருவரும் ப்ரம்மரந்த்ரத்தின் மூலம் இவ்வுலகை நீத்தனர் (பிரம்மரந்திரம் = உச்சந்தலை வழியாக உயிர் பிரிதல்) என்று பெரியவர்கள் வாயிலாக கேட்டிருக்கிறோம். 

ஸ்ரீராகவேந்திர தீர்த்தர், மாமிசத்தை, பழம் மற்றும் பூக்களாக மாற்றியதும் இதைப் போன்றதே. ஸ்ரீலக்ஷ்மி நாராயண முனிகள், அழுக்கடைந்த துணியை வெண்மையாக மாற்றியதும் கூட இதே சிந்தனையால்தான். ஸ்ரீவியாசதீர்த்தர், தேங்காய் ஏற்கனவே நைவேத்தியம் செய்யப்பட்டதை அறிந்ததும் இதே சிந்தனையால், தேங்காயை உடைத்தபோது அதில் துளசி இருந்தது.  

வியாசதத்வக்ஞர், பஞ்சாமிர்த அபிஷேகத்திற்கு வைத்திருந்த பொருட்கள் காலியானபோது, ஹரிக்கு அர்ப்பணம் ஆகிவிட்டது என்று சொல்லி மங்களாரத்தி செய்தார். அப்போது, ஸ்ரீகிருஷ்ணனின் வாயில் இருந்து பஞ்சாமிர்தம் வழிந்ததும் இதே நைவேத்தியம் செய்யும் சிந்தனையால் என்றே அறியலாம்.  

கனகதாசர் வெளியில் ஓடிக் கொண்டிருந்த சாதம் வடித்த கஞ்சியை அர்ப்பணித்தபோது, அதே கஞ்சி ஸ்ரீவாதிராஜரின் ஹயக்ரீவ ஸ்வாமியின் வாயில் இருந்து வழிந்து ஓடியதும் இந்த மாதிரியான சிந்தனைக்கு சம்பந்தப்பட்டிருப்பதை அறியலாம்.  

இப்படியாக பல உதாரணங்களின் மூலம் அறியப்பட்ட அம்சங்களை, சரியான முறையில் அறிந்து நைவேத்தியம் செய்தால், பகவானின் அருள் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.  

இந்த நைவேத்தியம் செய்யும் நிகழ்வு, எப்படி இருக்க வேண்டும் என்றால், பாத்திரம் முழுக்க இருக்கும் பாலில், சிறிது தயிர் ஊற்றி உறைய வைத்தால், முழுப் பாலும் எப்படி தயிர் ஆகிறதோ, அதைப் போல் இருக்க வேண்டும். 

நமது குரு ராம, கிருஷ்ண முதலான மந்திரங்கள், காயத்ரி மந்திரம், அங்கித உபதேச மந்திரம் முதலானவற்றை உபதேசித்த பின்னர் நம் சாதனை இப்படி இருக்க வேண்டும். அதாவது உறைக்கு ஊற்றிய தயிரே குரு உபதேசித்த மந்திரம். அதன் மூலம் நம்முடைய ஞானம் எப்படி வளரவேண்டும் என்றால் உறைக்கு ஊற்றிய பின்னர் காலையில் முழுவதும் தயிராக மாறியது போல் இருக்க வேண்டும். இதுதான் நிஜமான நைவேத்தியம். இப்படிப்பட்ட சிந்தனையில் நம்மை நாமே ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதே முக்கிய கருத்து. 

“நைவேத்தியவனே கொள்ளு” என்னும் பாட்டில் தாசரின் கருத்தும் இதேதான்

ஸ்ரீவாதிராஜர் தம்முடைய ஒரு பாடலில் கூறுவதாவது:-

ஆரோகணெய மாடு சாரஸுக தொடெய   ||ப||

ரன்ன மயவாகிர்த ஹொன்ன மண்டபதொளு
ஸ்வர்ண பாத்ரகளல்லி ஸவயம்பாகவு
நின்ன ஸொஸெ வாணி பாரதி தேவி கடுஜாணெ
சென்னாகி நைவேத்தியவன்னு பாடுவது ||

தெஸெ தெஸெகெ பரிமளிப குஸலத சித்ரான்ன
பிஸி தோஸெகெ பெண்ணெ லேஹ்யபேய
பஸிரொளகெ ஈரேளு ஜகவனிம்பிட்டவகெ
நஸுநகுத இந்திரா தேவி படிஸெ ||

ஆகமலெ மாடித்து நால்கு பகெ க்ருத ஸூப
லோக பதிகனுவாத திவ்யான்னவு
பேகாத பஞ்சபக்ஷ்யகளு ரஸாயனவ
ஏகாந்ததல்லி நிம்ம தேவி படிஸெ  ||

களர குலவைரிகெ திளி நீரு மஜ்ஜிகெ
எளநீரு பானக ஸீதளுதக
பளலிதிரி பளலிதிரி எனுத ஹயவதனகெ
நளினாக்ஷி கற்பூர வீள்யவனெ கொடலு   ||

ஒன்பது பத்யங்கள் இருக்கும் இந்த பாட்டில், பகவானின் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் என்றும் மற்றும் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி விளக்கி, நைவேத்தியம் என்பது யார் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதையும் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார்.  இதற்கு விளக்கமே தேவையில்லை.   

நைவேத்தியத்திற்கு உகந்த பொருட்களையும் தெளிவாக கூறியுள்ளார்.  அவர் தெரிவித்துள்ள முறையில், அந்தந்த பதார்த்தங்களை வைக்க வேண்டும் என்பதே விதி. 

முதலாவது பத்தியில் பாரதி, ஸரஸ்வதியரே ஒரு தங்க பாத்திரத்தில் சமையல் செய்து, அவர்களே அதை நைவேத்தியமும் செய்கிறார்கள் என்று ராஜர் கூறியுள்ளார்.

ஸ்ரீஹரிக்கு ரமாதேவியே பரிமாறுவதாக கூறியுள்ளார். நாம்கூட சாப்பிட உட்காரும்போது நமக்கு பரிமாறுபவரிடம் ரமாதேவியின் ஸன்னிதானத்தை சிந்தனை செய்ய வேண்டும் என்கிறார்.  தோசை, புளியோதரை, காய்கறிகள், நெய் பதார்த்தங்கள், பழச்சாறு, நீர்மோர், இளநீர், பானகம், தண்ணீர் முதலிய பொருட்களை நிதானமாக உண்ணும்படி உபசாரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். சாப்பிட்ட பின்னர், வாசனை மிக்க தாம்பூலத்தை அர்ப்பணிக்க வேண்டும் என்று கூறுகிறார். வாதிராஜர் இந்த முறையில் ஹயவதன பரமாத்மாவிற்கு அர்ப்பணம் செய்தபோது மட்டுமே, அது நைவேத்தியம் பூர்த்தி ஆகின்றது என்கிறார். அதனாலேயே சந்ததம் சிந்தயே அனந்தம் அந்த்யகாலே விசேஷத: என்பதே உணர்ந்ததாலேயே. “ஆரோகணெ மாடு ஆனந்த மூருதி” என்ற பாடலை கூட இதே அர்த்தத்தை உணர்த்தும் வகையில் இயற்றியுள்ளார்.  

துப்ப மது சித்ரான்ன பாயஸ கரிகள
லேப ஸாரஸ பக்ஷ்யகள
கோபால க்ருஷ்ணகெ ததி பக்ஷ பலங்களு
ஆபத்ம முகி படிஸிதளு லேஹ்ய பேஹ்யவா  ||

என்ன குந்துகளா முனிகெ திவ்ய அன்னவு
மன்னிஸி கரெது நின்ன கரகஞ்சதிந்த
பூர்ணவ மாடு புஞ்ஜிஸோ ஹயவதன க்ரு
பாளுஸகல லோகபால நரரொடயனெ  ||

விஜயதாசர் :

ஊடவனு மாடு பாலு ததி ஸயனா
ஆடவனு ஸாகுமாடி அதி மோகதிந்தலி ||ப||

காயிபல்ய ஒந்தொந்து நூறு பரி
தோய ஸண்டிகெ பளெதெ ஹுளிஸாரு
பாயஸ நொரெஹாலு ஸக்கரெ கூடிஸி
தாயி தேவகியு எடெய மாடிதளு தந்து    ||1||

யாலக்கி ஹாகித ஹோளிகெயு பரிமள
ஸலெ ஷால்யோதன கரித பக்ஷ்ய
மேலாத இங்கு-ஜீரிகெ மெணஸின ஹுக்கி
ஸ்ரீலகுமி தேவி எடெ மாடிதளு தந்து    ||2||

கஸிகஸி எள்ளு லட்டிகெய அப்பாலு அதி
ரஸதோஸெ பெண்ணெ ஸூஸலுகடபு
ஹஸனாகி கரித ஹப்பள ஸண்டிகெ நின்ன
ஸொஸெ ஸரஸ்வதி எடெ மாடிதளு தந்து    ||3||

ஸாதாகளதுப்ப ஆளகளக திளி துப்ப
மாதுர்யவாகித்த ஜேனு க்ருதவு
காதாரித பாலு கட்டுஸுரு கெனெ மொஸரு
பூதேவி நலிநலிது எடெ மாடிதளு தந்து ||4||

ஸரளிகெ கௌலி படவெ பரடி ஸஜ்ஜிகெ
ஸரஸவாகித்த சித்ரான்னகளு
பரிபரி பலபக்வான்ன ஸோபசாரதி
கிரிஜாதிகளு தாவு எடெ மாடிதரு தந்து ||5||

காருள்ள பச்சடி ஹச்சகெ ஹஸிருவர்ணத
வாருணதி உப்பின காயி கூட
நீரு மஜ்ஜிகெ நிம்பெஹண்ணின ஹிண்டி
பாரதி தேவி எடெ மாடிதளு தந்து  ||6||

உண்டு தருவாயதலி ஹரியே பீடதி குளிது
கொண்டு பந்த கந்த தாம்பூலவ
கொண்டு ரக்ஷிஸி என்ன ஸிரி விஜய விடல
தொண்டனாத புரந்தர ஹரகெ ஒலிதந்தெ ஒலிது ||7||

இந்த பாடலில் விஜயதாசர் பரமாத்மாவிற்கு நைவேத்தியம் சமர்ப்பணம் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களை விவரித்துள்ளார். இதை ஒவ்வொருவரும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதே விதி.  இதையே சமஸ்கிருதம் அறிந்தவர்கள் சாஸ்திரம் என்பர்.   

முதலில், பரமாத்மாவிற்கு வைக்க வேண்டிய அனேக பதார்த்தங்களை அவனுடைய தாய் தேவகி செய்திருப்பதாக கூறியுள்ளார். 

இரண்டாவது பத்தியில், போளி முதலானவற்றை லகுமிதேவி சமர்ப்பணம் செய்ய கொண்டு வந்திருப்பதாக கூறியுள்ளார். 

மூன்றாவது பத்தியில் லட்டு, அப்பளம் முதலானவற்றை சரஸ்வதி கொண்டு வந்திருப்பதாக கூறியுள்ளார். 

நான்காவது பத்தியில் பசு நெய், தேன், ஏடான தயிர் முதலியவற்றை பூதேவி (ரமாதேவியின் மற்றொரு ரூபம்) கொண்டு வந்திருப்பதாக கூறியுள்ளார்

ஐந்தாவது பத்தியில் ரவை கேசரி, புளியோதரை முதலானவற்றை கிரிஜா தேவி கொண்டு வந்திருப்பதாக கூறியுள்ளார். 

ஆறாவது பத்தியில் ஊறுகாய், நீர் மோர் முதலியவற்றை பாரதி தேவி சமர்ப்பணம் செய்ய கொண்டு வந்திருப்பதாக கூறியுள்ளார்.  இவை எல்லாவற்றையும் நீ ஏற்றுக் கொண்டு, மறுபடியும் பீடத்தில் அமர்ந்து, சந்தனத்தை பூசிக் கொண்டு, தாம்பூலத்தை ஏற்றுக்கொண்டு என்னை ரட்சிக்க வேண்டும்.  ஹே பிம்பனாகி இருக்கும் விஜய விட்டலனே, புரந்தரனுக்கு அருள் புரிந்ததைபோல், தனக்கும் அருள் புரிய வேண்டியுள்ளார்

1. சமையல் செய்பவரில் ரமாதேவி, ஸரஸ்வதி, பாரதி, கிரிஜா தேவியர்களின் சன்னிதானம் இருப்பதாக சிந்தனை செய்வது மிக முக்கியமான ஒன்று.  சமையல் செய்பவரில் பீமசேனனே நின்று செய்விப்பவன் என்று ஞானிகள் கூறுகிறார்கள்.  

2. இங்கு கூறியுள்ளபடியே சமையல் செய்து ஸ்ரீஹரிக்கு நைவேத்தியத்திற்கு வைக்க வேண்டும் என்பதே இதன் கருத்து

3. பரமாத்மாவிற்கு நைவேத்தியம் செய்வது ரமாதேவியே தவிர வேறு எவரும் செய்ய முடியாது. அதாவது நைவேத்தியம் செய்வது கூட நான் இல்லை என்ற சிந்தனை இருக்க வேண்டியது அவசியம். எல்லாவற்றையும் சங்கு மூலம் அர்ப்பணம் செய்கிறோம். அதாவது லக்ஷ்மியே என்னுள் இருந்து செய்விக்கிறாள் என்ற சிந்தனை முக்கியத்துவம் பெறுகிறது.  அப்படி என்றால் மட்டுமே ஸ்வாக்யரஸம் பரமாத்மாவை அடைகிறது. இல்லை என்றால் அது அருகதை அற்றது என்பதை கூற வேண்டியதில்லை.   இதுதான் ஆசார்யர் மத்வர் நைவேத்தியம் செய்யும் முறை ஆகும்.  

கடைசியாக கோபால தாசரின் கருத்தில் கூறுவது, நீ எதை ஸ்ரீஹரிக்கு அர்ப்பணித்தாலும், எப்படி அர்ப்பணித்தாலும், எந்த பாத்திரத்தில் சமர்ப்பித்தாலும், நான் சமைத்த இந்த பதார்த்தங்களை பரமாத்மாவிற்கு, தங்கமயமான பாத்திரத்தில் (ஹரிவாண) வைத்திருப்பதாக சிந்தனை செய்து அர்ப்பணிக்க வேண்டும் என்று கூறுகிறார். 

அன்பர்களே, நாம் இப்படிதான் நைவேத்தியம் செய்கிறோமா என்ற கேள்விக்கு, இப்பொழுது பதில் சொல்லுங்கள்.  ப்ரியமான மாணவர்களே, மற்றும் பந்துக்களே, இந்த மாதிரியான சிந்தனை செய்து ஞானத்தை வளர்த்து கொள்ளுங்கள். இதுதான் நிஜமான நைவேத்தியம்.  (அப்பொழுதுதான் இந்த மஹாவித்யாலயம் நிலைத்து நிற்பதற்கான பலன் கிடைக்கும்.). 

பரமாத்மாவின் முன் அமர்ந்து, பல வகையான பட்சணங்கள், பாயசம் முதலானவற்றை அர்ப்பணிப்பது மட்டுமே நைவேத்தியம் ஆகிவிடாது.  நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்துமே நைவேத்தியம் என்ற சிந்தனை ஒவ்வொரு கணமும் நினைவில் இருக்க வேண்டும். இதுதான் நிஜமான நைவேத்தியத்தின் சிந்தனை. 

உதாரணமாக, வெயிலின் தாக்கம், அதிகமான குளிர், மழை, பனி, மழை, தூறல் மற்றும் ரம்யமான சூழல் இவையெல்லாம் இயற்கையானதே.  இயற்கையின் விதி. நாம் அதற்கான பலனை அடைகிறோம்.  அந்த பலனை பரமாத்மாவிற்கு அர்ப்பணம் செய்வதே நைவேத்தியத்தின் இரண்டாவது மட்டம் (level). ஹரிகதாம்ருதஸாரத்தில் இதை போன்ற அனேக விஷயங்களை தெரிவிக்கிறார். இந்த விஷயங்களை மனதில் அசை போட்டுக் கொண்டு, இப்படிப்பட்ட அற்புதமான காரியங்களை நடத்திக் கொண்டிருக்கும் பரமாத்மாவிற்கு கோடி நமஸ்காரம் என்று சிந்தனை செய்வதே மூன்றாவது மட்ட (level) நைவேத்தியம் என்று ஆகிறது.   

இப்படியாக அவனுக்கு அர்ப்பணித்ததை, பிரசாதமாக எடுத்துக் கொள்ளும்போது நான்காவது மட்டம் (level) ஆகிறது. இதை மஹாபிரசாதமாக அறிந்தபோது, இதனால் நம் மனம் தூய்மை அடைவதுடன், சாதனை மார்க்கத்தில் நம் தகுதியும் உயர்கிறது.  இதுதான் நிஜமான நைவேத்தியம். இப்படிப்பட்ட பிரசாதத்தினால் உத்தமமான மோட்சமே பலன் என்பதை கூற வேண்டியதில்லை. 

ஸ்ரீகுருராமவிட்டலதாஸர், தம்முடைய ஒரு நைவேத்திய பாடலில், கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறார். 

போஜன மாடையா ஸ்ரீராமச்சந்திர ||ப||

ராஜீவநயனா ஸ்வராஜஜனுஜாமஹா
ராஜவந்தித ராஜராஜ ஸகார்சித         ||அ . ப. ||

உப்பு உப்பினகாயி பச்சடிகளு கொஜ்ஜு
ஹப்பள ஸண்டிகெ ஷாகெகளு
ஒப்புவ ரஸ கூட்டு ஹுளி பளித்யவு ஸூப
துப்ப ஷால்யோதன சித்ரான்னகளனு ||1||

ஹோளிகெ ஸஷ்கலி ஹோளிகெ கடுபுமு
சோரெய அதிரஸ ஹொயகடுபு ||
கீரு ஆம்போடெ போண்டா ஷாவிகெ ஹுளி தோஸெ
க்ஷீர ஸர்கர ஜேனுதுப்பவெ மொதலாத       ||2||

மண்டிகெ லாடு சிரோட்டி கீவரு பேணி
பெண்டு ஸோமாஸி பத்தாஸு பேடா      ||
கண்ட ஸர்கரெ கப்பு கர்ஜுர த்ராக்ஷுக
ளுண்டு த்ரிலோக உத்தரிஸுவ ஸ்வாமி  ||3||

பலஸு ஜம்பு கதளிநாரங்க எளநீரு
பானக ஸக்ரெ பெண்ணெய மொஸரு ||
அனுவாத ஸ்வாதோதக மொதலாகி ஸ்ரீ
அர்பிஸுவளு பக்தியிந்த கைகொண்டு நீ   ||4||

நித்ய த்ருப்த நிராமயகெ நிரந்தர
ஸத்வ ரஜஸ் தமோ குணகளெம்ப
ஸத்ய தாம்பூலவ ர்பிஸலு யதாஸக்தி
வித்த ஸமேத வாதிதனு கைகொண்டு நீ  ||5||

அவ்யயானந்த ஜகத பதுகு நீனெந்து
ஸேவ்ய ஸேவகனாகிருவெ எந்து
பவ்ய சரித்ரருபங்களாவை நின்ன
ஸவ்ய ஸாசிய ஸுத குருராமவிடலகெ ||6||

ஒன்பது பத்யங்கள் இருக்கும் இந்த பாடலில் குருராமவிடல தாஸர், ஸ்ரீராமருக்கு எந்த எந்த பதார்த்தங்களை எங்கெங்கு வைக்க வேண்டும் என்பதை வலியுறித்தியுள்ளார். இதுதான் விதிமுறை. இதை அறிந்தவர்கள் சாஸ்திரம் என்பர்.  (ஆனால் இது சாஸ்திரம் இல்லை).  இந்த விதிகளை பின்பற்றி, ஒரு சேவகனைப் போல் அர்ப்பணம் செய்தால் பரமாத்மா திருப்தி அடைகிறான் என்று கூறுகிறார்கள்.  ஆனால், இதையே நைவேத்தியம் என்று கூறிக்கொண்டு,  சாப்பிடக்கூடாத நாட்கள் யாவை என்பதையும் தாசர் தெரியப்படுத்துகிறார்.  

ஏகாதசி உபவாச பேகாதவனே ஹரிதாஸ ||ப||
ஏகாதசி உபவாச மாடிதரே நாகிகளிகே ஆகது விஷ்வாஸ ||அ. ப. ||

ஏழு பத்திகள் இருக்கும் இந்த பாடலில் ஏகாதசி அன்று பட்டினி இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.  

அன்ன ஸாரு காயி பல்ய ஒப்பட்டு
கனருசிய சித்ரான்ன பக்ஷகளு   ||
இன்னூருசிய வஸ்துகளு நோடிதரே
தின்னுவுதே ப்ரத்ய க்ஷநரகவு||

நீராஹாரவு நடெயலுத்தமவு
எரடனெயது மேல்வெளிதுது
நராதமனு வ்ரத நமகில்லெனுத
பரிபரி அன்னோத்ஸவதி கெடுவனு     ||

ஹொரகொளகுபவாஸ வ்ரதவ
மரெயதெ மாடுதிருவ மானவ
குருராமவிடலன கருணா படெயுவ
கராமலக முக்தியலி ஸுகபடுவனு        ||

என்று ஹரிதினத்தன்று (ஏகாதசியன்று) உணவு உட்கொண்டால் ஏற்படும் பிரச்னைகளை தெரிவிப்பதில், ஹரிதாஸர் தயக்கமே படுவதில்லை.  குருராமவிட்டலரின் நேரடியான விளக்கங்கள் எப்படிப்பட்டவரையும் மயங்க வைக்கும். பரமாத்மா ஸப்தான்னங்களை படைத்திருக்கிறார். அந்த அன்னத்தை, அந்தந்த ஜீவகோடிகளுக்காக படைத்துள்ளார்.  அதன்படி உண்டு வாழ்க்கை நடத்துவதே முறையானது. இதற்கு எதிராக நடப்பது இயலாது. முதலில் அன்னத்தை படைத்து பின்னர் ஜீவர்களை படைத்தான். 

உதாரணம்: தாயின் முலையில் பாலை உற்பத்தி செய்து பின்னர் குழந்தை பிறக்கச் செய்வது.  

இதைபோல் இந்த ஸப்தான்ன விதியை அறிவது, அர்ப்பணிக்கும் முறை, சிந்தனை முதலியவற்றை தெரிவிக்கிறார்.   

ஸப்தான்ன திளிவுது ஸாதனவய்யா ||ப||
ஆப்த ஹரிய கொட்டு புத்தியிந்தலி ஜனரு  ||அ. ப. ||

இந்த பாடலில் கடைசியாக, சந்தையில் பார்த்தவை, வீதிகளில் கண்டவை என்று நாம் ஒவ்வொரு நாளும் உபயோகப்படுத்தும் பொருட்களை (பூ, பழம், காய்கறிகள் முதலானவற்றை) நாம் காணும் அக்கணமே க்ருஷ்ணார்ப்பணம் என்றால், அதுவும் கூட நைவேத்தியமே ஆகிறது. அதன் மூலம் பரமாத்மாவின் நினைவு நமக்கு உண்டாகுவதே சாதனை ஆகும்.. 

ஸ்ரீவாதி மத்வேஷார்ப்பணமஸ்து.


***

1 comment: