Friday, October 28, 2022

#17 - 33-34-35 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

 ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

33. ஸ்ரீ பா4வனாய நம:

ஞான நியமன மாள்பபா4வனநமோ விஷய

ஸன்னிகர்ஷதி3 மனவ பரிணமிஸி நீ அல்லி

ஞான புட்டிஸி ஒத3கு3வி அபி4ப்ராயக3ளன்னு

நினகெ3 நமோ ஸங்கர்ஷண வாஸுதே3 ப்ரத்3யும்ன 

ஞானத்தைக் கொடுப்பவனே ‘பாவனனே உனக்கு நமஸ்காரங்கள். விஷயத்தை சுருக்கி, மனதை உன் வசம் இழுத்து, அதில் ஞானத்தை உருவாக்கி, அங்கு அபிப்பிராயங்களை கொடுப்பாய். உனக்கு நமஸ்காரங்கள். ஸங்கர்ஷணனே. வாஸுதேவனே. பிரத்யும்னனே. 

34. ஸ்ரீ 4த்ரே நம:

4க்த க்ருத ஸ்துதிக3 ஸ்வீகரிஸி இட்டுகொம்ப3

4ர்த்தா நமோ 3யதி3 நீ ஒப்பி இட்டுகோ ஸ்தோத்ர

4க்தவத்ஸல ஞான ஸுக2 புஷ்டி ப்ரதா3தனு ஸ்ரீ

ஸீதாரமண ஸ்ரீகிருஷ்ண வேத3வ்யாஸ ஸ்ரீநிவாஸ 

பக்தர்கள் செய்யும் ஸ்துதிகளை ஏற்று வைத்துக் கொள்ளும் ‘பர்த்தா உனக்கு நமஸ்காரங்கள். இந்த ஸ்தோத்திரங்களை நீ கருணையுடன் ஒப்புக் கொண்டு ஏற்றுக் கொள். பக்தவத்ஸலனே. ஞான, சுகங்களைக் கொடுப்பவனே. ஸ்ரீஸீதா ரமணனே. ஸ்ரீகிருஷ்ணனே. வேதவ்யாஸனே. ஸ்ரீனிவாஸனே. 

35. ஸ்ரீப்ரப4வாய நம:

ஸர்வ விஷயதி3 ப்ரக்ருஷ்ட ஞானவந்தப்ரப4

ஸர்வதா3 நமோ வ்ருஷப4 ஸனத் குமார ஆத்ரேய

ஸவித்ரு ஶஶியலி ஜ்வலிப ஹம்ஸ ஹயமுக2

கவிகே3 ஸ்ரீவ்யாஸ ரக்ஷமாம் தே3ஹிமே ஸுபு3த்3தி4ம் 

அனைத்து விஷயங்களாலும் சிறந்த ஞானம் கொண்டவனே. ‘ப்ரபவ உனக்கு நமஸ்காரங்கள். வ்ருஷபனே. ஸனத் குமாரனே. ஆத்ரேயனே. ஸவித்ரு என்னும் சூரியனில் ஜொலிப்பவனே. ஹம்ஸனே. ஹயக்ரீவனே. கவிஞர்களால் போற்றப்படுபவனே. ஸ்ரீவ்யாஸனே. என்னை காப்பாயாக. எனக்கு நல்புத்தியைக் கொடுப்பாயாக.

***



No comments:

Post a Comment