Monday, February 28, 2022

ஸ்லோகம் #6: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #6: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 6]

அஸம மூவத்தெரடு3 லக்‌ஷண ஷிஷு ஷரீரவ பொக்கனாக்‌ஷண

பி3ஸுட1னா பரஜீவவனு அஸுபதியு தா ஹொரகெ3 |

அஸுரநிகரகெ1 கே23 ஸு2கஸந்தஸவு ஸஜ்ஜனததிகெ3 ஈ பரி

ஸுஸமயவிதெ3ம்பு33 நுடி3யிது3 தே3வது3ந்து3பி4யு ||6 

அஸம - எதனுடனும் ஒப்பிடமுடியாத; மூவத்தெரடு லக்‌ஷண - 32 லட்சணங்களைக் கொண்ட; ஷிஷு - அந்தக் குழந்தை; ஷரீரவ - அந்த தேகத்தில்; பொக்கனாக்‌ஷண - நுழைந்த அந்த சமயத்தில்; பரஜீவவனு - ஏற்கனவே அங்கு இருந்த ஜீவனை; அஸுபதியு - பிராணதேவர்; தா - தான்; ஹொரகெ - வெளியே; பிஸுடனா - இழுக்க, (அந்த சமயமானது); சஜ்ஜனததிகெ - சஜ்ஜனர்களின் கூட்டத்திற்கு; ஸுக ஸந்தஸவு - நற்காலம் என்னும் நம்பிக்கையையும்; அஸுர நிகரகெ - அசுரர்களின் கூட்டத்திற்கு; கேத - கெட்ட காலம்; ஈ பரி - இப்படியான; ஸுஸமயவிதெம்புத - காலங்கள் இப்போது வந்திருக்கின்றன என்பதாக; தேவதுந்துபியு - தேவலோகத்தில் வாத்தியங்கள்; நுடியுது - முழங்கின; 

மத்வ அவதார சமயத்தை, ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர் இவ்வாறு விளக்குகிறார். எதனுடனும் ஒப்பிடமுடியாத 32 லட்சணங்களைக் கொண்ட அந்தக் குழந்தை, அந்த தேகத்தில் நுழைந்த அந்த சமயத்தில், ஏற்கனவே அங்கிருந்த ஜீவனை, பிராணதேவர் தான் வெளியே இழுக்க, அந்த சமயத்தில், சஜ்ஜனர்களின் கூட்டத்திற்கு நற்காலம் என்னும் நம்பிக்கையையும், அசுரர்களின் கூட்டத்திற்கு கெட்ட காலம் வந்திருக்கின்றன என்பதாக, தேவலோகத்தில் வாத்தியங்கள் முழங்கின. 

மத்வ அவதார சமயத்தை, மத்வவிஜயம் இவ்வாறு வர்ணிக்கிறது. 

ஸந்துஷ்யதாம் ஸகல ஸன்னிகரைரஸத்பி:

கித்யேத வாயுரயமாவிரபூத் ப்ருதிவ்யாம் |

அரவ்யானிதீவ ஸுர துந்துபி மந்த்ரனாத:

ப்ராஸ்ராவி கௌதுக வஷௌரிஹ மானுஷைஸ்ச || (2-26) 

ஸ்ரீவாயுதேவர் அவதரித்துவிட்டார். இதனால் சஜ்ஜனர்கள் மகிழ்ச்சியடைந்தனர். துர்ஜனர்கள் துக்கமடைந்தனர். இதனை அறிவிப்பது போல, தேவலோகத்தில் இருக்கும் துந்துபி வாத்தியங்கள் முழங்கின. 

குழந்தையின் அவதாரத்தை இங்கு கூறிய ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர், (வாசுதேவனின்) பால லீலைகளை அடுத்த ஸ்லோகத்திலிருந்து துவக்குகிறார்.

 ***

1 comment: