Friday, January 20, 2023

#81 - 215-226-227 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

225. ஸ்ரீ க்3ராமண்யே நம:

வித4வித4 அபீ4ஷ்டாவளி நியமேன கொடு3வி

ஸ்ரீத3க்3ராமணிநினகெ3 நமோ 3யமாடு3

ஸாத4 விவிதா4னுசரிபர யோக்3யதா அந்தெ

ஸாத4னக்கு தத்பலக்கு நீ நியாமக ஸுப2லி 

பற்பல அபீஷ்டங்களின் வரிசையை யோக்யதைக்கேற்ப கொடுப்பவனே. ஸ்ரீதேவியின் தலைவனே. ‘க்ராமணியே உனக்கு என் நமஸ்காரங்கள். கருணை புரிவாயாக. பற்பல ஸாதனைகளை செய்பவர்களின் யோக்யதைக்கேற்ப அந்த ஸாதனத்திற்கும், அதன் பலனுக்கும், நீ நியாமகனாக இருக்கிறாய். பலன்களைக் கொடுப்பவனே. 

226. ஸ்ரீ ஸ்ரீமத்யை நம:

விகாரவில்லத3 கொரதெயில்லத3 காந்திமான்

ஏகாத்மாஸ்ரீமான்நமோ ஜ்யோதிர்மய ஸ்ரீகாந்தா

அர்கேந்து3 தாரா மொத3லாத3 ஸர்வதேஜஸ்விக3

ப்ரகாஶக்கெ ப்ரகாஶப்ரத நீ ஸ்வதந்த்ர ஜ்யோதி 

எவ்வித மாற்றங்களும், குறைகளும் அற்றவனே. ஒளிமயமானவனே. ஸர்வோத்தமனே. ‘ஸ்ரீமான் உனக்கு என் நமஸ்காரங்கள். ஜ்யோதிர்மயமானவனே. ஸ்ரீதேவியின் தலைவனே. சூரிய, சந்த்ர, நட்சத்திரங்கள் என அனைத்து தேஜஸ்விகளின் ஒளிக்கு ஒளி கொடுப்பவனே. நீ ஸ்வதந்த்ரமாகவே ஜ்யோதியை வழங்குகிறாய். 

227. ஸ்ரீ ந்யாயாய நம:

மஹாபு3த்3தி4மான்ந்யாயநமோ ஸதா3 நமோ நினகெ3

மஹார்ஹ நீ தத்தத்யோக்3யப2 நியமன மாடி3

அர்ஹதெ அனுஸாரவீவ புண்யவந்தர்க3 புண்ய

லோக, பாப மாடி33வரிகெ3 பாப லோகவன்ன 

மிகச் சிறந்த புத்திவந்தனே. ‘நியாயனே உனக்கு என் நமஸ்காரங்கள். உத்தமமானவனே. அவரவர்களின் யோக்யதைக்கேற்ப அவர்களை வழிநடத்தி, தக்க பலன்களை கொடுப்பவனே. புண்ணியம் செய்தவர்களை புண்ணிய உலகிற்கும், பாவம் செய்தவர்களுக்கு பாவ லோகத்திற்கும் அனுப்புபவனே.

***


No comments:

Post a Comment