ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
270. ஸ்ரீ ஶ்ருதிஸாக3ராய நம:
ஸ்தோத்ரக3ளிந்த3 ஸதா3 ஸம்பூர்ண ஸாக3ரவத் நீனு
‘ஶ்ருதிஸாக3ரனே’ நமோ ‘நாராயணபராவேதா3:
வேதே3 ராமாயணேசைவ புராணே பா4ரதேததா2
ஆதா3வந்தேச மத்4யேச விஷ்ணு: ஸர்வத்ர கீ3யதே’
ஸ்தோத்ரங்களால் வணங்கத்தக்கவனே. முழுமையாக ஸாகரம் போன்றவனே. ஶ்ருதிஸாகரனே உனக்கு என் நமஸ்காரங்கள். வேதங்கள், ராமாயணத்தில், புராணங்களில், பாரதத்தில் என அனைத்திலும் - துவக்கத்தில், நடுவில், முடிவில் என விஷ்ணு அனைத்து இடங்களிலும் இருக்கிறான் என்று ஸ்ருதியால் புகழப்படுபவனே.
271. ஸ்ரீ ஸுபு4ஜாய நம:
ப்ரக்ருதேபர: நீனு அப்ராக்ருதவாகி3ருவ
அகளங்க ஸம்பூர்ணானந்த3 விஶேஷானுப4வி
ஸுக2பு4க் ‘ஸுபு4ஜ’ நமோ ஸுப4க்த ஸாது4ஜனகெ
ஸுகா2னுப4வவீவி ஸுபு4ஜ ஸர்வதா4ரகனு
அனைத்து இடங்களிலும் வியாபித்திருப்பவன் நீயே. அப்ராக்ருதமான தேகத்தை கொண்டவனே. களங்கங்கள் அற்றவனே. முழுமையான ஆனந்தமயனே. ஸஜ்ஜனர்களுக்கு விஶேஷமான அனுபவங்களை (முக்தியை) கொடுப்பவனே. அனைத்தையும் தன் தேகத்தில் தரித்திருப்பவனே.
272. ஸ்ரீ து3ர்த4ராய நம:
ஶத்ருக3ளிந்த4ரிஸல்கெ அஷக்ய ‘து3ர்த4ர’ நமோ
உரத3லப்பிகொண்ட3 பூதனி த4ரிஸலாக3தெ3
ஹீரி நீ அவளன்ன கெளகெ3 பீ3ளிஸிதி3 ஹாகே3
பி3ருகா3ளி அஸுர நின்ன ப3லதாளதெ3 பி3த்3த3
எதிரிகளால் வெல்லப்பட முடியாதவனே. ‘துர்தரனே’ உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னை கட்டிக் கொண்ட பூதனி, உன்னை விலக்க முடியாதவாறு செய்து, அவளை கீழே தள்ளினாயே. அப்படியே சூறாவளியாக வந்த அசுரன், உன்னுடைய வலிமையை தாங்க முடியாமல் கீழே விழுந்தான்.
***
No comments:
Post a Comment