Monday, October 31, 2022

#20 - 42-43-44 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

 ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

42. ஸ்ரீ மஹாஸ்வனாய நம:

ஞானவாகி3ஹ மஹத4னப்ரத3 ‘மஹாஸ்வனனெ’

நினகெ3 நமோ நமோ பரமபூஜ்ய நீ ஸர்வக்3ஞ

ஆம்னாய ருகாதி3 ஸதா3க3மக3ளிந்த3 ஞேய நீ

விக்ஞான அபரோக்‌ஷ வீவி ப4க்தர்கெ3 ஹயஶீர்ஷ 

ஞானம் என்னும் மிகப்பெரிய செல்வத்தைக் கொடுப்பவனே. மஹாஸ்வனனே. உனக்கு நமஸ்காரங்கள். பரமபூஜ்யனே. ஸர்வக்ஞனே. ரிகாதி அனைத்து ஆகமங்களாலும் நீ போற்றப்படுகிறாய். பக்தர்களுக்கு விசேஷமான ஞானத்தை / அபரோக்‌ஷத்தைக் கொடுப்பவனே. குதிரை முகம் கொண்டவனே. 

43. ஸ்ரீ அனாதி3 நித4னாய நம:

ஜனன ம்ருதி இல்லத3 ‘அனாதி3நித4ன’ நமோ

நீ நித்ய அப்ராக்ருத விக்3ரஹானந்த3 ஞானருபமய

ஜனி ஜராத்3யகி2ள தோ3ஷதூ3ரனு அவிகார

நீனு காலாதீத அக்‌ஷரனு ஸ்வதந்த்ரனு ஆத்ம 

பிறப்பு, இறப்பு இல்லாதவனே ‘அனாதிநிதனனே’ உனக்கு நமஸ்காரங்கள். நீ நித்யமான, அப்ராக்ருதமான, ஆனந்தமயமான ரூபம் கொண்டவன். உலகத்தின் எவ்வித தோஷங்களும் அற்றவன். விகாரம் இல்லாதவன். காலத்தை மீறியவன். அக்‌ஷரன். ஸ்வதந்த்ரன். ஆத்மனே. 

44. ஸ்ரீ தா4த்ரே நம:

ஸ்வீகரிஸி த4ரிஸி நீ ரக்‌ஷிஸிபோஷிப ‘தா3த’

பா3கி3 ஶிர நமோ எம்பெ3 ஸ்ரீஶ வேதே3ஶ ஸர்வேஶ

ஏகாத்மா ஸ்ரீகரனே பிரம்மன்னத4ரிஸி நாபி4ய

ஸுகமலதி3 ஜன்மவித்து பொரெவி நாராயண 

(ஜீவர்களை) ஏற்றுக் கொண்டு, தரித்துக் கொண்டு, காப்பவனான ‘தாத’ நீயே. உனக்கு நமஸ்காரங்கள். ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. வேதங்களின் தலைவனே. ஸர்வேஷனே. ஏகாத்மனே. ஸ்ரீகரனே. நாபியில், தாமரையில், பிரம்மனை தரித்து, அவரை படைத்து காக்கிறாய். நாராயணனே.

***


Sunday, October 30, 2022

#19 - 39-40-41 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

 39. ஸ்ரீ ஶம்பு4வே நம:

ஆனந்த3 உத்பாத3க ஸ்தா2னவாகி3ருவந்த2 ‘ஶம்பு4’

நினகெ3 நமோ ஸுக2நிதே4 ஆனந்தோ3த்3ரேகதி3ந்த3

ஆனந்த3 லீலாவதார ஜக3த்ஸ்ருஷ்ட்யாதி3க3ளன்னு

நீனே மாடி3 ஸாத4னெகெ3ய்ஸி ஸுக2 ஒத3கி3ஸுவி 

மகிழ்ச்சியை உருவாக்கும் இடமாக இருக்கும் ‘ஶம்பு’வே உனக்கு நமஸ்காரங்கள். ஸுக நிதியே. மிக்க மகிழ்ச்சியுடன், உன் லீலைகளால், உலகின் ஸ்ருஷ்ட்யாதி அனைத்தையும் நீயே செய்து, அனைவர் மூலமாக ஸாதனைகளை செய்ய வைத்து, சுகங்களை கொடுக்கச் செய்கிறாய். 

40. ஸ்ரீ ஆதி3த்யாய நம:

உதா3ர விஸ்தார மொத3லு மரியாதெ3 உள்ளவ

‘ஆதி3த்ய’ நமோ ப4க்தி ஸுபூஜெக3ள கொள்ளோ ஸ்ரீஶ

ஆதி3த்யாந்தஸ்த2னாகி3ருவுத3ரிம் ஆதி3த்ய நீனு

அதி3திஸுத வாமன உபேந்த்3ர நமோ நமஸ்தே 

கருணை கொண்டவனே. (அனைவரிடமிருந்தும்) முதல் மரியாதையைக் கொண்டவன். ஆதித்யனே உனக்கு நமஸ்காரங்கள். (என்னிடமிருந்து) பக்தி, பூஜைகளை பெற்றுக் கொள்வாயாக. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. ஆதித்யனில் இருப்பதால் நீ அதித்யா. அதிதி ஸுதனே. வாமனனே. உபேந்திரனே. உனக்கு நமஸ்காரங்கள். 

41. ஸ்ரீ புஷ்கராக்‌ஷாய நம:

நினக3ன்ய புஷ்டிகரர்யாரிஹரோ அவரன்ன

நீ நிராஸமாடி3 புஷ்டிகரரின்யாரு இல்லதெ3

நீனாகி3யே இருவி ‘புஷ்கராக்‌ஷனே’ நமோ எம்பெ3

வனஜாக்‌ஷ அஸம உதா3ர போஷண ஸமர்த்த2

 

உனக்கு ஆதாரமாக யார் இருக்கிறார்கள் என்று நினைக்கிறாரோ, அவர்களை வென்று, உனக்கு ஆதாரம் என்று யாரும் இல்லாமல் நீயாகவே இருப்பாய். புஷ்கராக்‌ஷனே. உனக்கு நமஸ்காரங்கள். தாமரைக் கண்ணனே. சமம் இல்லாதவனே. கருணாளுவே. அனைவரையும் காப்பவனே.

****

Saturday, October 29, 2022

#18 - 36-37-38 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

36. ஸ்ரீ ப்ரப4வே நம:

பூ4மி ஸ்வர்க்கா3தி3க3ளல்லி நீ ப்ரக்ருஷ்ட ‘ப்ரபு4’ ஸ்வாமி

நமோ பாரதந்த்ராதி3 தோ3ஷதூ3ர ஸ்ரீ பூ4ரமண

பூ4மாதி3கு3ண மஹைஶ்வர்ய ஸம்பூர்ண நீ ஸர்வதா3

ஸமாதி4க ரஹிதோத்தம அவதாரத3ல்லியு 

பூமி, ஸ்வர்க்காதிகளில் நீ சிறந்தவன். ‘பிரபு’. ஸ்வாமியே உனக்கு நமஸ்காரங்கள். பாரதந்த்ர முதலான தோஷங்கள் எதுவும் அற்றவன். ஸ்ரீ-பூ-ரமணனே. அனைத்து நற்குணங்களையும் கொண்டவன். மிகச் சிறந்த செல்வங்களைக் கொண்டவன். ஸம்பூர்ணனே. நீ எப்போதும் சம-அதிக இல்லாத ஸர்வோத்தமன். அவதாரங்களிலும்கூட இதுவே. 

37. ஸ்ரீ ஈஶ்வராய நம:

ஸர்வ நியாமகனு ‘ஈஶ்வர’ நமோ நமோ எம்பெ3

பார்வதீஶாதி3க3ளிகு3 உத்தமனு அஜபிதா

தே3வனீ மஹைஶ்வர்ய அனிர்விண்ண ஆனந்த3 ரூப

தே3வி லக்‌ஷ்மீரமண தோ3ஷ தூ3ர புருஷோத்தம 

அனைத்தையும் வழி நடத்துபவன். ‘ஈஶ்வர’ உனக்கு நமஸ்காரங்கள். பார்வதியின் தலைவனான ஈசன் முதலான அனைவரை விட உத்தமன் நீயே. பிரம்மனின் தந்தையே. தேவனே. மிகச் சிறந்த செல்வங்களைக் கொண்டவனே. சோர்வு அற்றவன். ஆனந்த ரூபன். தேவியான லட்சுமியின் தலைவன். தோஷங்கள் அற்றவன். புருஷோத்தமனே. 

38. ஸ்ரீ ஸ்வயம்பு4வே நம:

ஸ்வதந்த்ரனாகி3யே ஆவிர்ப4விஸுவி நீ ஸ்வயம்பு4’

ஆத3ரதி3 நமோ எம்பெ3 தீ3பாத் தீ3பாந்தர வோலு

மோத3 சின்மய அவதாரக3ள ப்ரகடிஸுவி

மத்ஸ்யாதி3 அவதாரக3ளு கர்ம நிமித்தவல்ல 

ஸ்வதந்த்ரமாகவே (யாருடைய தயவும் / உதவியும் இன்றி) தோன்றுவாய். நீ ஸ்வயம்பு. உனக்கு மரியாதையுடனான நமஸ்காரங்கள். ஒரு தீபத்திலிருந்து இன்னொரு தீபத்தை ஏற்றுவதைப் போல, உன்னுடைய சின்மய அவதாரங்களை நீ வெளிப்படுத்துகிறாய். அத்தகைய அவதாரங்கள், ஏதோவொரு கர்மங்களை செய்வதற்காக வந்தவை அல்ல (உன் இஷ்டப்படியே வந்தவை).

***