ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
300. ஸ்ரீ காமக்4னே நம:
அன்னாதி3க3ள கொட்டு ஒத3கு3வ ‘காமஹா’ நமோ
நீனு எந்தா2 மஹானெந்து3 ப4க்த ஜிக்ஞாஸ விஷய
க4ன ரோகா3தி3 கஷ்டக3ள பரிஹார மாடு3வி
ஞான ப்ரகாஶக்கெ விக்4ன அக்3ஞான களெவி வ்யாஸ
அன்னம் முதலான அனைத்து விருப்பங்களையும் கொடுத்து காப்பவனே. காமஹா. உனக்கு என் நமஸ்காரங்கள். நீ எத்தகைய மகான் என்பதை பக்தர்களை உன்னை ஆராய்ந்து அறிகிறார்கள் (முழுமையாக அல்ல). மிகப்பெரிய நோய்களை / கஷ்டங்களை நீ பரிகரிக்கிறாய். ஞானம் வருவதற்கு தடையாக உள்ளதான அஞ்ஞானத்தினை நீ களைகிறாய். வ்யாஸனே.
301. ஸ்ரீ காமக்ருதே நம:
ப4க்த ஸுக2 ஸம்ருத்3தி4காரகனு ‘காமக்ருத்’ நமோ
ப4க்தரிகெ3 போ4க3மோக்ஷாதி4க காய்து3 பூரெயிஸுவி
வித்3யுக்த காம கர்மகெ3யிஸி ஸ்வர்க்கா3தி3 ப2லவீவி
ஸாத்4ய ஸா4து காம்ய ஸாத4னகாரக யதா2யோக்3ய
பக்தர்களுக்கு அபாரமான சுகங்களை தருகிறாய். காமக்ருத் உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களுக்கு, போகங்கள், மோட்சங்களை கொடுத்து காக்கிறாய். அவர்களை செய்யும் விதிப்படியான கர்மங்களை ஏற்றுக் கொண்டு, ஸ்வர்க்கம் முதலான பலன்களைக் கொடுக்கிறாய்.
302. ஸ்ரீகாந்தாய நம:
யுத்3த4 மொத3லாத3வுக3ளலி ஸம்ரக்ஷணக்காகி3
நீ த3யதி3 அபேக்ஷா மாடி3ஸிகொம்பி3 ‘காந்த’ நமோ
தை3த்யர்க3ள ஸுக2 நாஶமாடு3வ நீனு காந்தனு
பது3மஜாதி3 ஸுக2ஸ்வரூப நிர்ணய நின்னிந்த3
போர் முதலானவற்றில் அனைவரையும் காப்பதற்காக, நீ கருணையுடன் விருப்பத்தை கொள்கிறாய். காந்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். தைத்யர்களின் சுகத்தினை நீ அழிக்கிறாய். ஸுக ஸ்வரூப நிர்ணயமானது உன்னாலாயே ஆகிறது.
***
No comments:
Post a Comment