ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
294. ஸ்ரீ ஜக3தஸ்ஸேதவே நம:
மைத்ரிஸுக2 சர்ய ஸஜ்ஜனரிகெ3 ஜக3த்தினல்லி
உத்தம ரீதியலி ஒத3கு3வ ‘ஜக3த3ஸ்ஸேது:’
ஸதா3 நமோ எம்பெ3 ஶுப4க்கெ ஶுப4 பாபக்கெ பாப
ஒத3கி3ஸுவி ஜக3த்திகெ3 மித்ரரிகெ3 ஶுப4வா
இந்த உலகில் ஸஜ்ஜனர்களுக்கு உத்தமமான ரீதியில் அருளும்
‘ஜகதஸ்ஸேதுவே’ உனக்கு என்
நமஸ்காரங்கள். ஶுபத்திற்கு ஶுபத்தையும், பாவத்திற்கு பாவத்தையும் அருள்கிறாய். உன்னுடைய
பக்தர்களுக்கு ஶுபத்தையே கொடுக்கிறாய்.
295. ஸ்ரீ ஸத்யதர்ம பராக்ரமாய நம:
சித்ரஜக3த் ஸ்ருஷ்டி கர்த்ருத்வ லக்ஷணனு மத்து
ஶத்ரு நாஶாயுத4தா3ரி ‘ஸத்யத4ர்ம பராக்ரம’
ஸதா3 நமோ ஜக3தாஶ்ரயதா4ரக வஶீ
ஶத்ரு மத்து அத4ம நாஶக உருப3ல பூர்ண
பல விதமான ஜீவர்களைக் கொண்ட ஜகத்தினை படைத்த கர்த்ருத்வத்தைக்
கொண்டவன். எதிரிகளை அழிக்கவல்ல ஆயுதங்களை தரித்ஹ்டவனே. ஸத்யதர்ம பராக்ரமனே உனக்கு என்
நமஸ்காரங்கள். உலகத்தின் ஆதாரமானவனே. அதமர்களை அழிப்பவனே. பலபூர்ணனே.
***
296. ஸ்ரீ பூ4தப4வ்ய ப4வ நாதா2ய நம:
ப்ரஸித்3த4 வஜ்ராயுதா3தி3க3ள தீக்ஷ்ணகரிஸுவ
பே3ஸரிப ருணபரிஹாரக்கெ ப்ரார்த்த2னாயோக்3ய
ஸுஸமர்த்த2 ‘பூ4தப4வ்யப4வன்னாத2’ நமோ எம்பெ3
ஐஶ்வர்ய ஸ்வாமித்வ த்ரிகாலதி3 ஸித்3த4வு நின்னல்லி
புகழ்பெற்ற வஜ்ராயுதங்களை / வஜ்ராயுதங்களை ஏந்தியவர்களை
கூர்மையாக்குபவனே. நம்மை பின் தொடர்ந்து வரும் ருணங்களின் பரிகாரத்திற்காக பிரார்த்தனை
செய்வதற்கு யோக்யமானவனே. சொந்தமான சிறந்த சாமர்த்தியத்தைக் கொண்டவனே. பூதபவ்ய பவன்னாதனே
உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து செல்வங்களையும், உத்தமத்வத்தையும் எப்போதும் நீ உன்னில்
கொண்டிருக்கிறாய்.
No comments:
Post a Comment