ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
264. ஸ்ரீ விஷ்ணவே நம:
ஸுஶ்ரேஷ்ட ப3லசேஷ்டாதி3கு3 புருஷார்த்த2க3ள்கு3 நீ
காரணனு ‘விஷ்ணு’ நமோ ஸ்ரீபதியே வாய்வந்தஸ்த2
உருப3ல சேஷ்டகத்வாதி3 ஸுபூர்ணரூப நீனு
ஸுர நராதி3க3ளிகெ3 ப3லாதி3ப்ரத3 தீ4ஜனக
மிகச் சிறந்ததான அனைத்து செயல்களுக்கும், புருஷார்த்தங்கள்
கிடைப்பதற்கும் நீயே காரணன் ஆகிறாய். விஷ்ணுவே உனக்கு நமஸ்காரங்கள். ஸ்ரீலட்சுமிதேவியின்
தலைவனே. வாயுதேவரின் அந்தர்யாமியானவனே. அபாரமான
செயல்களை செய்பவனே. பூர்ண ரூபனே. ஸுர, நரர்களுக்கு வலிமை முதலான அனைத்தையும் அருள்பவனே.
ஞானத்தை அருள்பவனே.
265. ஸ்ரீ வ்ருஷபர்வணே நம:
ஶ்ரேஷ்ட ஸ்தோத்ர ரூப ஸாத4னக3ளன்ன பூரெயிஸுவ
ஶ்ரேஷ்ட த4னப2லாதி3க3ளிந்த3 ‘வ்ருஷபர்வா’ நமோ
ப்3ரஷ்டதனவில்லதா3சாரவந்த க்ருதபுண்ய
ஶ்ரேஷ்டஸாத4ன ப2லவன்னீவ கருணாகரனு
சிறந்ததான ஸ்தோத்ர ரூப ஸாதனைகளை, சிறந்த தனம், வலிமை
ஆகியவற்றை அருளி நிறைவேற்றுபவனே. வ்ருஷபர்வனே உனக்கு என் நமஸ்காரங்கள். குறைவில்லாத
புண்ணியங்களை, சிறந்த ஸாதனைகளுக்கான பலன்களை அருள்பவனே. கருணைக்கடலே.
266. ஸ்ரீ வ்ருஷோத3ராய நம:
ஶ்ரேஷ்டாஸ்மதீ3யரிந்த3 ஶ்ரேஷ்ட பரகீயரக3ள
இஷ்ட பரஸ்பரதி3 ஸங்க3ம மாடி3ஸுவந்த2
‘வ்ருஷோத3ர’ நமோ புண்யோத3ர ப்ரிய க3ங்கா3பித
புஷ்பப4வ பூஜித த்ரிவிக்ரம ஜயஜயது
சிறந்த அறிஞர்களை சிறந்த கற்றரிந்தவர்களுடன் ஒருவருக்கொருவர்
ஸங்கத்தை செய்பவனான ‘வ்ருஷோதரனே’
உனக்கு என் நமஸ்காரங்கள். கங்கையின் பிதனே. புஷ்பங்களால் பூஜிக்கப்படுபவனே.
த்ரிவிக்ரமனே. உனக்கு மங்களம் உண்டாகட்டும்.
***
No comments:
Post a Comment