Monday, February 6, 2023

#97 - 276-277-278 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

276. ஸ்ரீ வஸவே நம:

த்3ரவ்யக்கெ ஸ்வாமி நீனுவஸுநமோ நமோ நினகெ3

ஸர்வவ்யாபிவாஸிதந்தெ ஜக3த்ரயம் வாஸுதே3

ஜீவாச்சாத3 பரமாச்சாத3 கர்தனாகி3ஹி

த்3ரவ்ய ஸர்வதொ3ளிருவி ஏக ஏவ பரமாத்ம 

த்ரவ்யங்களைக் கொடுப்பதில் நீயே ‘வஸுவாக இருக்கிறாய். உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து இடங்களிலும் வ்யாப்தனாக இருக்கிறாய். மூன்று உலகங்களிலும் இருப்பதால் உனக்கு வாஸுதேவ என்று பெயர். ஜீவாச்சாதன, பரமாச்சாதன என்னும் இரு உறைகளை விலக்குபவனாக நீ அனைவரிலும் இருக்கிறாய். நீ ஒருவனே பரமாத்மன். ஸர்வோத்தமன். 

277. ஸ்ரீ நைகரூபாய நம:

3ஹுஅஶ்வக3 மேலெ கொடு3வந்த2நைகரூப

அஹர்நிஶி நமோ எம்பெ3 ஶ்வோத்பாத3 ஶ்வேஷ

பி3ரம்ம ஶிவ வந்தி3 அனந்தரூப ஶ்ருதிக்ஞேய

3ஹுத3 ஸஹஸ்ரானந்த விஶ்வரூப ஏகாத்மா 

பற்பல குதிரைகளை (செல்வங்களை) அருள்பவனான ‘நைகரூபனே உனக்கு இரவும் பகலுமாக நமஸ்காரம் செய்கிறேன். செல்வங்களை உருவாக்குபவனே. செல்வங்களின் நாயகனே. பிரம்ம ருத்ரர்களால் வணங்கப்படுபவனே. அனந்த ரூபம் கொண்டவனே. ஶ்ருதிகளால் வணங்கப்படுபவனே. பத்து, ஆயிரம், விஶ்வரூப என பற்பல விதமான ரூபங்களைக் கொண்டவனே. ஏகாத்மனே. 

278. ஸ்ரீ ப்3ருஹத்3ரூபாய நம:

கு3ணவுள்ள ஸோமரஸ ப்ராபகனுப்3ருஹத்ரூப

நமோ சராசர ஸமஸ்தவாத3 பூ4 33

கு3ணதே3 காலவஸ்து வ்யாப்தனு பரிச்சேத3

நினகி3ல்ல நீ அணோரணீயான் மஹிதொமஹீயான் 

ஸோமரஸத்தினை வரவழைத்தவனே ‘ப்ருஹத்ரூபனே உனக்கு என் நமஸ்காரங்கள். சராசரமான அனைத்து ஜீவர்களிலும் - பூமியில், வானில் இருக்கும் அனைத்து ஜீவர்களிலும் - குண, தேஶ, காலங்களால் அவற்றில் நிறைந்திருப்பவனே. உனக்கு எவ்வித மாற்றங்களும் இல்லை. நீ அணுவை விட சிறியவனாகவும், பெரியதைவிட பெரியதாகவும் இருக்கிறாய்.

***

No comments:

Post a Comment