ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
228. ஸ்ரீ நேத்ரே நம:
பர்வதசே2த3 மாடு3வ ‘நேதா’ நமோ நினகெ3
நிர்வாஹ மாடு3வி ஸர்வவ ஸதா3 ஸர்வத்ர நீனு
ஸர்வப்ராணிக3ள ஸத்தா ப்ரமதி ப்ரவ்ருத்திக3ளு
ஸர்வேஶ நின்னாதீ4னவாகி3ஹவு நியம்யவாகி3
பர்வதங்களை உடைக்கும் வலிமை கொண்டவனே ‘நேத்ரனே’ உனக்கு என்
நமஸ்காரங்கள். அனைத்தையும் நீயே நிர்வகிக்கிறாய். எப்போதும், அனைத்து இடங்களிலும்,
நீயே, அனைத்து பிராணிகளுக்கு நல்புத்தியைக் கொடுக்கிறாய். அவர்களது நடவடிக்கைகளை செய்து,
செய்விக்கிறாய். அனைவருக்கும் ஈஶனே. அனைத்தும் உன் அதீனத்திலேயே
இருக்கின்றன.
229. ஸ்ரீ ஸமீரணாய நம:
ப்ரேரகனு ஸர்வரிகு3 ஸதா3 ‘ஸமீரண’ நமோ
ஈரயதி ப்ரேரயதி ‘ஸம்’ ஸம்யக் ஸமீரண நீ
வரவாயு தே3வரிகெ3 ஸுக2ப்ராபக ஸமீரண
ஸ்ரீ ரமாதே3விய ஸ்துதி ஶப்3த3தி3ந்த3 ஸேவ்ய
அனைவருக்கும் நீயே ப்ரேரகனாக இருக்கிறாய். ‘ஸமீரணனே’ உனக்கு என்
நமஸ்காரங்கள். ப்ரேரணை செய்பவனும், அதனை நடத்துபவனும் நீயே. வாயு தேவருக்கு சுகத்தைக்
கொடுப்பவன் நீயே. ஸ்ரீரமாதேவி, உன்னை எப்போதும் வணங்குகிறாள்.
230. ஸ்ரீ ஸஹஸ்ரமூர்த்4னே நம:
ப4க்தரிகெ3 சிரகால மஹாஹர்ஷ கொடு3வவ
ப4க்தேஷ்ட ‘ஸஹஸ்ரமூர்த்3தா4’ நமோ ஸ்ரீராமசந்த்3ர
அதி அஸங்க்2யேய மூர்த்3தா4 ‘ஸஹஸ்ரஶீர்ஷா புருஷ:’
எந்து3 புருஷ ஸூக்த ஹொக3ளுத்தெ பூர்ண ஞானாத்மா
பக்தர்களுக்கு நிரந்தரமான மகிழ்ச்சியைக் கொடுப்பவனே.
பக்தர்களின் இஷ்டதெய்வமே. ‘ஸஹஸ்ரமூர்த்தனே’ உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீராமசந்திரனே.
எண்ணிக்கையற்ற பல ரூபங்களைக் கொண்டவனே. ஸஹஸ்ரஶீர்ஷா
புருஷ: என்று உன்னையே புருஷ ஸூக்தம் புகழ்கிறது. பூர்ண ஞானத்தைக் கொண்டவனே.
***
No comments:
Post a Comment