ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
306. ஸ்ரீ யுகா3தி3க்ருதே நம:
ஸர்வஸுக2 யோக்3யதி3ந்த3 ஸுக2போ4க3 மாடி3ஸுவி
ஸர்வஸுக2 பூர்ணனே ‘யுகா3தி3க்ருத்’ நமோ நமஸ்தே
தே3வ நின்ன க்ரீடா3ர்த்த2 ஸஜ்ஜனோத்3தா4ரார்த்த2 யுக3க3ள்
ஸ்ரீவரனே நீ மாடி3ஸுவி த்ரயிமய த்ரையுக3
தக்க யோக்யதை / தகுதி கொண்டவர்களுக்கு தக்க போகங்களைக் கொடுக்கிறாய். ஸர்வ சுகங்களையும் முழுமையாகக் கொண்டவனே. யுகாதிக்ருத் - உனக்கு என் நமஸ்காரங்கள். தேவனே. ஸஜ்ஜனர்களை நீ உன் லீலைகளால் காக்கிறாய். ஸ்ரீவரனே இத்தகைய செயல்களை நீயே செய்விக்கிறாய். மூன்று யுகங்களில் அவதாரம் செய்தவனே.
307. ஸ்ரீ யுகா3வர்த்தாய நம:
யக்3ஞ தா3னாதி3க3ளனு பதே3பதே3 தி3ன தி3ன
யக்3ஞனே நீ ப்ரவ்ருத்திஸுவி ‘யுகா3வர்த்த’ நமஸ்தே
த்ரயியுக3னெ நீ சதுர்யுக3க3ள ஆவர்த்திஸி
யோக்3ய ஸாத4ன ஜனரிகொ3த3கி3ஸுவி ஸர்வக்ஞ
யக்ஞ, தானங்களை நீ தினம்தினம் செய்விக்கும் யக்ஞனே, யுகாவர்த்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். மூன்று யுகங்களில் அவதாரம் செய்தவனே. நீ நான்கு யுகங்களிலும் இருக்கிறாய். யோக்ய ஸாதனங்களை செய்த மக்களுக்கு நீ தரிசனம் அளிக்கிறாய். ஸர்வக்ஞனே.
308. ஸ்ரீ அனேகமாயாய நம:
அன்யைக ஸாமர்த்த2வந்தனு ‘அன்யைகமாயாய’ நமோ
நின்னிச்சாஶக்தி ஸாமர்த்2யக3ளிகெ3ந்து3 எணெ இல்ல
நின்ன யாவாக3ளு மித்2யாவல்ல ஸத்யவே நின்னிச்சா ஶக்தி
நின்னிச்சா க்ரியா ஞானஶக்தியிம் ஸ்ருஷ்ட்யாத்3யஷ்டகவு
அபாரமான சாமர்த்தியங்களைக் கொண்டவனே. அன்யைகமாயாயனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னுடைய இச்சா சக்தி, சாமர்த்தியங்களுக்கு எவ்வித இணையும் இல்லை. உன்னுடைய இச்சா சக்தியானது உண்மையே. மித்யை இல்லை. அதனாலேயே, நீ ஸ்ருஷ்ட்யாதி அஷ்ட கர்த்ருத்வங்களை செய்கிறாய்.
***