Tuesday, January 31, 2023

#91 - 258-259-260 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

258. ஸ்ரீ ஸித்3தா4ர்த்தா2 நம:

அனாதி3ஸித்3தி3 நித்யவேத3வாக்யக3ள் ஹேளுவந்தெ

ஹிந்தி3 முந்தி3 இந்தி3 கால ப்ராணிக3ளிகெ3

அனன்யாதீ4 ஸ்வாமியாகி3ஸித்3தா4ர்த்த2னெநமோ

பூர்ண ஆப்தகாம நீனு 4க்தேஷ்டஸித்3தி4 ப்ரதா3தா

அனாதியான நித்யமான வேத வக்கியங்கள் சொல்வதைப் போல, முக்காலங்களிலும் இருக்கும் ஜீவர்களுக்கு, அன்னம் ஆகியவற்றைக் கொடுக்கும் ஸ்வாமியாக இருப்பவனே. ஸித்தார்த்தனே. உனக்கு என் நமஸ்காரங்கள். நெருங்கிய நண்பன் நீயே. பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவன் நீயே. 

259. ஸ்ரீ ஸித்34ஸங்கல்பாய நம:

த்ரிகாலஸித்34 ஸக்ஞானி பு3த்3தி4 கௌஶல்யதி3ந்த3லி

ஏகசித்த ஸுவிசார நிஶ்சிதஸித்3தி4 ஸங்கல்ப

ஸ்ரீகரனே நமோ நின்னலி கொடு3 நிஶ்சித பு3த்3தி4

ஸ்ரீகஞ்சஜாதி3னுத ஸத்யகாம ஸத்ய ஸங்கல்ப 

கடந்த, நிகழ், இறந்த என மூன்று காலங்களிலும் இருப்பவனே. ஸர்வக்ஞனே. ஞானம், வலிமை ஆகியவற்றில் சிறந்தவனே. நல்லறிவைக் கொடுப்பவனே. யதார்த்த ஞானத்தை கொடுப்பவனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. உன்னை வணங்குகிறேன். உன்னில் எனக்கு நிச்சய ஞானத்தைக் கொடுப்பாயாக. லட்சுமிதேவி மற்றும் பிரம்மதேவர் ஆகியோரால் வணங்கப்படுபவனே. விரும்பியவற்றை செய்பவனே. நிச்சயித்தபடியே அனைத்தையும் செய்பவனே. 

260. ஸ்ரீ ஸித்3தி4தா3 நம:

ஸக்ஞானிப4க்தரு ரிஷிக3ளு ஸ்தோத்ரமாள்புத3லி

அஞ்சஸா அஹம்பூர்வ அஹம்பூர்வம்ரூப யுத்34

கஞ்ஜ நயனனெ நீனு மாடி3ஸுவிஸித்3தி43னே

அஞ்ஜலீப3த்34னாகி3 நமோ எம்பெ3 ஸித்3தி4ப்ரதா3 

ஞானி பக்தர்கள், ரிஷிகள் ஆகியோர் உன்னை வணங்கினால், தாமரைக் கண்ணனே நீயே அவர்களுக்கு அருள்கிறாய். இரு கரம் குவித்து உன்னை வணங்குகிறேன். விருப்பங்களை நிறைவேற்றுபவனே.

***


No comments:

Post a Comment