Friday, February 3, 2023

#94 - 267-268-269 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

267. ஸ்ரீ வர்த்34னாய நம:

4க்தஸஜ்ஜன ஸுக2தா3 ஶத்ருஸுக2 நாஶக

வர்த்34நமோ எம்பெ3 நினகெ3 வர்த்த4யதி ஸ்வீயான்

ஸ்ரீவ நீ 4க்தரிகெ3 4னதா4ன்யாதி33ளன்னீவி

தத்3மத3 தூ3ரமாடி3 ஹெச்சிஸுவி ஞானத4னவ 

பக்தர்களுக்கு, ஸஜ்ஜனர்களுக்கு சுகத்தை அருள்பவனே. எதிரிகளின் சுகத்தினை அழிப்பவனே. வர்த்தனனே உனக்கு என் நமஸ்காரங்கள். நீ உன் பக்தர்களுக்கு தன, தான்யாதிகளை கொடுத்து அருள்கிறாய். அவர்களின் கர்வத்தினை விலக்கி, ஞானத்தினை அதிகரிக்கிறாய். 

268. ஸ்ரீ வர்த்த4மானாய நம:

ஸ்தோத்ர தன்னல்லி யோஜனமாள்பவர்த்த4மானநமோ

நித்யப்ரவ்ருத்தனு ஸம்பூர்ண கு3ணக3ணார்ணவனு

நித்யஸம்ருத்34 மஹா ஐஷ்வர்யபூர்ண ஸர்வேஶனு

நித்யோ நித்யானாம் சேதன சேதனானாம்எந்து3 ஸ்ருதி 

தனக்கு ஸ்தோத்திரம் செய்பவர்களை அருள்பவனே. வர்த்தமானனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து காலங்களிலும் இருப்பவனே. முழுமையாக குணங்கள் அனைத்தையும் கொண்டவனே. எப்போதும் திருப்தி உள்ளவனே. மஹா ஐஶ்வர்ய பூர்ணனே. ஸர்வேனே. 

269. ஸ்ரீ விவிக்தாய நம:

பாபாதி3 தோ3 வியோக3வுள்ளவனுவிவிக்தனெ

ஸ்ரீப நமோ ஸர்வதோ3ஷக3ந்தா4தி3தூ3ரனு ஷு3த்34

அபஹதபாப்மனு அபிபாஸ ஆனந்த3மய

ஸுபவித்ர கேவல ஏகாந்தப4க்த பரமேஷ்ட 

பாவம் முதலான தோஷங்கள் அற்றவனே. விவிக்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். லட்சுமிதேவியின் தலைவனே. எவ்வித தோஷங்களும் இல்லாதவனே. குற்றம், குறைகள் இல்லாதவனே. ஆனந்தமயனே. பவித்ரமானவனே. ஏகாந்த பக்தர்களுக்கு அருள்பவனே.

***


No comments:

Post a Comment