Sunday, October 16, 2022

#5 - அறிமுக ஸந்தி - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

அறிமுக ஸந்தி (முன்னுரை)


ஸ்த்ரீயரு கிருஷ்ண மந்த்ரோபதி3ஷ்டர் படி2ஸெ அர்ஹரு

காயித்ர்யாத்3யுபதே3 அனதி4காரி ஸர்வரிகு3

தி3வ்ய பா4ஷ்யரூப நுடி33 ஶ்ரவண மாத்ர

காய வாங்மன ஶுசி 4க்தி ஶ்ரத்3தா4 இரலேபே3கு ||12 

பெண்கள், கிருஷ்ண மந்திரத்தை உபதேசம் பெற்றவர்கள், காயத்ரி உபதேசத்திற்கு அதிகாரம் இல்லாதவர்கள் என அனைவரும், அழகான, பாஷ்ய ரூபமான இந்த நுடிகளை கேட்டால் மட்டுமே, அக புற என அனைத்தும் சுத்தம் ஆகிறது. இதற்கு ஸ்ரத்தா பக்தியும் அவசியம் இருக்க வேண்டும். 

நம: பரஸ்ம்யை புருஷாய பூ4யஸே ஸது3த்34

ஸ்தா2 நிரோத4 லீலயா க்3ருஹீத ஶக்தி த்ருதீயா

தே3ஹினாம் அந்தத்4ருவாயானு பலப்4 வர்த்மனே

ஸவிஷ ஆத்மாத்மவதாம் அதீ4ஶ்வர ஸ்த்ரயீமய: ||13 

நம:பரஸ்மை புருஷாய ... வர்த்மனே - இது பாகவத ஸ்லோகம் (2-4-12). ஸ்ருஷ்டி ஸ்திதி லயத்திற்கு காரணனான, அனைவருக்குள்ளும், அனைத்திலும் வ்யாப்தனான, ஸர்வோத்தமனான ஸ்ரீஹரிக்கு என்னுடைய வணக்கங்கள். 

4ர்மமயஸ்தபோமய: 3தவ்யரீகைரஜம் ஶம்

கராதி3பி4ர் விதர்க்ய லிங்கோ3 43வான் ப்ரஸீத3தாம்

நமஸ்த்ஸ்மை 43வதே வாஸுதே3வாய வேத4ஸே

ஸ்ரீபா43வத த்விதீய ஸ்கந்த4 சதுர்த்த2 அத்4யாய ||14 

ஏஷ... ப்ரஸீததாம் - இது பாகவத ஸ்லோகம் (2-4-19). ஸ்ரீஹரியே ஸர்வோத்தமன். அனைத்து வேதங்களாலும் புகழப்படுபவன் அவனே. பிரம்மா, ருத்ர முதலான அனைத்து தேவதைகளாலும் வணங்கப்படுபவன். அத்தகைய ஸ்ரீஹரி திருப்தி அடையட்டும்.

 3ருக3 மத்4வக3 ஸரஸிஜாஸனபித ஸ்ரீ

விரஜ கல்யாணதம ஸுகு3ணாப்3தி4 ஸர்வகர்த்த

ஸ்ரீப்ரஸன்ன ஸ்ரீனிவாஸஸஹஸ்ர நாமனே நமோ

நீ ரசிஸி நுடிஸித்3து3 அர்ப்பிதவு ப்ரீதனாகோ3 || 

பல்லவி

குருவந்தர்கதனான, மத்வாந்தர்கதனான, பிரம்மனின் தந்தையான, லட்சுமிதேவியின் பதியான, அனைத்து கல்யாண குணங்களின் கடலான, அனைத்தையும் செய்பவனான, ‘ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸனே, ஆயிரம் நாமங்களைக் கொண்டவனே - உனக்கு நமோ. நீயே என்னுள் இருந்து இயற்றச் செய்தது இது. இதனால் நீ திருப்தி அடைவாயாக. 

||முன்னுரையான முதலாம் ஸந்தி முடிந்தது ||

||ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து||

 ***

No comments:

Post a Comment