Sunday, January 29, 2023

#89 - 252-253-254 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

252. ஸ்ரீ நராய நம:

பூ4மிகெ3 ஜலக3 ஒத3கி3ஸுவநரநமோ

ஆமயதூ3ரனு அவிகார ஆனந்த3ரூப

ரமா மத்து பி3ரம்ம ஶிவேந்த்3ராத்3யமர 4க்தவந்த்3

ஸ்வாமியு அப்ராக்ருதனு ஶேஷவாயுவந்தர்யாமி 

பூமிக்கு தண்ணீரை கொடுப்பவனே. நரனே உனக்கு என் நமஸ்காரங்கள். தோஷங்கள் அற்றவனே. விகாரம் அற்றவனே. ஆனந்தமயனே. ரமா, பிரம்மா, ருத்ர, தேவர்கள் மற்றும் பக்தர்களால் வணங்கப்படுபவனே. ஸ்வாமியே. அப்ராக்ருதனே. ஶேஷ, வாயுகளின் அந்தர்யாமியாக இருப்பவனே. 

253. ஸ்ரீ அஸங்க்யேயாய நம:

4க்தரிகெ3 அனந்த ஸுக2தா3தாஅஸங்க்யேயனே

ஆத3ரதி3 நமோ எம்பெ3 அக3ணித கு3ணபூர்ண

உத்தம ஸுபூர்ண ஞானானந்த3 3லாதி33ளு

உத்தம ஸுபூர்ண ஸுக2லீலா க்ரியா அஸங்க்யேய 

பக்தர்களுக்கு நிரந்தர சுகமான முக்தியை கொடுப்பவனே. எண்ணிக்கையற்ற ரூபங்களைக் கொண்டவனே. உனக்கு பக்தியுடன் நான் வணங்குகிறேன். எண்ணிக்கையற்ற குணங்களை பூர்ணமாக கொண்டவனே. உத்தமமான ஞானானந்த வலிமைகளை முழுமையாக கொண்டவனே. அனைத்தையும் உன் லீலைகளால் செய்பவனே. 

254. ஸ்ரீ அப்ரமேயாத்மனே நம:

ரிபுக3 கையிந்த3 ஸோது ஹோக33 புத்ரதா3

அப்ரமேயாத்மாநமோ அபரிமித பரிமாண

அபரிமித வ்யாபகனு தே3ஶகாலகு3

அபரிச்சின்ன தன்னிச்சா இல்லதெ3 காணிஸிகொள்ள 

எதிரிகளால் தோற்கடிக்கப்பட முடியாதவனே. செல்வங்களை கொடுப்பவனே. அப்ரமேயாத்மனே உனக்கு என் நமஸ்காரங்கள். அபாரமான குணங்களைக் கொண்டவனே. அபாரமான வ்யாபகனே. தேஶ, கால, குணங்களால் கட்டுப்படாதவனே. உன் இச்சை இல்லாமல் காட்டிக் கொள்ளாதவனே.

***

No comments:

Post a Comment