Saturday, December 17, 2022

#56 - 150-151-152 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

150. ஸ்ரீ ஜக3தா3தி3ஜாய நம:

4க்தியிந்த3 பூஜெ மாள்பர்கெ3 3ஹுத3யவ நீடி3

அபி4வ்யக்தனாகு3விஜக3தா3தி3ஜனேநமஸ்தே

ஜக3த்திகெ3 ஆதி3யாத3 சதுர்முக2 ஜனக

ப்ரக்ருதி குணக்ஷோப4னதி3 தத்வாதி3 ஸ்ருஷ்டிகெ3ய்தி3 

பக்தியுடன் பூஜை செய்பவர்களுக்கு அதிக கருணையை காட்டி அவர்களுக்கு தரிசனம் அளிக்கிறாய். ‘ஜகதாதிஜனே உனக்கு என் நமஸ்காரங்கள். உலகிற்கு ஆதியான பிரம்மனின் தந்தையே. ப்ரக்ருதியின் குணங்கள், அதன் தத்வங்கள் ஆகியவற்றை படைத்தவனே. 

151. ஸ்ரீ அனகா4 நம:

நிர்தோ3அனக4நமோ பாபாதி3 தோ3ஷரஹித

மோத3மய நீ பாரதந்த்ர்யாதி3 ஸர்வதோ3 தூ3

ஸ்வதந்த்ர ஶோப4னபூர்ண நீ ப்ரக்ருதே: பர:ஶுக்ர

வாத33லு தோ3ஷாரோப அபவாத3 2ண்ட3னீய 

தோஷங்கள் அற்றவனே. ‘அனகனே உனக்கு என் நமஸ்காரங்கள். பாவங்கள் முதலான தோஷங்கள் இல்லாதவனே. மகிழ்ச்சிகரமானவனே. பாரதந்த்ர முதலான எவ்வித தோஷங்களும் உனக்கு இல்லை. ஸ்வதந்த்ரனே. குணபூர்ணனே. எவ்விதமான வாதங்களிலும் உன் மேல் தோஷங்களை சுமத்துவதோ, அபவாதங்களை செய்வதோ கண்டிக்கத்தக்கது. 

152. ஸ்ரீ விஜயாய நம:

விஶேஷாத் ஶத்ருக3 ஜயிஸுவவிஜயநமோ

விஶேஷேன ஜயஶீல ஆத்33ரிம் விஜய நீனு

கம்ஸகேஶீ ஹேமகஶிபு ஹிரண்யாக் ராவண

அஸுர 3ஹுமந்தி3 தரிது3 இளெய காய்தி 

எதிரிகளை சுலபமாக வெல்பவனான ‘விஜயனே உனக்கு என் நமஸ்காரங்கள். இவ்வாறு சிறப்பாக வெல்வதாலேயே உனக்கு ‘விஜய என்று பெயர். கம்சன், கேஶீ, ஹிரண்யகஶிபு, ஹிரண்யாக்‌ஷ, ராவணன் போன்ற பல அசுரர்களைக் கொன்று, உலகினை காத்தவனே.

***

1 comment: