Saturday, December 31, 2022

#70 - 192-193-194 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

192. ஸ்ரீ கோ3விந்தா3ய நம:

பஶுபுத்ர மொத3லாத3வர ஸம்ப3ந்த4 மாடி3ஸுவ

ஸ்ரீஶ ‘கோ3விந்த’ நமோ ஹீங்கார நாம ப்ரதிபாத்3ய

பூ4ஸுரரிம் அமரரிம் ஸூரிக3ளிம் ஸம்ஸ்துதனு

ஸமஸ்த வேத3வாக்யக3ளிந்த3 கீர்த்தித வேத3வேத்3ய 

மாடு, வாரிசு ஆகியவற்றை வழங்குபவனான ஸ்ரீஶனே. ‘கோவிந்தனே’ உனக்கு என் நமஸ்காரங்கள். ஹீங்கார என்று அழைக்கப்படுபவனே. பூமியில் வாழ்பவர்களால், முக்தர்களால், தேவதைகளால் வணங்கப்படுபவனே. அனைத்து வேத வாக்கியங்களாலும் போற்றப்படுபவனே. வேதவேத்யனே. 

193. ஸ்ரீ கோ3விதா3ம்பதயே நம:

தேஜஸ்விக3ள ஸ்வாமி ‘கோ3விதா3ம்பதி’ நமோ எம்பெ3

ஸஞ்ஞானதேஜஸ்வி அபரோக்‌ஷி ப4க்தருக3ளிகு3

ஸூர்யாதி3க்3ரஹ நக்‌ஷத்ர த1டித்தாதி3 தே3வர்க்க3ளிகு3

தேஜஸ்வி ஸுர ரிஷியஜகர்கு3 ரக்‌ஷக ஸ்வாமி 

அறிஞர்களின் ஸ்வாமியே ‘கோவிதாம்பதியே’ உனக்கு என் நமஸ்காரங்கள். உன் பக்தர்களுக்கு யதார்த்த ஞானத்தையும், அபரோக்‌ஷத்தையும் வழங்குபவனே. சூரியன் முதலான கிரகங்களுக்கும், நட்சத்திர முதலானவர்களுக்கும், தேவர்களுக்கும், ஞானத்தைக் கொண்ட ரிஷிகளுக்கும் கூட நீயே ரக்‌ஷகனாக இருக்கிறாய். ஸ்வாமியே. 

194. ஸ்ரீ மரீசயே நம:

தாமஸ தை3த்யர்க3ள மரண ஹொந்தி3ஸுவ ‘மரீசி’

நமோ எம்பெ3 அக்3ஞான ஸம்ஹர ஸக்ஞானதா3த

சாமீகராப4 ப்ரகாஶவான் நிர்மல ஸ்வரூப

அமலகு3ண ஜலநிதே4 க்ருபாம் ம்ருத ஸுரிஸோ 

தாமஸ தைத்யர்களுக்கு மரணத்தை கொடுப்பவனே ‘மரீசியே’ உனக்கு என் நமஸ்காரங்கள். அஞ்ஞானத்தை அழித்து, ஸுக்ஞானத்தை அளிப்பவனே. தங்கமயமாக ஒளிர்பவனே. நிர்மல ஸ்வரூபம் கொண்டவனே. குறைகள் அற்ற குணங்களைக் கொண்டவனே. பாற்கடலில் வசிப்பவனே. உன் கருணை என்னை மழையை பொழிவாயாக.

***


Friday, December 30, 2022

#69 - 189-190-191 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

189. ஸ்ரீ ஸதாம்க3தயே நம:

கு3ணக3ள ஆஶ்ரய நீ ‘ஸதாம்க3தி’ நமோ நமோ

ஆனந்தா3விர்ப4விஸித3 முக்தரிகு3 கதி நீனு

ஞானப4க்தி வைராக்3யயுக் ஸஜ்ஜனக3ள் க3திப்ரத3

அன்ருதவல்ல ஸத்யம் ஜக3த்தெம்ப3 ஞானதா3த 

நற்குணங்களின் கடல் நீயே ‘ஸதாம்கதியே’ உனக்கு என் நமஸ்காரங்கள். ஆனந்த நிலையில் இருக்கும் முக்தர்களுக்கு நீயே கதி. ஞான, பக்தி, வைராக்கியங்களைக் கொண்ட ஸஜ்ஜனர்களுக்கு கதியை அளிக்கிறாய். ஜகத் என்பது ஸத்யமே. பொய் அல்ல என்னும் ஞானத்தை வழங்குபவனே. 

190. ஸ்ரீ அனிருத்3தா4ய நம:

நிரோத4மாள்ப ஜனரு இல்லத3வ ‘அனிருத்3த4’

ஶரணு நமோ ஸ்வேச்சா ப்ரவ்ருத்தியுள்ளவ ஸ்வதந்த்ர

ஹரிபரான்முக2ராத3 ஶ்ருதி விரோதி4 து3ஷ்டர

ஜரிவ ஶரணரிகெ3 ப்ரியகர அனிருத்3த4 

எதிர்க்கும் (வெல்லும்) மக்கள் யாரும் இல்லாதவனே ‘அனிருத்தனே’ உனக்கு என் நமஸ்காரங்கள். தன் இஷ்டப்படியே செயல்களை செய்யும் வழக்கம் கொண்டவனே. ஸ்வதந்த்ரனே. ஸ்ரீஹரிக்கு எதிரான, ஶ்ருதிக்கு எதிரான துஷ்டர்களை அழிப்பவனே. உன்னை சரணடைந்தவர்களுக்கு ப்ரியமானவனே. அனிருத்தனே. 

191. ஸ்ரீ ஸுரானந்தாய நம:

உக்குவ ஸுபூர்ண ஆனந்த3 ப்ரசுர ‘ஸுரானந்த3’

பா3கி3ஶிர நமோ எம்பெ3 ஆனந்த3 ஒத3கி3ஸுவி

ப4க்தரிகெ3 ஶோப4னஞான அபரோக்‌ஷ ப்ரதா3த

அகளங்க நித்யானந்தானுப4வ ஸ்வரூப ஸ்வாமி 

நிரம்பி வழிவதான, பூர்ணமான ஆனந்தத்தைக் கொண்டவனே ‘ஸுரானந்தனே’ உனக்கு என் தலை வணங்கியதான நமஸ்காரங்கள். மகிழ்ச்சியைக் கொடுப்பாயாக. பக்தர்களுக்கு முக்தி  ஞானத்தை, அபரோக்‌ஷத்தை வழங்குபவனே. களங்கமற்ற நித்யானாந்த அனுபவத்தைக் கொண்ட ஸ்வரூபத்தைக் கொண்டவனே. ஸ்வாமியே.

***


Thursday, December 29, 2022

#68 - 186-187-188 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

186. ஸ்ரீ மஹேஶ்வாஸாய நம:

மஹாஶ்ரேஷ்ட த4னுர்த4ர ‘மஹேஶ்வர’ நமோ எம்பெ3

மஹன் நாராயண த4னுஷ்பா4ர்க்க3வ ராக4வகி3த்த

மஹேந்த்3ர கொட்டித்3த3 த4னுஸ்கொண்டி3 தபோத4னரிந்த3

மஹக்ஞான இச்சாசக்தியிம் ஸர்வதா3 க்ரியாவான் 

மிகச் சிறந்தவனே. தனுர்தரனே. ‘மஹேஶ்வரனே’ உனக்கு என் நமஸ்காரங்கள். நாராயணனே. தனுஸ் ஏந்திய பார்க்கவனே. ருத்ரதேவர், ஸ்ரீராமனுக்கு கொடுத்த தனுஸ்ஸினை கொண்டவனே. உன்னுடைய இச்சா சக்தியினால், அறிஞர்கள் மூலமாக ஞானத்தை கொடுப்பவனே. 

187. ஸ்ரீ மஹீப4ர்த்ரே நம:

க3வாஶ்வாதிக3ள ஸ்வாமி ‘மஹீப4ர்த்ரா’ நமோ எம்பெ3

கவாஶ்வாதி3க3ள் நின்னிந்த3 ஜன்ய ஆஶ்ரித நியம்ய

‘தஸ்மாத3ஶ்வா அஜாயந்த ஏகே சோ ப4யாத3த:’ க3

வோஹ ஜக்ஞிரே தஸ்மாத்’ எந்து3 ஸ்ருதி ஸ்ருஷ்டாதா4ரக 

பசு, குதிரைகளின் ஸ்வாமியே ‘மஹீபர்த்ரே’ உனக்கு என் நமஸ்காரங்கள். பசு, குதிரைகள் ஆகியவை உன்னிடமிருந்தே பிறக்கின்றன. அனைத்திற்கும் நீயே கதி. ‘தஸ்மாதஶ்வா...’ என்று ஸ்ருதி சொல்வதைப் போல, ஸ்ருஷ்டி முதலான அனைத்திற்கும் ஆதாரமானவனே. 

188. ஸ்ரீ ஸ்ரீனிவாஸாய நம:

ஸர்வாபீ4ஷ்டாக3ளாஶ்ரய ‘ஸ்ரீனிவாஸ’ நமோ எம்பெ3

ஸர்வஸம்பத்கரி ஸ்ரீ வக்‌ஷோனிவாஸ ஸர்வேஶ்வர

ஸ்ரீ வத்ஸத4ரயெந்து3 ஸுப்ரக்யாதனாகி3ருவி

ஸர்வத்ர ஸ்ரீஸஹ இப்ப வ்யாப்த ஔதா3ர்யஸிந்து3 

அனைத்து அபீஷ்டங்களுக்கும் கதியானவனே. ‘ஸ்ரீனிவாஸனே’ உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து செல்வங்களையும் கொண்டவளாள ஸ்ரீலட்சுமிதேவி உன் மார்பில் வசிக்கிறாள். ஸர்வேஸ்வரனே. ஸ்ரீவத்ஸன் என்று நீ புகழ் பெற்றிருக்கிறாய். அனைத்து இடங்களிலும், ஸ்ரீலட்சுமிதேவி உடனேயே இருக்கிறாய். கருணைக் கடலே.

**