Thursday, February 24, 2022

ஸ்லோகம் #2: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #2: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

வனதி4யலி ஸேதுவெய கட்டுத த3னுஜரனு ஸதெ33டி3து33ஷரத2

தனயஸதி நீடி33 ஸுமாலிகெயனுக்3ரஹவ படெ3து3 |

வனஜநிலயள வல்லப4ன பத3 வனஜவு ஹ்ருத3யத3லி ஸந்தத

மனனத3லி கிம்புருஷத3லிஹ ஹனுமனனு ப4ஜிபெ1 ||2 

வனதியலி - கடலில்; ஸேதுவெய கட்டுத - பாலத்தைக் கட்ட உதவி செய்து; தனுஜரனு ஸதெபடிது - அசுரர்களைக் கொன்று; தஷரத தனயஸதி - தசரதனின் மகனின் மனைவி (ஸீதை); நீடித - கொடுத்த; ஸுமாலிகெய - ரத்ன மாலையை; அனுக்ரஹவ படெது - அவளின் அருளைப் பெற்று; வனஜநிலயள - தாமரையில் அமர்ந்திருப்பவளின்; வல்லபன - தலைவனின்; பத வனஜவு - பாத கமலங்களை; ஹ்ருதயதலி - தன் இதயத்தில்; ஸந்தத மனனதலி - எப்போதும் மனதில் தியானம் செய்தவாறு; கிம்புருஷதலிஹ - கிம்புருஷ கண்டத்தில்; இஹ - (இன்றைக்கும்) இருப்பவரான; ஹனுமனனு பஜிபெ - ஹனுமந்ததேவரை வணங்குகிறேன். 

ஹனுமந்ததேவரின் மகிமைகள் தொடர்கின்றன. ஸ்ரீராமனுக்கு பாலம் கட்ட உதவி செய்து, இலங்கையில் போரிட வந்த அசுரர்களைக் கொன்று, (ஸ்ரீராம ஸீதையுடன் அயோத்திக்கு திரும்பி வந்து), ஸீதை அருளிக் கொடுத்த ரத்மனாலையை ஏற்று, ஸ்ரீராமனின் பாத கமலங்களை தன் மனதில் நிறுத்தியவாறு, ஸ்ரீராமனின் தியானத்தை செய்தவாறு, இன்றும்கூட கிம்புருஷ கண்டத்தில் இருக்கும் ஸ்ரீஹனுமந்ததேவரை நான் வணங்குகிறேன். 

நிபத்ய ஸேதும் ரகுவம்ஷ கேது

ப்ரூபங்க ஸம்ப்ராந்த பயோதி மத்யே || (1-17)

கடலில் பாலம் கட்ட உதவினார் ஹனுமந்ததேவர். 

ஆத்வர்யவம் யுத்த மகே ப்ரதிப்ர (1-18). ராம ராவண யுத்தம் என்னும் யாகத்தில், லட்சமணன் ரித்விக்காக இருந்து யாகத்தை நடத்த, ஹனுமந்ததேவர் அவருக்கு துணையாக தலைமை ரித்விக்காக விளங்கினார் என்று மத்வவிஜயகாரர் விளக்குகிறார். 

இப்படியான போரினை முடித்துவிட்டு, ஸ்ரீராம ஸீதையுடன், ஹனுமந்ததேவர் அயோத்திக்கு திரும்பி வந்தார். பரம மங்கள மூர்த்தியான ஸ்ரீராமனை, பல காலம் சேவித்த ஹனுமந்தனுக்கு ஸீதாதேவி ஒரு ரத்னமாலையைக் கொடுத்து அருளினாள். 

ராமஸ்ய வாண்யா மணி மஞ்சுமாலா

வ்யாஜேன தீர்க்காம் கருணாம் பபந்த || (1-22) 

விஜயரகுபதி மெச்சி தரணிஸுதெயளகீயெ

பஜிஸி மௌக்திகத ஹாரவனெ படெத (11) 

இந்த மத்வவிஜய ஸ்லோகத்திலும், மத்வ நாமா ஸ்லோகத்தில் இதே விஷயம் சொல்லப்பட்டுள்ளது. 

கிம் வர்ணயாம பரமம் பிரஸாதம்

ஸீதாபதேஸ்தத்ர ஹரி ப்ரபர்ஹே || (1-26) 

அஜபதவியனு ராம கொடுவெனெனெ ஹனுமந்த

நிஜபகுதியனெ பேடி வரவ படெத (11) 

தனது பக்தனுக்கு பிரம்ம பதவியைக் கொடுக்கிறேன் என்று ஸ்ரீராமன் முன்வந்தபோது, ஹனுமந்ததேவர் தனக்கு திடமான பக்தியை மட்டும் கொடுக்க வேண்டும் என்று வேண்டினார். அதையே வரமாகக் கேட்டார். அதன்படியே, இன்றும் கிம்புருஷ கண்டத்தில் இருந்தவாறு, ஸ்ரீராம நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு, அங்குள்ள மக்களையும் ஸ்ரீராம நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபடச் செய்தவாறும் இருக்கிறார். 

இப்படிப்பட்ட மகிமைகளைக் கொண்ட ஹனுமந்ததேவரை, நான் வணங்குகிறேன் என்று ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர் சொல்லி, ஹனுமந்ததேவரின் மகிமையை முடித்து, அடுத்த ஸ்லோகத்தில் பீமசேனதேவரின் அவதாரத்தை விளக்குகிறார். 

***

No comments:

Post a Comment