Monday, December 26, 2022

#65 - 177-178-179 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

177. ஸ்ரீ மஹாப3லாய நம:

மஹாப3லவந்தனேமஹாப3நமோ நினகெ3

மஹாத்3ரியுக் பூ4மி ஹொத்த ஶேஷன்ன ஹொத்த வாயுன்ன

மஹாகூர்ம நீ ஹொத்திருவி ஜக3த்ஸர்வவன்ன நீ

3ஹிரந்தர் வ்யாபிஸிருவ தா4ரகனு நியந்தா 

மஹா வலிமையைக் கொண்டவனே. ‘மஹாபலனே உனக்கு என் நமஸ்காரங்கள். இந்த பிரம்மாண்டத்தை தாங்கியுள்ள சேஷனை, அந்த சேஷனை தாங்கியுள்ள வாயுவை, தாங்கியுள்ள கூர்மரூபி நீயே. உலகம் முழுக்க நீ உள்ளே மற்றும் வெளியே என அனைத்து இடங்களிலும் வ்யாபித்திருக்கிறாய். 

178. ஸ்ரீ மஹாபு3த்3தி4யே நம:

மஹாபு3த்3தி4வந்தனெமஹாபு3த்3தி4நமோ நினகெ3

மஹாக்ஞான ஸ்வதந்த்ர ஸதா3 ஸர்வவிஷய ஞாத்ரு

மஹாப்ரளயதி3 வேத3 நின்னொளிட்டு ரக்ஷிஸி நீ

ப்3ரம்மகெ3 போ4தி3ஸுதி ஹயஶீர்ஷ வேத3க்ஞ ஸ்ரீ 

மஹா அறிஞனே. ‘மஹாபுத்தியே உனக்கு என் நமஸ்காரங்கள். மிகச் சிறந்த ஞானத்தைக் கொண்டவனே. ஸ்வதந்த்ரனே. எப்போதும் அனைத்து விஷயங்களையும் அறிந்தவனே. மகா பிரளய காலங்களில், வேதங்களை உனக்குள் வைத்துக் கொண்டு காத்தாய். அந்த வேதங்களை நீ ஹயக்ரீவ ரூபியாக வந்து, பிரம்மனுக்கு உபதேசம் செய்தாய். ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. 

179. ஸ்ரீ மஹாவீர்யாய நம:

மஹாவீர்ய ஸாமர்த்2யரூபமஹாவீர்யனேநமோ

மஹாப்ரளய முகி3யலு ப்ரக்ருதிய க்ஷோபி4ஸி

மஹானஹங்காராதி33 தத்3தே3வர்க3 ஸ்ருஜிஸி

பி3ரம்மாண்ட3 நிர்மிஸிதி3 பி3ரம்மகு3ரோ கமலாபதே 

மஹாவீர்யனே. மிகச் சிறந்த சாமர்த்தியம் கொண்டவனே. ‘மஹாவீர்யனே உனக்கு என் நமஸ்காரங்கள். மஹா பிரளய காலத்திற்குப் பிறகு, ப்ரக்ருதியை அழித்து, அஹங்கார முதலான தத்வங்களை, அதன் தத்வாபிமானி தேவதைகளை படைத்து, பிரம்மாண்டத்தை நிர்மாணம் செய்தய். பிரம்மனின் குருவே. கமலாவான ஸ்ரீலட்சுமிதேவியின் பதியே.

***


No comments:

Post a Comment