Wednesday, February 22, 2023

#101 - 288-289-290 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

 288. ஸ்ரீ பா4ஸ்கரத்3யுதயே நம:

ப்ரகாஶக மந்த்ர த்3ருஷ்ட 4ரத்வாஜாத்3யர பூஜா

ஸ்வீகரிஸுவபா4ஸ்கரத்3யுதிநமோ எம்பெ3

அர்க்கன த்3யுதி நியாமகனு த்3யுதிதா3தா நீனு

அர்க்கவத் ஹ்ருத் திமிர சேதி3ஸி ஞானத்3யுதி ஈவி 

மந்த்ரங்களின் பலன்களைப் பெற்றவரான பரத்வாஜ முதலான ரிஷிகளின் பூஜையை ஏற்றுக் கொள்ளும் ‘பாஸ்கரத்யுதியே உனக்கு என் நமஸ்காரங்கள். சூரியனின் உள்ளே இருந்து கொண்டு ஒளியை கொடுப்பவன் நீயே. 

289. அம்ருதாம்ஶூத்34வாய நம:

ஸோம கோ33ளலித்3து3 ஸ்ரேஷ்டகாமன பூரயிஸுவி

அம்ருதாம்ஶூத்ப4வனேஸதா3 நமோ எம்பெ3 நினகெ3

அம்ருதாம்ஶு ஸ்ரீத4ன்வந்தரி நீ உத்க்ருஷ்ட ருத்3ராதி3

அமரரு இந்தி3ரியாபி4மானிக3ளுத்பாத3கனு 

சந்திரன், பசுக்களில் இருந்து கொண்டு, நம் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுகிறாய். ‘அம்ருதாம்ஶூத்பவனே உனக்கு என் நமஸ்காரங்கள். அமிர்தத்தை கொண்டு வந்த தன்வந்தரியே. ருத்ராதி தேவர்களின் இந்திரிய அபிமானிகளை நியமிப்பவன் நீயே. 

290. ஸ்ரீ பா4னவே நம:

ப்ரகா நியமன மாள்பபா4னுநமோ நினகெ3

ப்ரகா ஸ்வரூபனு நீனு ப்ரகாஶனகர்த்தா நீனே

அர்க்கன ப்ரகாஶக்கெ ஆதா4ரனாகி3 நீ இருவி

ஹாகு3 33ரக்3ரஹ நக்ஷத்ர ஸௌதா3மினிக3ள்கு3 

அனைவருக்கும் ஒளியை கொடுக்கும் ‘பானுவே, உனக்கு என் நமஸ்காரங்கள். ஒளிமயமானவனே. ஒளியைக் கொடுப்பவனே. சூரியனின் ஒளிக்கு நீயே ஆதாரகனாக இருக்கிறாய். இதைப் போலவே சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியோருக்கும் ஒளியைக் கொடுக்கிறாய்.

***


No comments:

Post a Comment