Sunday, December 25, 2022

#64 - 174-175-176 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

174. ஸ்ரீ அதீந்த்3ரியாய நம:

ஶரீரேந்த்3ரியாதி33ளதிக்ராந்தஅதீந்த்3ரியனே

ஶரணு நமோ ஸுக2சின்மாத்ர அப்ராக்ருத ரூப

ஸஹஸ்ரஶீர்ஷ ஸஹஸ்ராக் ஸஹஸ்ரசரணாதி3

இந்தி3ரியக3ளு ஸுபூர்ண 3ஹள இவெ நினகெ3 

சரீர, இந்திரியங்கள் ஆகியவற்றை மீறியவனே ‘அதீந்த்ரியனே உனக்கு என் நமஸ்காரங்கள். சின்மய, அப்ராக்ருத ரூபம் கொண்டவனே. ஸஹஸ்ர தலைகளை, ஸஹஸ்ர கண்களை, ஸஹஸ்ர பாதங்களை, இந்திரியங்கள் ஆகியவற்றை கொண்டவனே. பூர்ணனே. இவை உனக்கு ‘அனந்தமாக உள்ளன. 

175. ஸ்ரீ மஹாமாயாய நம:

இச்சா க்ரியா ஞான மொத3லாகி3 ஸம்பூர்ணகு3

ப்ரோச்சப3 எல்லரனு பராப4 மாடு3வந்த2

ஸ்வேச்சா மஹாஶக்தி ஸ்வரூபமஹாமாயனேநமோ

2சரேந்த்3 வாஹன்ன ஸ்ரீ ஹ்ரீ ஸமேத வாயுஸ்த2 

விருப்பம், செயல்கள், ஞானம் ஆகிய அனைத்து குணங்களையும் முழுமையாகக் கொண்டவனே. உன் வலிமையால் அனைவரையும் வெல்லும் சக்தி கொண்டவனே. உன் இஷ்டப்படியே மிகப்பெரிய சக்தியைக் கொண்டவனே. ‘மஹாமாயனே உனக்கு நமஸ்காரங்கள். கருட வாகனனே. முக்ய பிராணாந்தர்கதனே. மற்றும் லட்சுமிதேவியுடன் இருப்பவனே. 

176. ஸ்ரீ மஹோத்ஸாஹாய நம:

மஹோத்ஸாஹவந்தனேமஹோத்ஸாஹநமோ நினகெ3

மஹாஞான ஸ்வேச்சாதி3 க்ருதத்வ லக்ஷண

மஹைஶ்வர்யரூப உத்ஸாஹவான் ஜக3ஜ்ஜன்மாதி3

மஹாகார்யோன்முக2னு பி3ரம்மேஶான சேஷ்டகனு 

மிகப்பெரிய உற்சாகத்துடன் இருப்பவனே. ‘மஹோத்ஸாஹனே உனக்கு என் நமஸ்காரங்கள். மஹா ஞானம் கொண்டவனே. தன் இஷ்டப்படியே ஸ்ருஷ்டி செய்யும் லட்சணங்களைக் கொண்டவனே. மிகச் சிறந்த ஐஸ்வர்ய ரூபத்தினைக் கொண்டவனே. ஜகத்தின் படைத்தல் முதலான அனைத்து மிகப்பெரிய காரியங்களை செய்பவனே. பிரம்ம, ஈசன் ஆகியோரை வழி நடத்துபவனே.

***


No comments:

Post a Comment