ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
27. ஸ்ரீ ஶிவாய நம:
அதிஶயானந்தா3னுப4வி ‘ஶிவனே’ நமோ எம்பே3
ஜக3த்விலக்ஷண பூர்ணஸுக மங்க3ல ஸ்வரூப
ப4க்தரிகெ3 மங்க3லத3 முக்தரிகெ3 நித்ய ஸுக2
வர்த்திஸுவி ஶிவரூபி ஶிவத ஸ்ரீபூ4ரமண
அதிசயமான (அபாரமான) ஆனந்தத்தை அனுபவிப்பவனே - ஶிவனே - உனக்கு நமஸ்காரங்கள். உலகிலிருந்து வேறுபட்டவனே. முழுமையான சுகத்தை கொண்டவனே. மங்கல ஸ்வரூபனே. பக்தர்களுக்கு மங்கல சுகத்தையும்; முக்தர்களுக்கு நித்ய சுகத்தையும் கொடுப்பவனே. ஶிவ ரூபியே. ஸ்ரீ-பூ- ஆகியோரின் தலைவனே.
28. ஸ்ரீ ஸ்தா2ணவே நம:
ஸ்தா2யி ஸர்வத்ர நீ விகாரவில்லதெ3 இருதியோ
மத்து அணுரூபனு ‘ஸ்தா2ணு’ நமோ எம்பெ3 நினகெ3
ஸ்தி2ரத்வதி3ந்த3லி நீனு ‘ஸ்தா2ணு’ எந்தெ3னிஸுவியோ
ஸர்வத்ர திஷ்ட ப3லாதி3க3ளல்லி ந்யூனதெ இல்ல
நிரந்தரமானவனே. அனைத்து இடங்களிலும் நீ எவ்வித மாற்றங்களும் இல்லாமல் நிறைந்திருக்கிறாய். அணு ரூபனாக இருக்கிறாய். ஸ்தாணுவே உனக்கு நமஸ்காரங்கள். நிரந்தரமாக இருப்பதால், நீ ஸ்தாணு என்று அழைக்கப்படுகிறாய். அனைத்து இடங்களிலும் நீ வ்யாபித்திருக்கிறாய். வலிமை முதலான உன் குணங்களில் எவ்வித குறைகளும் இல்லை.
29. ஸ்ரீபூ4தாத3யே நம:
ப்ராணிக3ள காரணனே ‘பூ4தாதி3’ நமோ நினகெ3
நீனேவெ ஸர்வப்ராணிக3ள ஜன்மாதி3 காரணனு
நீனே ஸர்வ ப்ராணிக3ள ப4க்ஷகனு எந்தி3ஹுது
நிர்ணய ஸூத்ர அத்தா சராசர க்3ரஹணாத் எந்து3
ப்ராணிகளுக்கு காரணமானவனே. பூதாதி-யே உனக்கு நமஸ்காரங்கள். அனைத்து ப்ராணிகளின் ஜென்மாதி அனைத்திற்கும் காரணன் நீயே. அத்தா சராசர க்ரஹணாத் - என்று, பிரம்ம ஸுத்ர பாஷ்யமானது - நீயே அனைத்து பிராணிகளையும் உண்பவன் என்று சொல்கிறது.
***
No comments:
Post a Comment