Saturday, December 31, 2022

#70 - 192-193-194 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

192. ஸ்ரீ கோ3விந்தா3 நம:

ஶுபுத்ர மொத3லாத3வர ஸம்ப3ந்த4 மாடி3ஸுவ

ஸ்ரீகோ3விந்தநமோ ஹீங்கார நாம ப்ரதிபாத்3

பூ4ஸுரரிம் அமரரிம் ஸூரிக3ளிம் ஸம்ஸ்துதனு

ஸமஸ்த வேத3வாக்யக3ளிந்த3 கீர்த்தித வேத3வேத்3 

மாடு, வாரிசு ஆகியவற்றை வழங்குபவனான ஸ்ரீனே. ‘கோவிந்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஹீங்கார என்று அழைக்கப்படுபவனே. பூமியில் வாழ்பவர்களால், முக்தர்களால், தேவதைகளால் வணங்கப்படுபவனே. அனைத்து வேத வாக்கியங்களாலும் போற்றப்படுபவனே. வேதவேத்யனே. 

193. ஸ்ரீ கோ3விதா3ம்பதயே நம:

தேஜஸ்விக3 ஸ்வாமிகோ3விதா3ம்பதிநமோ எம்பெ3

ஸஞ்ஞானதேஜஸ்வி அபரோக்ஷி 4க்தருக3ளிகு3

ஸூர்யாதி3க்3ரஹ நக்ஷத்ர 1டித்தாதி3 தே3வர்க்க3ளிகு3

தேஜஸ்வி ஸுர ரிஷியஜகர்கு3 ரக்ஷக ஸ்வாமி 

அறிஞர்களின் ஸ்வாமியே ‘கோவிதாம்பதியே உனக்கு என் நமஸ்காரங்கள். உன் பக்தர்களுக்கு யதார்த்த ஞானத்தையும், அபரோக்‌ஷத்தையும் வழங்குபவனே. சூரியன் முதலான கிரகங்களுக்கும், நட்சத்திர முதலானவர்களுக்கும், தேவர்களுக்கும், ஞானத்தைக் கொண்ட ரிஷிகளுக்கும் கூட நீயே ரக்‌ஷகனாக இருக்கிறாய். ஸ்வாமியே. 

194. ஸ்ரீ மரீசயே நம:

தாமஸ தை3த்யர்க3 மரண ஹொந்தி3ஸுவமரீசி

நமோ எம்பெ3 அக்3ஞான ஸம்ஹர ஸக்ஞானதா3

சாமீகராப4 ப்ரகாஶவான் நிர்மல ஸ்வரூப

அமலகு3 ஜலநிதே4 க்ருபாம் ம்ருத ஸுரிஸோ 

தாமஸ தைத்யர்களுக்கு மரணத்தை கொடுப்பவனே ‘மரீசியே உனக்கு என் நமஸ்காரங்கள். அஞ்ஞானத்தை அழித்து, ஸுக்ஞானத்தை அளிப்பவனே. தங்கமயமாக ஒளிர்பவனே. நிர்மல ஸ்வரூபம் கொண்டவனே. குறைகள் அற்ற குணங்களைக் கொண்டவனே. பாற்கடலில் வசிப்பவனே. உன் கருணை என்னை மழையை பொழிவாயாக.

***


No comments:

Post a Comment