Sunday, February 5, 2023

#96 - 273-274-275 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

273. ஸ்ரீ வாக்3மினே நம:

வேதா3தி3ரூப வாக்3விஶ்ரேஷ்டவாக்3மீநமோ நினகெ3

மது4ரதர 3ம்பீ4ரபா4ஷி நீனெந்து3 ப்ரக்2யாத

ஸ்ரீத3 நின்னய வேத3 உச்சாரணவே கா3யனவு

சேதனா சேதன ஸம்ரக்ஷணெ த்ராண நீ கா3யத்ரி 

வேதங்களால் போற்றப்படுபவனே. சிறந்த வாக்வலிமையை கொண்டவனே. வாக்மினே உனக்கு என் நமஸ்காரங்கள். இனிமையாக, கம்பீரமான பேசுபவன் என்று நீ புகழ் பெற்றிருக்கிறாய். ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. வேத உச்சாரணை என்பது உன்னுடைய புகழை பாடுவதே ஆகும். சேதன அசேதன என அனைவரையும் காப்பவனே. அனைவருக்கும் நீயே இருப்பிடமாக இருக்கிறாய். காயத்ரி மந்த்ர பிரதிபாத்யனே. 

274. ஸ்ரீ மஹேந்த்3ராய நம:

3ஹுவ்யாப்திவுள்ளவனு பூ4மிய கொடு3வவனு

மஹேந்த்3ரனேஸர்வதா3 நமோ எம்பெ3 நினகெ3 ஸ்ரீ

மஹேஶ்வர்யவந்த மஹோஜ்வல ஸ்வகாந்திமந்த

மஹீதா3 கொட்ட பரஶுராம பூ4வராஹ

அனைத்து இடங்களிலும் வ்யாப்தி உள்ளவன். அனைவருக்கும் அருள்பவனே. மஹேந்த்ரனே உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள். ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. மிகப்பெரிய ஐஶ்வர்யங்களைக் கொண்டவனே. மிகச் சிறந்த ஒளி பொருந்தியவனே. தானாகவே ஒளி கொண்டவனே. பரஶுராமனே. பூவராகனே. 

275. ஸ்ரீ வஸுதா3 நம:

4னவன்ன கொடு3வவவஸுத3னேநமோ எம்பெ3

4னமணி மொத3லாத3 ஸுரப யக்ஷபக3

இன்னு ஸுதா4மாதி3 4க்தரிகெ3 பாலிஸிதி3

நின்னன்ன கு3ருத்3வார 4ஜிபர்க்கெ3 4 ஸம்ருத்3தி3 

செல்வங்களைக் கொடுப்பவனே. வஸுதனே உனக்கு என் நமஸ்காரங்கள். தேவர்களுக்கும், அஸுரர்களுக்கும், மேலும் ஸுதாமா முதலான பக்தர்களுக்கு செல்வம் ஆகியவற்றை (அவரவர்களின் யோக்யதைக்கேற்ப) கொடுத்து அவர்களை அருளினாய். ஒரு தக்க குருவின் மூலம் உன்னை வணங்குபவர்களுக்கு அபாரமான செல்வம் (ஞானம்) கிடைக்கிறது.

***


No comments:

Post a Comment