Wednesday, February 1, 2023

#92 - 261-262-263 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

261. ஸ்ரீ ஸித்3தி4ஸாத4னாய நம:

ஞானவந்த 4க்த மாடு3 ஸ்தோத்ர ரூப ஸாத4

வன்னு ஒப்பி 4க்த ஸாத3னக்கெ தக்க 2லவன்ன

நீனு கொடு3வியோஸித்3தி4 ஸாத4நமோ நினகெ3

ஞானிக3ம்ய வாஸுதே3 மோக்ஷவெம்ப3 2லதா3 

ஞானத்துடன் பக்தர்கள் செய்யும் ஸ்தோத்திர ரூபமான ஸாதனைகளை ஏற்றுக் கொண்டு, அதற்கு தக்க பலன்களை நீ கொடுக்கிறாயே. உன்னை நான் வணங்குகிறேன். ஞானிகளால் அறியப்படுபவனே. வாசுதேவனே. மோட்சத்தை கொடுப்பவனே. 

262. ஸ்ரீ வ்ருஷாஹிணே நம:

வேதோ3க்த ஸ்தோத்ரக3ணதி3ம் ஸம்ருத்த நித்ய ஆனந்த3

உத்3ரேக நிதய் ப்ரவ்ருத்தவ்ருஷாஹிநமோ நினகெ3

வேத34ர்ம பரிபால 4ர்மப்ரவர்த்தக ஸ்வாமி

ஸதா3ஸுமங்க3 நின்ன 3ர்ஷானந்த3 ஏனெம்பெ3 

வேத மந்திரங்களால் அறியப்படுபவனே. நித்யானந்தனே. வ்ருஷாஹிணே உனக்கு என் நமஸ்காரங்கள். வேதங்களை, தர்மங்களை காப்பவனே. தர்மங்களை நியமித்தவனே. ஸ்வாமியே. எப்போதும் மங்களகரமாக இருப்பதான உன்னை தரிசனம் செய்யும் ஆனந்தத்தை நான் என்னவென்று சொல்வேன்?. 

263. ஸ்ரீ வ்ருஷபா4 நம:

ஸோமரஸ 4ரண காரணவ்ருஷப4னேநமோ

4ர்மமய நின்ன ஆராதி4ஸுவ 4க்தருக3

ஆமய ஸம்ஶய ஞான களெது3 ஹ்ருத3யாப்3ஜதி3

ஸோம ரவி தட்டித்தாரா அந்த3தி3 ப்ரகாஶிஸுவி 

அமிர்தம் வெளி வருவதற்கு காரணம் ஆனவனே. வ்ருஷபனே உனக்கு என் நமஸ்காரங்கள். தர்மமயனே. உன்னை ஆராதிக்கும் பக்தர்களின் மன நோய்களை, சந்தேகங்களை களைந்து, அவர்களின் இதயங்களில், சந்திரன், சூரியன், நட்சத்திரங்களைப் போல ஒளிர்கிறாய்.

***


No comments:

Post a Comment