ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
303. ஸ்ரீ காமாய நம:
பி3ரம்மாண்ட3 ஸம்பூர்ணவாகி3 நிர்மிஸுவ ‘காம’ நமோ
பி3ரம்மதே3வரிந்த3 க3ம்யவாத்3த3ரிந்த3 காம நீனு
மஹாப3ல வாயுதே3வரிந்த3 க3ம்ய காம நீனு
வித்3யுத்பதி ‘வாயுனயேத்3பி3ரம்ம நிஜாபர:’
பிரம்மாண்டத்தை முழுமையாக நிர்மாணம் செய்தவனே. காமனே உனக்கு என் நமஸ்காரங்கள். பிரம்மதேவரால் வணங்கப்படுவதால், நீ காமன். மஹாபலம் பொருந்திய வாயுதேவரால் வணங்கப்படும் காமன் நீ.
304. ஸ்ரீ காமப்ரதா3ய நம:
வாஞ்சிதப்ரத3 நீனு ‘காமப்ரத3’ நமோ நினகெ3
காஞ்சனாதி3 க்ஷுத்3ரகாம்ய அர்ஹதானுஸார ஈவி
பராஞ்சி கா2னியுத் த்ருணத் ப4க்தரிகெ3 நீனே இஷ்ட
விரஞ்சி வாயுகெ3 நின்ன வின: பே3ரெ இச்செயில்ல
விரும்பிய இஷ்டார்த்தங்களை நிறைவேறுபவன் நீ. காமப்ரதனே உனக்கு என் நமஸ்காரங்கள். அவரவர்களின் தகுதி / யோக்யதைக்கேற்ப தங்கம் முதலான செல்வங்களை நீ அளிக்கிறாய். பக்தர்களுக்கு நீயே இஷ்டமானவன். பிரம்ம வாயுகளுக்கு உன்னைத் தவிர வேறு எதுவும் இஷ்டம் இல்லை.
305. ஸ்ரீ பிரபு4வே நம:
தே3வதெக3ளிகே3வெ ஸ்ரேஷ்டதே3வத்வ ஈவ ‘ப்ரபு4’ நமோ
தே3வ தே3வோத்தமனே ப்ரகர்ஷேணப4வதி ப்ரபு4:
ரவிஜாதி3 கபி விராதா4தி3க3ளிகெ3 தே3வத்வ
தே3வதாவதாரராத்3த3ரிம் இத்தி ஸ்ரீ ராமசந்த்ர
தேவதைகளுக்கு அவர்களின் சிறந்த தேவத்வத்தை கொடுக்கும் பிரபுவே உனக்கு என் நமஸ்காரங்கள். தேவ தேவோத்தமனே. சுக்ரீவன், விராதா ஆகியோருக்கு தேவத்வத்தையும், அவர்கள் தேவதா அவதாரர்கள் ஆனதாலும், இத்தகைய சிறப்பினை அருளினாய், ஹே ஸ்ரீராமசந்திரனே.
***
No comments:
Post a Comment