Wednesday, October 19, 2022

#8 - 6-7-8 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

6. ஸ்ரீபூதப்ருதே நம:

ப்ராணி எல்லர போஷகபூ4தப்4ருத்நமோ நினகெ3

நின்னாதீ4னவு ஸர்வ சராசர ஜக3த்து ஸ்வாமி

நீனேவெ ஸர்வ ஆதா4ரனாகி3ருதிஹி ஸ்ரீபதே

ஆம்னாய ஸ்ம்ருதி ஸித்34வு பி34ர்த்யவ்யய ஶ்வர 

ப்ராணிகள் அனைவரின் போஷகனான (காப்பவன்) ‘பூதப்ருத் உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து சராசர ஜகத்தும் உன் அதீனத்திலேயே இருக்கிறது. ஸ்வாமி, நீயே, அனைத்திற்கும் ஆதாரனாக இருக்கிறாய். ஸ்ரீபதி. ஸ்ருதிகள் உன்னையே புகழ்கின்றன. அனைத்தையும் தரித்திருப்பவன். ஈஸ்வரன். 

7. ஸ்ரீபாவாய நம:

ஆனந்த3 நின்ன ப்4ருத்யரிகீ3விபா4நமோ எம்பெ3

ஞான ரக்ஷண காந்திதா3 ஸர்வக3னாகி3ருவி

இன ஸோம தாரெ மொத3லாஹவரொளு ப்ரவேஶிஸி

நீனு அவர்க3 பா4ஸகனாகி3ஹியோ ஸ்வதந்த்ர || 

உன் பக்தர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறாய். ‘பாவனே உனக்கு நமஸ்காரங்கள். ஞானத்தைக் கொடுப்பவனே. ஒளியை (புகழை) கொடுப்பவனே. அனைத்து இடங்களிலும் வ்யாப்தனானவன். சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் என இத்தகையவர்களில் நுழைந்து, நீயே அவர்களுக்கு ஒளி கொடுப்பவனாக இருக்கிறாய். ஸ்வதந்த்ரனே. 

8. ஸ்ரீபூதாத்மனே நம:

ஜக3ன்னாத2 ஸர்வ ஜக3த்வாஸபூ4தாத்மநமஸ்தே

வாகீ ஶிவ விப ஶக்ராதி3 ப்ராணி ஸர்வ ஜக3த்

திகெ3 நியாமக ஶாஸகனு ஸ்வாமியு நீனேவெ

அக4தூ3 கு3ணபூர்ண ஆனந்த3 ப்ரசுர ||

 

ஜகன்னாதனே. அனைத்து ஜகங்களிலும் வசிப்பவனே. பூதாத்மனே - உனக்கு நமஸ்காரங்கள். பிரம்மா, சிவ, கருட, இந்திர முதலான அனைவருக்கும், மற்றும் அனைத்து உலகிற்கும் நியாமகன். அனைவரையும் ஆள்பவன். ஸ்வாமி நீயே. அனைவரின் கஷ்டங்களையும் போக்குபவன். குணங்கள் நிறைந்தவன். ஆனந்தமயன்.

***

No comments:

Post a Comment