Monday, January 16, 2023

#77 - 213-214-215 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

213. ஸ்ரீ ஸுராரிக்4னே நம:

ஸுராரி தை3த்யர ஹந்தாஸுராரிஹாநமோ நமோ

ஸுராரி ஹிரண்யகரன்ன ஸீள்தி3 4க்தபால

முர நரரன்ன அளிதி3 ஸுஜன ஸுரபாலா

ஜைரேய கௌரவர கொல்லிஸிதி3 பாண்ட3வப்ரிய 

தேவதைகளின் எதிரிகளை அழிப்பவனே. ஸுராரிஹனே. உனக்கு என் நமஸ்காரங்கள். தேவர்களின் எதிரியான ஹிரண்யாக்‌ஷனை கொன்றவனே. பக்தர்களை காப்பவனே. முர-அசுரன், நரகாசுரன் ஆகியோரைக் கொண்றவனே. ஸஜ்ஜனர்களை, தேவர்களை காப்பவனே. பாண்டவர்களின் நண்பனே. கௌரவர்களைக் கொல்ல வைத்தவனே. 

214. ஸ்ரீ கு3ரவே நம:

அம்ருதாதி3 த்3ரவ்யக3  க்3ருஹீதாகு3ருவேநமோ

அம்ருத ஸுரரிகு3ணிஸிதி3 அஸுரரிகெ3 இல்ல

ப்3ரம்மாதி33ளிகெ3 உபதே3ஶிஸி3தி யதா2யோக்3

நீ மூல கு3ரு ஸ்ரீமன் நாராயண ஹம்ஸ ஹயாஸ்ய 

அம்ருதம் முதலான அனைத்து பொருட்களையும் (அதன் ஸாரத்தை) பெற்றுக் கொள்பவனே. ‘குருவே உனக்கு என் நமஸ்காரங்கள். அந்த அமிர்தத்தை தேவர்களுக்கு பிரித்துக் கொடுத்தாய். அசுரர்களுக்கு கொடுக்கவில்லை. அவரவர்களின் யோக்யதைக்கேற்ப பிரம்மாதிகளுக்கு உபதேசம் செய்தாய். நீயே மூல குரு. ஸ்ரீமன் நாராயணனே. ஹம்ஸனே. ஹயக்ரீவனே. 

215. ஸ்ரீ கு3ருதமாய நம:

உத்க்ருஷ்ட ரீதியலி ஏக விஸ்தாரகு3ருதம

உத்தமாங்க33 பா3கி3 ஶரணாகி3 நா நமோ எம்பெ3

இந்த்3 கு3ரு ருத்3 ருத்ரகு3ரு பத்3மஜ ஸமீர

பத்3மஜ கு3ரு ஸ்ரீபதி கு3ருதமனு அகு3ரு 

மிகச் சிறந்ததான வகையில் ஸர்வோத்தமனாக இருப்பவனே ‘குருதமனே அனைத்து அனைத்து அங்கங்களாலும் உன்னை சரணடைந்து வணங்குகிறேன். இந்திரனின் குரு ருத்ரர்; ருத்ரரின் குரு பிரம்ம வாயுகள்; அவர்களின் குரு ஸ்ரீபதி, நீயே. குருதமனே. குரு இல்லாதவனே.

***

No comments:

Post a Comment