Friday, December 30, 2022

#69 - 189-190-191 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

189. ஸ்ரீ ஸதாம்க3தயே நம:

கு3ணக3 ஶ்ரய நீஸதாம்க3திநமோ நமோ

ஆனந்தா3விர்ப4விஸித3 முக்தரிகு3 கதி நீனு

ஞானப4க்தி வைராக்3யயுக் ஸஜ்ஜனக3ள் 3திப்ரத3

அன்ருதவல்ல ஸத்யம் ஜக3த்தெம்ப3 ஞானதா3 

நற்குணங்களின் கடல் நீயே ‘ஸதாம்கதியே உனக்கு என் நமஸ்காரங்கள். ஆனந்த நிலையில் இருக்கும் முக்தர்களுக்கு நீயே கதி. ஞான, பக்தி, வைராக்கியங்களைக் கொண்ட ஸஜ்ஜனர்களுக்கு கதியை அளிக்கிறாய். ஜகத் என்பது ஸத்யமே. பொய் அல்ல என்னும் ஞானத்தை வழங்குபவனே. 

190. ஸ்ரீ அனிருத்3தா4 நம:

நிரோத4மாள்ப ஜனரு இல்லத3அனிருத்34

ஶரணு நமோ ஸ்வேச்சா ப்ரவ்ருத்தியுள்ளவ ஸ்வதந்த்ர

ஹரிபரான்முக2ராத3 ஶ்ருதி விரோதி4 து3ஷ்டர

ஜரிவ ஶரணரிகெ3 ப்ரியகர அனிருத்34 

எதிர்க்கும் (வெல்லும்) மக்கள் யாரும் இல்லாதவனே ‘அனிருத்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். தன் இஷ்டப்படியே செயல்களை செய்யும் வழக்கம் கொண்டவனே. ஸ்வதந்த்ரனே. ஸ்ரீஹரிக்கு எதிரான, ஶ்ருதிக்கு எதிரான துஷ்டர்களை அழிப்பவனே. உன்னை சரணடைந்தவர்களுக்கு ப்ரியமானவனே. அனிருத்தனே. 

191. ஸ்ரீ ஸுரானந்தாய நம:

உக்குவ ஸுபூர்ண ஆனந்த3 ப்ரசுரஸுரானந்த3

பா3கி3ஶிர நமோ எம்பெ3 ஆனந்த3 ஒத3கி3ஸுவி

4க்தரிகெ3 ஶோப4னஞான அபரோக் ப்ரதா3

அகளங்க நித்யானந்தானுப4 ஸ்வரூப ஸ்வாமி 

நிரம்பி வழிவதான, பூர்ணமான ஆனந்தத்தைக் கொண்டவனே ‘ஸுரானந்தனே உனக்கு என் தலை வணங்கியதான நமஸ்காரங்கள். மகிழ்ச்சியைக் கொடுப்பாயாக. பக்தர்களுக்கு முக்தி  ஞானத்தை, அபரோக்‌ஷத்தை வழங்குபவனே. களங்கமற்ற நித்யானாந்த அனுபவத்தைக் கொண்ட ஸ்வரூபத்தைக் கொண்டவனே. ஸ்வாமியே.

***


No comments:

Post a Comment