Saturday, October 1, 2022

[பத்யம் #133] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #133] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 133]

பாமரனு அத்யல்ப நா ஸு

க்ஷேம கோருத1 4க்தஸ்தோ1மகெ

கைமுகி3து3 பி3ன்னவிஸி பே3டு3வெனெல்ல காலத3லி |

ப்ரேமதி3ந்த3லி ஹிரிய தா3ஸரு

நேமிஸித3 ஸத்ஸம்ப்ரதா3யவ

பூ4மியலி ஸஜ்ஜனரு பாலிஸி மான்யராகு3வுது3 ||133 

நா - நான்; பாமரனு - எதுவும் அறியாத பாமரன்; அத்யல்ப - மிகச் சிறியவன்; ஸுக்ஷேம தோருத - அனைவரின் நலன்களையும் விரும்பி; பக்தஸ்தோமகெ - பக்தர்களின் குழுவினரிடம்; கைமுகிது பின்னவிஸி - கை குவித்து மரியாதையுடன்; எல்ல காலதலி - அனைத்து காலங்களிலும்; பேடுவெனு - வேண்டுகிறேன்; ஹிரிய தாஸரு - மூத்த (நமக்கு முந்தைய) ஹரிதாஸர்கள் ப்ரேமதிந்தலி - மிகவும் அன்புடன்; நேமிஸித - நமக்குக் கொடுத்த; ஸத்ஸம்ப்ரதாயவ - நல்ல ஸம்பிரதாயத்தினை; ஸஜ்ஜனரு - ஸஜ்ஜனர்கள்; பூமியலி - இந்த பூமியில்; பாலிஸி - பின்பற்றி; மான்யராகுவுது - தன்யர் ஆகவேண்டும். 

நம் முன்னோரான ஹரிதாஸர்கள் நமக்குக் காட்டிக் கொடுத்த வழியில் நாமும் செல்ல வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

நான் எதுவும் அறியாத பாமரன். மிகச் சிறியவன். அனைவரின் நலன்களையும் விரும்பி, பக்தர்களின் குழுவினரிடம் கை குவித்து மரியாதையுடன் அனைத்து காலங்களிலும் வேண்டுகிறேன். நமக்கு முந்தைய ஹரிதாஸர்கள் மிகவும் அன்புடன் நமக்குக் கொடுத்த நல்ல ஸம்பிரதாயத்தினை ஸஜ்ஜனர்கள் இந்த பூமியில் பின்பற்றி தன்யர் ஆகவேண்டும்

***


No comments:

Post a Comment